தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்ய வேண்டிய நேரம், புத்தாடை அணிந்து பூஜை செய்யக்கூடிய நேரம் என்ன? இந்த ஆண்டு தீப ஒளியில் எந்த கடவுளை தரிசனம் செய்வது புண்ணியத்தை தரும்?

diwali-oil-bath
- Advertisement -

இந்த ஆண்டு என்று மட்டும் அல்ல, எந்த ஆண்டு தீபாவளியாக இருந்தாலும், அந்த தீபாவளி சிவபெருமானுக்கு உரிய வழிபாடாக நம்முடைய கந்த புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதிலும் இந்த வருட தீபாவளி திங்கட்கிழமை வந்திருக்கின்றது. சிவபெருமானுக்கு உரிய சோமவாரத்தில் இந்த தீபாவளி வந்திருப்பதால், பூஜையை சிறப்பாக எப்படி செய்வது என்பதை பற்றிய ஆன்மீக ரீதியான வழிபாட்டு முறையை சுருக்கமாக இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

சிவபெருமானுக்கு உரிய முக்கியமான எட்டு விரதங்களில் இந்த தீபாவளி, கேதார கௌரி நோன்பும் அடங்கும். கேதார கௌரி நோன்போடு சம்பந்தப்பட்ட நாள் தான் இந்த தீபாவளி. இந்த நாளில் தான் நரகாசுரன் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். ஆகவே கண்ணனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இந்த தீபாவளியை நாம் கொண்டாடி வருகின்றோம்.

- Advertisement -

தீபாவளி அன்று, அதாவது நாளை காலை காலை 3.00 மணி முதல் 4.30 மணிக்குள் உங்களுடைய எண்ணெய் குளியலை முடித்து விட வேண்டும். கங்கையில் சென்று குளிக்க முடியாதவர்கள் கூட, செய்த பாவங்களை கழிக்க தீபாவளி அன்று காலை இந்த கங்கா ஸ்தானத்தை மேற்கொண்டால், கங்கையில் போய் குளித்த பலனை பெறலாம் என்பது ஐதீகம். வெதுவெதுப்பாக இருக்கக்கூடிய சுடுதண்ணீரில் குளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். தீபாவளி அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் நம் வீட்டில் இருக்கும் சுடுதண்ணீரில் அந்த கங்காதேவி வாசம் செய்வாள்.

அதிகாலை 4:30 மணிக்குள் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் குளித்துவிட்டு, புத்தாண்டை அணிந்து கொண்டு பூஜை அறையை அலங்காரம் செய்து, உங்களால் முடிந்த விளக்குகளை ஏற்றி வைத்து, அந்த தீப ஒளியில் சிவபெருமானை தரிசனம் செய்யுங்கள். அதாவது மின்விளக்குகளை அனைத்து விட்டு, தீபாவளி திருநாளான அன்றைய தினம், தீப ஒளியில் சிவபெருமானை தரிசனம் செய்து குடும்பத்தோடு வழிபாடு செய்வது மிக மிக சிறப்பு.

- Advertisement -

சில பேர் வீட்டில் சிவலிங்கம் இருக்கும். சில பேர் வீட்டில் சிவன் பார்வதி சேர்ந்து திருவுருவப்படம் இருக்கும். சில பேர் வீட்டில் அண்ணாமலை ஈஸ்வரர் இருப்பார். இப்படி எந்த சிவரூபம் உங்கள் வீட்டில் இருந்தாலும் சரி, அந்த சிவபெருமானை வழிபாடு செய்யலாம். சிவபெருமானின் திருவுருவப்படமே உங்கள் வீட்டில் இல்லை என்றாலும், தீப ஒளியில் ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தை உச்சரித்து பூஜை அறையில் நமஸ்காரம் செய்து, குடும்பத்தோடு இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். (இந்த வழிபாடு அனைத்தும் நாளைய தினம் சூரிய உதயத்திற்கு முன்பு நிறைவு பெற வேண்டும். அதாவது நாளை காலை 5:45 மணிக்கு முன்பு.)

நாளை தினம் உங்கள் வீட்டில் கேதார கௌரி விரதம் இருக்கிறது என்றால், காலை இந்த சிவபெருமானின் தீப ஒளி தரிசனத்தை முடித்து விட்டு உங்களுடைய நோன்பை தொடங்கிக் கொள்ளலாம். அதேபோல சில பேர் வீடுகளில் நாளை மாலை லக்ஷ்மி குபேர பூஜை நடத்துவதும் வழக்கம் இருக்கும். அவர்களும் அவரவர் வீட்டு வழக்கம் போல அந்த பூஜையை செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: தீபாவளி அன்று, லட்சுமி குபேர பூஜை செய்ய முடியாதவர்கள் கூட, இதை செய்தால் மகாலட்சுமியின் அருளாசி முழுமையாக கிடைக்கும். உங்கள் வீட்டில் பணம் வந்து கொண்டே இருக்கும். அடுத்த தீபாவளிக்கு நீங்களும் கோடீஸ்வரராக மாறலாம்.

எந்த ஒரு பண்டிகையுமே நமக்கு சந்தோஷத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் நம்முடைய முன்னோர்களால் வழி வகுக்கப்பட்டுள்ளது. ஆகவே நிறைவான மனதோடு சந்தோஷத்தோடு இந்த பண்டிகையையும் கொண்டாடுங்கள். பண்டிகை கொண்டாட முடியாமல் கஷ்டப்படுபவர்களுக்கு, உங்களால் முடிந்த உதவியை செய்தும் இந்த தீபாவளி திருநாளை கொண்டாடலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொடுப்போம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

- Advertisement -