தெய்வ குத்தம் நீங்க, வீட்டில் சுப காரியத்தடை விலக செய்ய வேண்டிய துர்க்கை வழிபாடு.

durgai1
- Advertisement -

சில வீடுகளில் தெய்வ குத்தம் இருக்கும். அது என்ன தெய்வ குத்தம் என்று தெரியாது. ஆனால் வீட்டில் இருக்கும் ஆண் பிள்ளைக்கோ, பெண் பிள்ளைக்கோ திருமணம் கைகூடி வராது. ஜாதக கட்டத்திலும் எந்த தோஷமும் இருக்காது. ஆனால் எந்த நல்ல வரணையும் அமைக்க முடியாத சூழ்நிலை இருக்கும்.

சில பேருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமண தேதி எல்லாம் முடிவாகி கூட அந்த திருமணம் தடைப்பட்டு இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலை உங்களுடைய வீட்டில் இருந்தால் பின் சொல்லக் கூடிய துர்க்கை வழிபாட்டை மேற்கொள்ளலாம். தெய்வகுத்தம் விலகி, சுபகாரிய தடை விலகி, சீக்கிரம் உங்களுடைய வீட்டில் கெட்டிமேல சத்தம் கேட்கும்.

- Advertisement -

சுபகாரிய தடை விலக துர்க்கை அம்மன் வழிபாடு

முதல் பரிகாரம். வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று காலை 10:30 மணியிலிருந்து 12.00 மணி வரை ராகு கால நேரம் வரும் அல்லவா. அந்த நேரத்தில் துர்க்கை அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும். துர்க்கை அம்மனுக்கு இரண்டு மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி தாமரை திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வர, தெய்வக்கொத்தம் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து இதை 11 வெள்ளிக்கிழமை செய்யவும்.

இரண்டாவது பரிகாரம். இந்த பரிகாரத்தை ஹஸ்தம் நட்சத்திரம் வரும் நாளில் தான் கட்டாயம் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்தால் போதும். துர்க்கைக்கு உங்கள் கைகளால் 27 எலுமிச்ச பழத்தில் மாலையை கட்டிக் கொள்ள வேண்டும்‌. துர்க்கை அம்மனுக்கு சிவப்பு நிறத்தில் பட்டு வஸ்திரம் வாங்கிக் கொள்ளுங்கள். துர்க்கை அம்மனுக்கு சாத்துவதற்காக.

- Advertisement -

பிறகு சிவப்பு நிற தாமரை. பிங்க் நிறத்தில் தாமரை இருக்கும் அல்லவா. அந்த தாமரை பூ வாங்கிக் கொள்ளவும். சிவப்பு நிற குங்குமமும் வாங்கிக் கொள்ளுங்கள். இந்த பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு, அஸ்தம் நட்சத்திரம் வரக்கூடிய நாளில் துர்க்கை அம்மன் சன்னிதானம் இருக்கும் கோவிலுக்கு செல்ல வேண்டும். முன்கூட்டியே சொல்லி விடுங்கள்.

அங்கு இருக்கும் அர்ச்சகரிடம். இந்த வஸ்திரத்தை துர்க்கை அம்மனுக்கு சாத்த வேண்டும் என்று. அவர் அபிஷேகம் செய்து முடித்துவிட்டு நீங்கள் கொடுத்த சிவப்பு நிற துணியை துர்க்கை அம்மனுக்கு சாத்திவிடுவார். பிறகு நீங்கள் கையில் வைத்திருக்கும் எலுமிச்சம் பழ மாலையை துர்க்கை அம்மனுக்கு போட்டு விட வேண்டும்.

- Advertisement -

துர்க்கை அம்மனின் பாதங்களில் தாமரையை வைத்துவிட்டு நீங்கள் எடுத்துச் சென்ற சிவப்பு நிற குங்குமத்தில் துர்க்கை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து கொள்ளவும். இந்த அர்ச்சனையை அர்ச்சகரை செய்து கொடுத்து விடுவார். அர்ச்சனை செய்யும்போது மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் போது திருமணம் ஆகாத பெண்ணோ ஆணோ கட்டாயம் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

இந்த பூஜையில் துர்க்கை அம்மனை மனதார வேண்டி பிரார்த்தனை செய்து கொள்ளவும்.  இந்த வழிபாடு முடிந்த பின்பு துர்க்கை அம்மனுக்கு அர்ச்சனை செய்த குங்குமத்தை எடுத்து வீட்டுக்கு வரவும். அதை ஒரு டப்பாவில் போட்டு சேகரித்து சுத்த பத்தமாக பூஜை அறையில் வைக்கவும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர அரச மர வழிபாடு

தினமும் திருமணம் ஆகாதவர்கள் இந்த குங்குமத்தை நெற்றியில் இட்டு வர, சீக்கிரம் திருமண தடை விலகும். சீக்கிரம் கெட்டி மேல சத்தம் கேட்கும் என்பது நம்பிக்கை. மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -