தண்ணீர் கையில் படாமலேயே பாத்திரம் கழுவ இப்படி ஒரு ஐடியா இருப்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க.

Dish wash cleaning tips Tamil
- Advertisement -

தண்ணீர் கையில் படாமல் பாத்திரம் எப்படி கழுவ முடியும். யாராலையாவது கெஸ் பண்ண முடிஞ்சுதா? குறிப்பை படிப்பதற்கு முன்பாகவே, கெஸ் பண்ணுங்க. முடியாதவர்கள் குறிப்பை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். குளிர்காலத்தில் நிறைய பெண்களுக்கு இருக்கக்கூடிய மிக பெரிய சிரமம் இது. இரவு நேரத்தில் பாத்திரம் தேய்க்கும் போது, ஜில்லுனு வரும் தண்ணீரில் பாத்திரம் கழுவும் போது அப்படியே குளிர் எடுக்கும். அதிகாலை வேலை எழுந்து பாத்திரம் கழுவுபவர்களுக்கும் இதே பிரச்சனைதான். இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க சுலபமான ஒரு தீர்வையும், இதோடு சேர்த்து இன்னும் சில வீட்டுக்குறிப்புகளையும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

குறிப்பு 1:
ஒரு பிளாஸ்டிக் டப்பாவுக்கு அடியில் ஈரம் இல்லாத வெங்காய தோல்களை பரப்பி போட்டு, அதன் மேலே கேரட்டை அடுக்கி மூடி போட்டு, ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் ஆனாலும் கேரட் கெட்டுப் போகாது. கேரட்டின் நுனியையும், தலைப்பகுதியையும் வெட்டிவிட்டு இந்த குறிப்பை பின்பற்றி பாருங்கள்.

- Advertisement -

குறிப்பு 2:
எண்ணெய் ஊற்றிய பின்பு பாட்டிலில் எண்ணெய் வழிந்து, தரையெல்லாம் பிசுபிசுப்பாக ஆகுதா. எண்ணெய் பாட்டிலுக்கு மேல் பக்கம், உங்கள் தலைக்கு போடும் ஒரு ஹேர் பேண்டை மாட்டி விடுங்கள். முடியோடு மாட்டி விட்டுடாதீங்க. பழைய ஹேர்பேண்ட் ஆக இருந்தாலும் அதை நன்றாக துவைத்துவிட்டு காயவைத்து எண்ணெய் பாட்டிலுக்கு வாய்ப்பகுதிக்கு, கீழ்ப்பக்கத்தில் மாட்டி வைக்க வேண்டும். எண்ணெய் ஊற்றிய பின்பு வாய் பகுதியில் இருந்து, எண்ணெய் வழிந்தால் கூட அந்த எண்ணெயை எல்லாம் ஹேர் பேண்ட் உறிஞ்சிக் கொள்ளும். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை பழைய ஹேர் பேன்ட் தூக்கி போட்டுவிட்டு, புதுசு மாட்டிக் கொள்ளலாம்.

குறிப்பு 3:
குளிர்காலத்தில், மழைக்காலத்தில் ஈரமாக கிடைக்கும் வெங்காயத்தை மொத்தமாக ஸ்டோர் செய்தால் சீக்கிரம் கெட்டுப் போய்விடும். ஒரு நியூஸ் பேப்பரை போட்டு அதன் மேலே வெங்காயத்தை பரப்பி கொட்ட வேண்டும். அப்படி இல்லை என்றால் நெட் பேங்குக்கு உள்ளே போட்டு வெங்காயத்தை பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

குறிப்பு 4:
சில எலுமிச்சம் பழங்களை பிழிந்து சாறு எடுப்பது மிக மிக கஷ்டமாக இருக்கும். கொஞ்சம் அழுத்தமாக இருக்கும் எலுமிச்சம் பழத்தை ஒரு பணியார கம்பியில் குத்தி அல்லது போர்க் ஸ்பூனில் குத்தி, லேசாக நெருப்பில் காட்ட வேண்டும். ரொம்பவும் அல்ல. இரண்டிலிருந்து மூன்று செகண்ட் அந்த எலுமிச்சம் பழத்தை நெருப்பில் காட்டி, அதன் பின்பு அதை ஒரு துணியில் வைத்து துடைத்துவிட்டு, சூடு தணிந்த பிறகு அந்த எலுமிச்சம் பழத்தை வெட்டி சாறு பிழிந்தால் சூப்பராக சாறு கிடைக்கும்.

குறிப்பு 5:
இறுதியான சூப்பர் குறிப்பு. கையில் தண்ணீர் படாமல் எப்படி பாத்திரம் தேய்ப்பது. கையில் ஒரு கிளவுஸ் போட்டுக்கோங்க. இப்போது மிக மிகக் குறைந்த விலையில் கூட கைக்கு போடக்கூடிய கிளவுஸ் கிடைக்கிறது. கை உள்ளே தண்ணீர் போகாத கிளவுஸ் கிடைக்கிறது. கவரால் செய்யப்பட்ட கிளவுஸ், கையில் போட்டுக்கொண்டு எளிதாக நீங்கள் பாத்திரம் தேய்க்கலாம்.

உங்களுடைய கையில் ஜில்லுன்னு தண்ணி படாமல் இருக்கும். பாத்திரம் தேய்த்து முடித்த பிறகு அந்த கிளவுசை கழுவி அப்படியே காய வைத்து விட்டு மீண்டும் பயன்படுத்தி கொண்டாலும் சரி. அது உங்களுடைய விருப்பம். ஆனால் இந்த சின்ன டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க. வீசிங் ப்ராப்ளம் உள்ளவர்களுக்கு, ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு எல்லாம் இந்த சின்ன குறிப்பு பெரிய அளவில் வேலை செய்யும்.

- Advertisement -