- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்காரசாரமான பச்சை மிளகாய் சட்னியை ஒரு முறை இப்படி அரைச்சு பாருங்க. இட்லி தோசைக்கு தொட்டு...

காரசாரமான பச்சை மிளகாய் சட்னியை ஒரு முறை இப்படி அரைச்சு பாருங்க. இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட சும்மா சூப்பரா இருக்கும்.

- Advertisement -

காரசாரமாக பச்சைமிளகாயை வைத்து கொஞ்சம் வித்தியாசமாக ஒரு சட்னி ரெசிபி உங்களுக்காக. இந்த சட்னியை அரைத்து இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். எவ்வளவு நாள் தான் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி என்று சாப்பிடுவது. கொஞ்சம் வித்தியாசமாக இந்த பச்சை மிளகாய் சட்னியையும் அரைத்து சுவைத்து தான் பார்ப்போமே. நேரத்தைக் கடத்தாமல் அந்த ரெசிப்பியை பார்த்துவிடுவோம். ரெசிபியை படிக்கும்போதே இட்லிக்கு தொட்டு சாப்பிட வேண்டுமென்று தோன்றும்.

முதலில் ஒரு 10 பச்சை மிளகாய்களை எடுத்து தண்ணீரில் சுத்தமாக கழுவிவிட்டு குறுக்கே கீறி கொள்ளுங்கள். அப்படியே முழுமையாக பச்சை மிளகாயை எண்ணெயில் போட்டு வறுத்தால் வெடிக்கும். அது நமக்கு கொஞ்சம் ஆபத்து.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 4 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு எடுத்து வைத்திருக்கும் பச்சை மிளகாய் போட்டு 3 நிமிடம் போல வதக்கிக் கொள்ளுங்கள். அடுத்ததாக பொடியாக வெட்டிய பெரிய வெங்காயம் – 1, மீடியம் சைஸ் தக்காளி பழம் வெட்டியது – 1/2 அளவு சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் தக்காளி வதங்கி வந்தபிறகு தோல் உரித்த பூண்டு பல் – 15 சேர்த்து மீண்டும் நன்றாக வதக்க தொடங்குங்கள்.

அடுத்தபடியாக சிறிய நெல்லிக்காய் அளவு புளியை சிறிய சிறிய துண்டுகளாக பிச்சுப் போட்டுகோங்க, பச்சைமிளகாய் வதங்கிய பின்பு மொத்தமாக எல்லா பொருட்களும் சேர்ந்து 4 லிருந்து 5 நிமிடங்கள் வரை வதங்கினால் போதும். அவ்வளவு தான்.

- Advertisement -

அடுப்பை அணைத்துவிட்டு இந்த விழுதை நன்றாக ஆறவைத்து மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சட்னி போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த சட்னியை ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றி கொள்ளுங்கள். உங்களுக்கு எவ்வளவு தண்ணீர் வேண்டுமோ அந்த அளவுக்கு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். இதற்கு ஒரு தாளிப்பு கொடுக்கலாம். 2 ஸ்பூன் நல்லெண்ணெயில் கடுகு –  1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், கறிவேப்பிலை – 2 கொத்து, பெருங்காயம் – 1/4 ஸ்பூன், போட்டு மணக்க மணக்க தாளித்து சட்னியில் ஊற்றி கலந்து அப்படியே இட்லிக்கு தொட்டு சாப்பிடுங்க. சும்மா நச்சுன்னு இருக்கும்.

சற்று முன்