நியூசிலாந்து தொடரின் ஓய்வினை நான் இப்படியே செலவழிக்க விரும்புகிறேன் – விராட் கோலி

virat-kohli

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் அணி இந்த தொடரில் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ind vs nz trophy

இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை 28ஆம் தேதி நடைபெற உள்ளது. நாளைய போட்டியில் பங்கேற்ற பின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்த தொடரில் இருந்து ஓய்வு காரணமாக விலகுகிறார். இந்த ஓய்வு நேரத்தை எவ்வாறு கழிக்க போகிறார் என்ற தகவலை இன்று அவர் தெரிவித்தார்.

அதில் அவர் கூறியதாவது : இந்த ஓய்வு நேரத்தினை எனது மனைவியுடன் கழிக்க விரும்புறேன். இந்தியாவில் நாங்கள் இருவரும் மக்கள் அறியப்படும் ஒரு முகமாக இருப்பதால் நாங்கள் இந்தியாவில் வெளியே செல்வது என்பது சற்று சிரமம். ஆனால், நேப்பியரில் நாங்கள் ஒரு முழுநிலவு அன்று இரவு நேரத்தை ஒரு பென்ச்சில் அமர்ந்து பேசிக்கொண்டே கழித்தோம்.

koli dhawan

அதைப்போன்று எனது ஓய்வு நேரத்தினை என் மனைவியுடன் கழிக்க விரும்புகிறேன். மேலும், உலகக்கோப்பை தொடர் மிகப்பெரிய தொடராகும் . அதற்குமுன் கிடைத்திருக்கும் இந்த ஓய்வு எனக்கு பயனளிக்கும் என்று கோலி தெரிவித்தார். மீதம் இருக்கும் போட்டிகளுக்கு இந்திய அணியின் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே :

முதல் இரு போட்டிகளில் நியூசிலாந்து அணியின் தோல்விக்கு காரணம் இதுதான் – நியூஸி பயிற்சியாளர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்