இனி நம்ம கையில் மட்டும் மருதாணி சிவக்கலையே என்ற கவலையே உங்களுக்கு வராது. இப்படி வச்சு பாருங்க இது வரைக்கும் உங்க கை இப்படி சிவந்ததே இல்லைன்னு சொல்ற அளவுக்கு மருதாணி சிவந்து இருக்கும்.

mehandi desgin
- Advertisement -

இன்றளவும் ஏதேனும் விசேஷ நாட்கள் என்றால் நாம் மருதாணி வைப்பது வழக்கமாக வைத்திருக்கிறோம். சில இடங்களில் இந்த மருதாணி வைப்பதையே ஒரு விழாவாகவே கூட விமர்சையாக கொண்டாடுகிறார்கள். நம்முடைய கலாச்சாரத்திலும் மருதாணி வைப்பது ஒரு அழகியல் சார்ந்த விஷயமாக பார்த்து வருகிறார்கள்.

இதை வைப்பதன் மூலம் அழகியலோடு சேர்த்து ஆரோக்கியத்தையும் தரும் என்பது தான் உண்மை. அப்படியான இந்த மருதாணி வைத்தால் கையில் சிவக்க வில்லை என்பது பலரின் கவலையாக இருக்கும். இந்த பதிவில் உள்ள குறிப்பை பயன்படுத்தி வைத்தால் மருதாணி செக்க செசெவேன்று சிவந்து வரும். வாங்க அது எப்படி என்பதை இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த முறை கொஞ்சம் பழமையான முறை தான் அதில் கொஞ்சம் இப்போதுள்ள காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி எப்படி செய்வது என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம். இப்படி செய்வதன் மூலம் நாம் எந்த ஒரு டிசைனையும் அழகாக நேர்த்தியாக போட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 டீஸ்பூன் சோம்பு, 2 டீஸ்பூன் டீ தூள், 5 லவங்கம், 1சின்ன துண்டு பட்டை, இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கொதிக்க வையுங்கள். இந்த ஒரு டம்ளர் தண்ணீர் அரை டம்ளர் ஆகும் வரை கொதித்த பிறகு இதை அப்படியே ஆற வைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து கடைகளில் கிடைக்கும் மருதாணி பவுடரை வாங்கி கொள்ளுங்கள். இதை கட்டிகள் இல்லாமல் நன்றாக சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை ஒரு பௌலிங் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நாம் ஏற்கனவே காய்ச்சி ஆற வைத்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாக கலந்து வைத்து விடுங்கள்.

இந்த மருதாணியை நீங்கள் இரவு வைப்பதாக இருந்தால் காலையிலே இப்படி கலந்து வைத்து விடுங்கள் இது குறைந்தது 6 மணி நேரமாவது மருதாணி பவுடரும் நாம் காய்ச்சிய தண்ணீரும் ஒன்றாக ஊற வேண்டும். இதையே நீங்கள் கோனில் சேர்த்து டிசைனாக வைப்பதாக இருந்தால் கலந்த உடனே மிக்ஸியில் போட்டு ஒரு முறை நன்றாக அடித்து அதன் பிறகு மூடி வைத்து விடுங்கள்.

- Advertisement -

இதை ஊற வைக்கும் போது ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது எட்டு மணி நேரம் கழித்து இது நன்றாக கலந்த பிறகு வேண்டுமானால் நீங்கள் பிரிட்ஜில் ஸ்டோர் செய்து கொள்ளலாம். இப்படி வைக்கும் போது மருதாணி கொஞ்சம் கூட திப்பிலிகள் இல்லாமல் அழகாக இருப்பதுடன் நல்ல சிவந்து வரும். அதேபோல் மருதாணி காய்ந்தவுடன் நேரடியாக தண்ணீர் கொண்டு கழுவாமல் மருதாணியை எடுத்துப் பிறகு கொஞ்சமாக தேங்காய் எண்ணெய் தேய்த்து பின் கழுவினால் தான் மருதாணி நன்றாக நிறம் மாறி வரும்.

இதையும் படிக்கலாமே: புதிதாக இரும்பு தோசைக்கல் வாங்கினால் இதை செய்யாமல் தோசை வார்க்காதீர்கள்! இரும்பு தோசைக்கல் உடனே பழக என்ன செய்ய வேண்டும்?

மருதாணி வைப்பது தொழிலாக செய்பவர்கள் கூட இந்த முறையில் தயாரித்து வைத்துக் கொள்ளலாம். மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் செலவு குறைவு. இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -