தினமும் தலைக்கு குளிக்க முடியாதவர்கள் இதை செய்தால், தினம் தினம் தலைக்கு குளித்த பலனை பெறலாம். தினசரி கண்ணுக்குத் தெரியாத தோஷங்கள் நம்மை அண்டாது.

women
- Advertisement -

தினம் தினம் காலையில் நாம் எழுந்தவுடன் குளித்து விட வேண்டும். உடம்பில் இருக்கும் அழுக்கை நீக்குவதற்கு மட்டும்தானா இந்த குளியல். கிடையாது, உடலில் இருக்கக்கூடிய உடல் சூட்டை தணிப்பதற்காக, ஆரோக்கிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஒரு விஷயம்தான் இந்த குளியல். இதையும் தாண்டி ஆன்மிக ரீதியாகப் பார்த்தால் தினம் தினம் தலைக்கு குளிக்க வேண்டும் என்று எதற்காக சொல்லப்பட்டுள்ளது. காரணம் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ தோஷங்கள் நம்மை தாக்குவதற்குவாய்ப்பு உள்ளது.

women1

தினம் தினம் தலைக்கு குளிப்பதன் மூலம் அந்த தோஷம் நம்மை விட்டு விலகிவிடும். இதோடு மட்டுமல்லாமல் நம்முடைய  பங்காளிகள் என்று சொல்லப்படும் உறவினர்களில் யாரோ ஒருவர் இந்த உலகத்தில் இருந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். அந்த தோஷம் நீங்கவும் தினம் தினம் தலைக்கு குளிப்பது நன்மை தரக் கூடிய ஒரு விஷயம்.

- Advertisement -

இப்படி நாம் தலைக்கு குளிப்பதற்கு பல காரணங்களை நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிவைத்து இருந்தாலும், தினமும் எல்லோராலும் எல்லா சூழ்நிலையிலும் தலைக்கு குளிப்பது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. குறிப்பாக எல்லா பெண்களாலும் தினம்தோறும் தலைக்கு குளிக்க முடியாது. இப்படி இருக்க எந்த தோஷமும் நம்மை தாக்காமல் இருக்க வேண்டுமென்றால் எப்படி குளிக்கலாம்.

bathing

நீங்கள் சுத்தபத்தமாக இருக்கும் சமயத்தில் தினமும் தலை ஸ்நானம் செய்துவிட்டு தான், உங்கள் வீட்டு பூஜை அறையில் இறைவழிபாடு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. தினமும் நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை போட்டு அந்த தண்ணீரில் உங்களுடைய ஆள்காட்டி விரலால் ஓம் என்ற எழுத்தை எழுதி விட்டு அந்த தண்ணீரில் மேலுக்கு மட்டும், அதாவது தலைக்கு குளிக்காமல் உடலுக்கு மட்டும் குளித்துக்கொண்டு இறுதியாக அந்த தண்ணீரில் இருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து தலைக்கு தெளித்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான். இதை செய்தாலே அன்றாட வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்படக்கூடிய தோஷங்கள் உங்களை விட்டு விலகி விடும். (நீங்கள் சுத்தபத்தமாக இருக்கும் சமயத்தில் மட்டும் தான் இதை பின்பற்ற வேண்டும்.)

- Advertisement -

இது தவிர நீங்கள் அசைவம் சாப்பிட்டு இருக்கிறீர்கள். கணவன் மனைவி ஒன்றாக இருந்து இருக்கிறீர்கள். இறப்பு வீட்டிற்கு சென்று வந்து இருக்கிறீர்கள். ஒரு பெண் பூப்படைந்து விட்டாள், அந்த வீட்டுக்கு சென்று வந்திருக்கிறீர்கள் என்றால், இந்த தோஷத்தை நீக்குவதற்கு கட்டாயம் ஒருவர் தலை ஸ்நானம் செய்தே ஆக வேண்டும். அதற்குப் பின்புதான் இறைவழிபாடு செய்ய வேண்டும். அதில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது.

bathing

இதே போல் உங்களுக்கு தினம் தினம் தலைக்கு குளிக்க கூடிய பழக்கம் இருந்தால் வெறும் தலையில் தினம்தோறும் தண்ணீரை மட்டும் எடுத்து ஊற்றக்கூடாது. உங்களுடைய உச்சந்தலையில் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெயோ அல்லது நல்லெண்ணெய் ஏதாவது ஒரு எண்ணெயை தேய்த்து விட்டு அதன் பின்பு தான் தலைக்கு குளித்து கொள்ள வேண்டும்.

fenugreek-oil

காரணம் உள்ளது. இறந்தவர்களுடைய வீட்டிற்கு சென்று வந்தால் மட்டுமே வெறும் தலையில் ஷாம்பூ சீயக்காய் எதுவுமே போடாமல் தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும் என்கிறது சாஸ்திரம். இனி தினம்தோறும் தலைக்கு குளிப்பதாக இருந்தால் உச்சந்தலையில் ஒரு சொட்டு ஏதாவது எண்ணெய் அல்லது தயிரை ஒரு சொட்டு வைத்துக் கொண்டு தலைக்குக் குளித்து கொள்ளுங்கள். அமாவாசை தினம், உங்களுடைய பிறந்த நாள் என்று வரும் போது தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -