உங்களுக்கு அதிஷ்டமழை ஒரேயடியாக பொழிய தூங்கும் முன் இதை செய்தால் போதும்.

sleep

நம் வாழ்வில் உறக்கம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது பலருக்கு தெரிவதில்லை. ஒவ்வொரு நாளும் இவ்வளவு மணி நேரமாவது தூங்க வேண்டும் என்று ஒரு கோட்பாடு உண்டு. அதை யாரும் சரியாக கடைப்பிடிப்பதில்லை. உடலிற்கு தேவையான ஓய்வு இருந்தால்தான் அன்றைய நாள் முழுவதும் நம்மால் உற்சாகத்துடன் செயலாற்ற முடியும். அத்தகைய தூக்கத்தினால் நமக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால் நம் வேதத்தின்படி உண்மையாகும். அது எப்படி என்பதை பார்ப்போம் வாருங்கள்.

sleep

தினமும் இரவு உறங்க செல்வதற்கு முன் தேங்காய் எண்ணெயில் கற்பூரம் கலந்து அதனை இளஞ்சூடாக இருக்கும் தருவாயில் உங்கள் பாதங்களை நன்றாக கழுவி விட்டு பின்னர் அதனை பாதத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் நரம்புகள் தூண்டப்பட்டு மூளை சுறுசுறுப்படையும். அதுமட்டுமல்லாமல் இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் அளிப்பதுடன் உங்கள் உள்ளத்தையும் உறுதியாக்கும்.

அதுபோல் ஒரு செம்பு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் ஊற்றி அதை நீங்கள் உறங்கச் செல்லும் முன் ஓரிடத்தில் வைத்து விட்டு செல்லுங்கள். மறுநாள் காலையில் அந்த தண்ணீரை மரம் செடிகளுக்கு ஊற்றி விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் எளிதில் தெய்வ கடாட்சத்தை அடைய முடியும். இதனால் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் உண்டாகும்.

sleep

தினமும் இரவு உறங்க செல்வதற்கு முன் ஏதேனும் ஒரு ஆன்மீக சம்பந்தப்பட்ட புத்தகத்தையோ அல்லது தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய புத்தகங்களையோ படிப்பது உங்கள் மனதிற்கு புத்துணர்ச்சியை அளிக்க வல்லது. மேலும் எத்தகைய மன இறுக்கத்திலிருந்தும் விடுபட்டு நிம்மதியான உறக்கத்தை உங்களால் பெற முடியும்.

- Advertisement -

அதேபோன்று இரவு உறங்கச் செல்வதற்கு முன் ஒரு சிறிய நடைபயிற்சி மேற்கொள்வது அளவில்லா நன்மை அளிக்கக் கூடியது. பலருக்கு இங்கு சோம்பல் பெரிய நோயாக மாறி வருகிறது. இந்த இரவுநேர நடைப்பயிற்சியானது வேதங்களின் படி நம் ஆத்மாவை தூய்மை செய்யக்கூடிய ஒன்று. இதனால் நமக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.

sleep

நம்மில் பலர் இரவு உணவை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு அல்லது மொபைல் போன் நோண்டிக் கொண்டே சாப்பிடுவது வழக்கமாயிற்று. இது மிகவும் தவறான பழக்கம் ஆகும். சாப்பிடும்போது சாப்பாட்டில் மட்டும் கவனம் இருக்க வேண்டும். நன்றாக மென்று பின்னர் முழுங்க வேண்டும். அவசரஅவசரமாக சாப்பிடுவது முறை அல்ல. அது போல் இரவு உணவை தவிர்ப்பது அல்லது அதிகப்படியான திட உணவை எடுத்துக் கொள்வது நல்லதல்ல. இரவு நேரங்களில் நல்ல ஆரோக்கியமான உணவும், அளவான உணவும் உடல் நலத்தைப் பேணிக்காக்கும். இவ்வாறு நீங்கள் செய்வதால் மன அழுத்தம் குறைந்து உங்கள் உடலில் சேரும் அதிகப்படியான கலோரியை குறைத்து நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.

மேலும் உறங்கச் செல்லுமுன் பச்சைத் தேநீர் அருந்தி விட்டு உறங்கச் செல்லும் பழக்கத்தை பழகிக்கொண்டால் நீங்கள் உறங்கும் போது உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி அது சுத்தம் செய்யும். இவ்வாறு நீங்கள் செய்வதால் மன அழுத்தத்தை உண்டாக்கக்கூடிய ஹார்மோன் சுரப்பை குறைத்து நிம்மதியான உறக்கத்தை தரும். இதனால் உங்கள் உடல் எப்பொழுதும் ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

இதையும் படிக்கலாமே
பத்ராச்சலம் கோவில் வரலாறு