குரு பலன் இருந்தால் மட்டும் தான் திருமணம் கைகூடுமா?

jadhagam

* குரு, வருடத்துக்கு ஒரு முறை ராசி விட்டு ராசி இடம் பெயருவார். கோசாரப்படி லக்னத்தை குரு பார்த்தால் மட்டும், திருமணம் நடைபெற்று விடுமா? என்றால் உறுதியாக அதைச் சொல்ல முடியாது.

navagaraga

* கோசாரத்தில் இருக்கும் குரு, திருமணம் கைகூடி வர 20 சதவிகிதப் பலன்களையே தருவார். இதனால் சிலர் வியாழக்கிழமைதோறும் தக்ஷிணாமூர்த்திக்கு மாலையிட்டு வணங்கியும், விளக்கு வழிபாடு என பரிகாரங்கள பல செய்தும் திருமணம் நிறைவேறவில்லையே என வருந்துபவர்களும் உண்டு.

* தசாபுக்தி அனுகூலம், கிரகங்கள் இருக்கும் இடம், கிரகப் பார்வை ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும். இதனால் ஒருவரது ஜாதகத்தையும் ஆராய்ந்து பார்த்துத்தான் சொல்லவேண்டும்.

astro wheel* நமது ஜாதகப் பலன்கள் ஒருவரது ஜாதகத்தில் முக்கியமானவைகளாக தசா புத்தி பலன்களைத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் கோசாரப்படி பார்க்கும்போது லக்னத்தை உங்கள் ராசியாக்கி, அதற்கு ராசிபலன் பாருங்கள். எனவே, திருமணம் நடைபெறுவதற்கு உங்கள் தசா புக்தி உதவினால்தான் அது நடைபெறும்.

astrology wheel

* நாம் பார்க்கும் வரன்களுக்கு குரு பார்வை இருந்தாலும் போதும். அதாவது மாப்பிள்ளை அல்லது பெண் இருவரில் ஒருவருக்கு அனுகூலமான தசை நடந்தாலோ, குரு பார்வை இருந்தலோ, திருமணம் நடந்து விடும். கோட்சாரத்தைப் பார்ப்பதை விட தசாபுக்தி பலன்களைப் பார்ப்பதே நல்லது.