இனி சோப்பு வாங்கினால் இப்படி பயன்படுத்தி பாருங்க மாசம் ஃபுல்லா பயன்படுத்தினா கூட சோப்பு கறைவே கறையாது. பாத்திரங்களும் பளிச்சென்று மின்னும். எப்படி அது தெரிஞ்சுக்கலாம் வாங்க.

- Advertisement -

நம் வீட்டில் பாத்திரம் தேய்க்க சோப்பை பயன்படுத்தும் பொழுது பிரித்த ஒன்று இரண்டு நாட்களுக்குள்ளாகவே அது குழைந்து ஒரு வாரத்திற்குள் காலி ஆகி விடும். அதுமட்டுமின்றி அப்படி ஆன பின்பு நாம் பாத்திரம் தேய்க்கும் போது பாத்திரத்திலும் வெள்ளை வெள்ளையாகவும், திட்டு திட்டாகவும் தெரியும். இனி சோப்பு வாங்கும் போது இப்படி பயன்படுத்தி பாருங்கள். ஒரு சோப்பு உங்களுக்கு மாதம் முழுவதும் வரும். அதை எப்படி என்று இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் சோப்பு வாங்கியவுடன் அது பிரித்து காய் துருவும் துருவலில் ஒரு கால் பாகம் சோப்பை மட்டும் நன்றாக துருவி எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து ரெண்டு டீஸ்பூன் மட்டும் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள்.

- Advertisement -

இந்த சோப்பு நன்றாக கரைந்து வந்தவுடன், அடுப்பில் இருந்து இறங்கி இதில் இரண்டு டேபிள் ஸ்பூன் கோதுமை மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் சால்ட் , ஒரு டீஸ்பூன் லெமன் சால்ட், அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து ஒரு டப்பாவில் போட்டு அப்படியே வெயிலில் வைத்து விடுங்கள்.

ஒரு நாள் முழுவதும் வெயிலில் இருந்தால் போதும். இது நன்றாக இறுகி கெட்டியாக சோப்பு போல நமக்கு கிடைத்து விடும். இதை அப்படியே எடுத்து நாம் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தலாம்.

- Advertisement -

இப்படி செய்து பாத்திரம் தேய்ப்பதால் என்ன விசேஷம் என்று நீங்கள் கேட்கலாம். நாம் சாதாரணமாக சோப்பை பயன்படுத்தும் போது அது விரைவில் கரைந்து விடும். இப்படி பயன்படுத்தும் போது நமக்கு அதிக நாட்கள் உழைக்கும். இது ஒரு புறம் இருந்தாலும்,  இந்த முறையில் தயாரிக்கும் சோப்பானது விடாப்பிடியான கரையான டீக்கறை அடிப்பிடித்த பாத்திரம் போன்ற கறைகள் அனைத்தையுமே எளிதில் நீங்கி விடும்.

இதையும் படிக்கலாமே: இனி நம்ம கையில் மட்டும் மருதாணி சிவக்கலையே என்ற கவலையே உங்களுக்கு வராது. இப்படி வச்சு பாருங்க இது வரைக்கும் உங்க கை இப்படி சிவந்ததே இல்லைன்னு சொல்ற அளவுக்கு மருதாணி சிவந்து இருக்கும்.

அது மட்டும் இன்றி பித்தளை செம்பு பாத்திரங்களை தேய்ப்பதற்கு என இனி தனியாக எந்த ஒரு பொருளையும் தேடி தேடி பயன்படுத்தாமல் இதை வைத்து தேய்த்தாலே போதும். அவ்வளவு பளிச் சென்று இருக்கும் பளிச்சென்று மாறி விடும். இந்த குறிப்பை பயன்படுத்தி நீங்களும் சோப்பை இப்படி உபயோகப்படுத்தி பாருங்கள் நிச்சயம் இதற்கான நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -