செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இந்த தீபத்தை ஏற்றி வர தோஷங்கள் அகன்று துன்பங்கள் தீரும்

valamburisangu-
- Advertisement -

வாழ்க்கை என்றால் அதில் ஏற்றத்தாழ்வுகள் இருக்க தான் செய்யும். இன்று ஏழையாக இருப்பவர்கள் திடீரென பணக்காரர்களாக மாறலாம். இன்று பணம் படைத்தவர்கள் சூழ்நிலை மாற்றத்தால் ஏழைகளாகவும் மாறலாம். அவ்வாறு ஒருவரின் வாழ்க்கை தரத்தை நிர்ணயிப்பது பணம் தான். ஒவ்வொரு மனிதனும் நினைத்துக் கொண்டிருப்பது என்னவென்றால் பணம் வைத்திருப்பவர்கள் நிம்மதியாக இருக்கின்றனர், பணம் இல்லாத நாம் மட்டும் தான் துன்பப்படுகிறோம் என்று. ஆனால் இது உண்மை அல்ல. பணம் இருப்பவர்களிடம் போதுமான அளவு மகிழ்ச்சி இருப்பதில்லை. நல்ல குடும்பம் இல்லை, அவர்களுக்கு எப்பொழுதும் மன நிம்மதி என்பதே கிடைப்பதில்லை. ஆனால் ஏழையாக இருக்கும் ஒருவரிடம் நல்ல, அன்பான, பாசமான குடும்பம் இருக்கும். ஆனால் அவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதற்கு பணம் இருக்காது. எனவே அவர்களை எப்போதும் துன்பம் சூழ்ந்து கொண்டிருக்கும். இவ்வாறான துன்பங்களை அகற்றுவதற்காக பூஜை அறையில் ஏற்ற வேண்டிய சங்கு தீபத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

happy-family

கடலில் இருந்து எடுக்கப்படும் அனைத்து விதமான பொருட்களும் மகாலட்சுமியின் அம்சமாகவே பார்க்கப் படுகிறது. அவ்வாறு கடலில் கிடைக்கின்ற ஒரு பொருள் தான் இந்த வலம்புரி சங்கு. இதன் புனிதத்தன்மை அது இருக்கின்ற இடம் அத்தனையையும் புனிதமா மாற்றுகிறது. இந்த சங்கு இருக்கின்ற இடத்தில் மகாலட்சுமியே இருப்பதாக உணர்ந்து கொள்ளலாம்.

- Advertisement -

பலரும் அவர்களது இல்லங்களில் வலம்புரி சங்கை பூஜை அறையில் வைத்திருப்பர். ஆனால் சங்கினை எப்பொழுதும் வெறுமையாக வைத்திருக்கக்கூடாது. அதில் சிறிதளவு சில்லரை காசுகளையோ, அரிசியையோ, நெல்லையோ அல்லது முத்து அல்லது மாணிக்கங்களையோ இவ்வாறு அவரவர் வசதிக்கேற்ப இருக்கின்ற பொருட்களை சங்கு முழுவதும் நிரப்பி வைக்க வேண்டும்.

sea

அடுத்ததாக இந்த வலம்புரி சங்கில் தண்ணீர் ஊற்றி, அதில் சிறிதளவு துளசி, சிறிதளவு பச்சை கற்பூரம் சேர்த்து பூஜை செய்துவிட்டு இந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளித்து வர பிரம்மஹத்தி தோஷம் உட்பட அனைத்து தோஷங்களும் நிவர்த்தியாகும். அதுமட்டுமல்லாமல் இந்த வலம்புரி சங்கில் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் நம்மை சூழ்ந்திருக்கும் துன்பங்கள் அகன்று வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கிறது.

- Advertisement -

அதற்காக வலம்புரி சங்கை சுத்தமாக கழுவிக் கொண்டு, அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைக்க வேண்டும். பின்னர் ஒரு வெள்ளி அல்லது காப்பர் தட்டில் பச்சரிசியை சிறிதளவு சேர்த்து, பரப்பி வைத்துக் கொண்டு, அதன் மீது இந்த வலம்புரி சங்கை வைக்க வேண்டும். பின்னர் அதில் நல்லெண்ணெய் மற்றும் நெய் இவை இரண்டையும் சேர்த்து ஊற்ற வேண்டும். பிறகு திரி போட்டுத் தீபம் ஏற்ற வேண்டும்.

sangu

இந்த தீபச்சுடர் வடக்கு திசை நோக்கியும், வலம்புரி சங்கின் மறுபுறம் தெற்கு திசை நோக்கியும் இருக்குமாறு வைக்க வேண்டும். இவ்வாறு தீபமேற்றி உங்கள் குலதெய்வம் மற்றும் மகாலக்ஷ்மியை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். எந்தன் குடும்பத்தில் இருக்கும் துன்பங்கள் தீர்ந்து, தோஷங்கள் அகன்று, எனது குடும்பத்தினர் இனிமையாக வாழ பொன், பொருள் சேர வேண்டும். இவ்வாறு வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -