பூஜை அறையில் கற்பூரம் ஏற்றி ஏற்றி கரிப்பிடித்து இருக்கும் இந்த தூபக்காலை மிக மிக எளிமையாக 2 நிமிடத்தில் கை வலிக்காமல் சுத்தம் செய்ய சூப்பர் ஐடியா.

dhupakkal1
- Advertisement -

பூஜையில் அறையில் இருக்கக்கூடிய விளக்கு, மற்ற பூஜை பாத்திரங்களை எல்லாம் கூட சுலபமாக சுத்தம் செய்து விடலாம். கற்பூரம் ஏற்றக்கூடிய தூபக்கால், சாம்பிராணி தூபம் போடக்கூடிய தூபக்கால், என்று நெருப்பு வைக்கக்கூடிய இந்த பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல. அதில் ஒட்டிப் பிடித்திருக்கும் அந்த கருப்பு நிற கரியை நம்மால் அவ்வளவு எளிதில் சுத்தம் செய்ய முடியாது. ஆனால் அதற்கு ஒரு எளிய குறிப்பு உள்ளது. அந்த பயனுள்ள வீட்டுக் குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

முதலில் ஒரு மெழுகுவத்தி அல்லது அகல் விளக்கு ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதில் கரி பிடித்திருக்கும் இந்த தூபக்காலை இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் காண்பிக்க வேண்டும். நெருப்பில் இந்த தூபக்கால் நன்றாக சூடாகும் போது, அந்த கரி அனைத்தும் சூட்டில் சுலபமாக நீங்கிவிடும். நன்றாக சூடான இந்த தூபக் காலை ஒரு தடிமனான நார் வைத்து தேய்க்க வேண்டும். சூடாக இருக்கும் போதே தேய்த்தால் கருப்பு நிறம் அனைத்தும் சுலபமாக நீங்கிவிடும். கையை வைத்து சுட்டுக் கொள்ள வேண்டாம். தடிமனான தேங்காய் நார் பயன்படுத்தி தேய்த்தாலே அதில் இருக்கும் கருப்பு நிற கரி அனைத்தும் சுத்தமாக நீங்கிவிடும்.

- Advertisement -

கொஞ்சம் எலுமிச்சை பழச்சாறு, கொஞ்சமா பாத்திரம் தேய்க்கும் லிக்விட், கொஞ்சமாக சபீனா பவுடர் அல்லது சாம்பல், இந்த பொருட்களை எல்லாம் கலந்து அதைத் தொட்டு தேய்த்தால் இப்படிப்பட்ட அதிகமாக கருப்பாக இருக்கக்கூடிய பூஜை பாத்திரங்களை சுலபத்தில் கை வலிக்காமல் நம்மால் சுத்தம் செய்து விட முடியும்.

முதன்முறை தேய்க்கும் போது உங்களுக்கு முழுமையாக அந்த கருப்பு நிறம் நீங்கவில்லை என்றால், தேய்த்த தூபக் காலை கழுவி விட்டு, நன்றாக துணியைக் கொண்டு துடைத்து விட்டு, மீண்டும் இப்படி நெருப்பில் காட்டுங்கள். நன்றாக அந்த இடுக்குகளில் ஒட்டி இருக்கக்கூடிய இடத்தை கவனம் செலுத்தி நெருப்பில் காட்டும்போது, அந்த தூபக்கால் ஓரங்களில் இருக்கக்கூடிய கருப்பு நிறம் கூட சுத்தமாக வந்துவிடும். ஒரு கத்தியை எடுத்து அப்படியே ஓரங்களை கீறி விட்டால் இடுக்குகளில் ஒரு துளி கூட கருப்பு இல்லாமல், சுலபமாக சுத்தம் செய்து விடலாம்.

- Advertisement -

இதே போலத்தான் நிறைய பேர் வீட்டில் சாம்பிராணி தூபம் போடக்கூடிய பெரிய தூபக்காலை கரி பிடித்து அப்படியே வைத்திருப்பார்கள். அதை அவ்வளவு எளிதில் சுத்தம் செய்யவே முடியாது. மேல் சொன்ன முறையை பின்பற்றி அந்த பெரிய சாம்பிராணி தூபம் போடும் தூபக்கால் இருந்தாலும் கூட, அதை நாம் சுலபமாக சுத்தம் செய்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: உங்க வீட்டில் மீன் தொட்டி இருக்கிறதா? அந்த தண்ணீரை என்ன செய்வீர்கள்? இப்படி மட்டும் செஞ்சு பாருங்க நீங்களே ஆச்சரியப்படுவீங்க!

சில பேருக்கு ஒரு சந்தேகம் வரும். இதை நாம் கேஸ் ஸ்டவ்விலேயே சூடுபடுத்திக் கொள்ளலாமே என்று. கேஸ் ஸ்டவ்வில் சூடு செய்தால் சீக்கிரமாக தூபக்கால் கைபிடிக்கும் இடம் வரை சூடு ஏறிவிடும். மெழுகுவத்தி அகல் விளக்கு என்றால் சின்னதாக தீ எரியும். நம்முடைய கை அவ்வளவு எளிதில் சூடு பிடிக்காது. அதற்காகத்தான் இந்த ஐடியா. மேலே சொன்ன குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். உங்களுடைய வீட்டு பூஜை அறையில் இருக்கும் தூபக்கால் கூட எப்போதும் புதுசு போலவே இருக்கும்.

- Advertisement -