தீபாவளி அன்று மாலை சொல்ல வேண்டிய குபேர மந்திரம்

gubera
- Advertisement -

நாளைய தினம் தீபாவளி திருநாள் அல்லவா. நாளை மாலை மார்வாடிகள் இந்த லட்சுமி குபேர பூஜையை வெகு விமர்சையாக செய்வார்கள். நம்முடைய வீட்டில் வெகு விமர்சியாக லட்சுமி குபேர பூஜை செய்தாலும் சரி, அல்லது ரொம்ப ரொம்ப எளிமையான முறையில் குபேரரை வணங்கினாலும் சரி கூடவே சேர்த்து இந்த மந்திரத்தையும் சொல்லணும்.

எந்திரம் வைத்து, கலசம் நிறுத்தி மந்திரங்கள் சொல்லி ரொம்பவும் விமர்சியாக இந்த குபேர பூஜையானது செய்யப்படும். அந்த அளவுக்கு நம்மால் இந்த பூஜையை செய்ய முடியுமா என்பது தெரியாது. ஆனால் நம்மால் முடிந்தவரை எளிமையாக இந்த பூஜையை நம்முடைய வீட்டில் நாளை மாலை செய்யலாம்.

- Advertisement -

குபேர மந்திரம்

வீட்டில் வெள்ளிக்கிழமை பூஜையை எப்படி மேற்கொள்வோமோ, அதேபோல பூஜை அறையை அலங்காரம் செய்து விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஏதாவது ஒரு இனிப்பு பலகாரம் நெய்வேதியமாக வைத்துவிட்டு, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பூஜை அறைக்கு முன்பாக அமர்ந்து குபேரரையும் மகாலட்சுமி தேவியையும் சக்தி தேவியையும் சிவபெருமானையும் மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

எந்த பூஜை செய்தாலும் குல தெய்வத்தின் நாமத்தை சொல்ல மறக்கக்கூடாது. இப்படி மனதார உங்களுடைய பூஜையை செய்ய தொடங்குங்கள். சாம்பிராணி தூபம் போடுவது, கற்பூர ஆரத்தி காண்பிப்பது, போன்ற வழிபாட்டு முறைகளை எல்லாம் முடித்துவிட்டு அனைவரும் சிறிது நேரம் பூஜை அறையில் அமர்ந்து, சிறிது நேரம் மௌனமாக குடும்ப செல்வ செழிப்பாக இருக்க வேண்டுதல் வைக்கவும்.

- Advertisement -

குடும்பத் தலைவி மட்டும் சாமி கும்பிட்டால் பத்தாது. குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஒன்றாக பூஜை அறையில் அமைந்து குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்வதில் பலன் ரொம்ப ரொம்ப அதிகம். ஒரு முறை நீங்கள் இப்படி வழிபாடு செய்து பாருங்கள்.

இதன் மூலம் கிடைக்கப்படும் பலன் இரட்டிப்பாக இருக்கும். மனநிறைவு அவ்வளவு இருக்கும். ஏதாவது ஒரு பிரசாதம் பூஜை அறையில் வைக்கணும் மறந்துடாதீங்க. சுலபமாக பூஜையை முடித்துவிட்டு பின் சொல்லக்கூடிய இந்த குபேர மந்திரத்தை சொல்லணும்.

- Advertisement -

ஓம் க்லீம் ஸ்ரீம் குபேராய தனாகர்ஷணாய
தனராஜாய மம ஐஸ்வர்யம்
தேஹி தேஹி நமஹ!

மந்திரம் ரொம்ப ரொம்ப சின்னது தான். 27 முறை, 51 முறை, 108 முறை எண்ணிக்கை என்பது உங்களுடைய விருப்பம். உங்களுடைய நேரத்தை பொறுத்தது. மனநிறைவோடு ஒருமுறை இந்த மந்திரத்தை உச்சரித்தாலும், நாளை குபேரரின் அனுகிரகம் உங்கள் குடும்பத்திற்கு இருக்கும். இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு செல்வ வளம் பெறுக இந்த சின்ன மந்திரமும், பூஜையும், வழிபாடும் போதும்.

எல்லோருக்கும் அந்த மகாலட்சுமியின் அனுக்கிரகமும் குபேரனின் அனுகிரகமும் பரிபூரணமாக கிடைத்து செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து கொண்டு, அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -