உங்க தலையில பேன் இருக்குதா? முதல்ல சரி செய்யுங்க! பிரச்சனைக்கு காரணமே அதுதான்.

head-ayyanar
- Advertisement -

ஒருவருக்கு வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்சனைகளை தெரிந்துகொள்வதற்கு சில குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக இந்த சில குறிப்பு  நமக்கு தெரியும். இந்த பிரச்சனை நமக்கு இருக்கிறது என்று தெரிந்தும், அதை சரி செய்யாமல் சிலபேர் அனாவசியமாக விட்டு விடுவார்கள். ஆனால், அதுதான் பிரச்சனைக்கு ஆணிவேர் என்பது சில நாட்கள் கடந்த பின்பு தான் தெரியவரும். அப்படிப்பட்ட பிரச்சனை என்னென்ன? இதில் ஏதாவது உங்களுக்கு இருந்தால் அதை எப்படி சரிப்படுத்திக் கொள்வது? என்பதைப் பற்றிய விரிவான தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

window

முதலில் ஒரு வீடானது பகல் பொழுதிலேயே இருள் சூழ்ந்த நிலையில் இருக்கும். வீட்டிற்கு வருபவர்களோ அல்லதே வீட்டில் இருப்பவர்களோ யார் வாயில் இருந்தாவது, ‘என்ன வீடு பகல் பொழுதிலேயே இருட்டாக இருக்கிறது’ என்று கேட்பார்கள். நம்மையும் அறியாமல் பகல்பொழுதில் ஜன்னல் திறந்து இருக்க, கதவு திறந்திருக்க, மின் விளக்குகளை போடுவோம். அப்படி ஒரு இருள் சூழ்ந்ததிருந்தால் கஷ்டத்தை அறிவுறுத்துவதாக அர்த்தம்.

- Advertisement -

அடுத்த விஷயம் பேன். சில பேர் தலையில் பேன் என்பது இருக்கவே இருக்காது. எதிர்பாராமல் திடீரென்று பார்த்தால், தலையில் பேனும் ஈறும் வந்திருக்கும். நம்மை அறியாமல், நம் கைகளைக் கொண்டு தலைகளை அறித்து கொண்டே இருப்போம். இது சில பேருக்கு இயற்கையாகவே இருந்து விட்டாலும் அந்தப் பேனை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும்.

pen-lice

சிலருக்கு அசாதாரணமாக எப்படிப் பேன் வந்தது என்பதே தெரியாமல் அடுத்தவர்கள், பார்ப்பவர்கள் கண்களுக்கு தெரியும் படி தலைமேலே மேய்ந்து கொண்டே இருக்கும். தலையணையில் பேன் மேயும். கையில் சொறிந்தால், கையிலேயே வரும். அந்த அளவிற்கு பேன் பிடித்துவிடும். இப்படிப்பட்டவர்கள் முதலில் அந்த பேனை அகற்றுவதற்கான வழியை பாருங்கள். இல்லையென்றால் உங்களை பிடித்த தரித்திரம் ஆனது நீங்கவே நீங்காது.

- Advertisement -

மிளகு, பூண்டு இவைகளை தேங்காய் எண்ணெயில் சேர்த்து, காய வைத்து, அந்த எண்ணெயைத் தலையில் தடவி கொண்டு ஒரு வெள்ளைத் துணியைக் கட்டிக் கொள்ளுங்கள். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு இப்படி செய்து கொள்ளுங்கள். மறுநாள் காலை பேன் முழுவதும் செத்து, உங்கள் தலையை விட்டு நீங்கி இருக்கும். உங்களை பிடித்த கஷ்டம் நீங்கி விட்டது என்று நினைத்துக் கொள்ளுங்கள். பேன் பிடிப்பது சாதாரண விஷயமல்ல. நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

head-itch

மூன்றாவதாக அமைதியாக இருக்கும் வீட்டில், திடீரென்று கடுமையான சண்டைகளும், கடுமையான வார்த்தைகளும் வரும். ‘இந்த வீடு ரொம்ப அமைதியான வீடு. இந்த வீட்ல இப்படி ஒரு பிரச்சனையா? இப்படி ஒரு சத்தமா?’ என்று பக்கத்து வீட்டுக்காரர் கேட்கும் அளவிற்கு சண்டை வரும்.

- Advertisement -

அடுத்ததாக சில பேரது சாப்பாட்டில் தொடர்ந்து முடி வந்து கொண்டே இருக்கும். சாப்பிடிம்போது முடி அகப்பட்டால், பிரச்சனை உங்களுக்கு வரப்போகிறது என்பதை உணர்த்துவதாக அர்த்தம். ஒருமுறை அல்ல. தொடர்ந்து பலமுறை சாப்பாட்டில் முடி அகப்பட்டு கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

rice

அடுத்தது சாப்பாட்டில் கல். தரமான சாப்பாடு அரிசியை நீங்கள் வாங்கி சமைத்தாலும், நீங்களே அறியாமல் உங்கள் சாப்பாட்டில் கல் இருந்து, உங்கள் வாயில் அகப்பட்டு விடும். இதுவும் பிரச்சனைக்கான அறிகுறி தான். எந்த வீட்டில் பெண்கள் கண்ணீர் விட ஆரம்பிக்கிறார்களோ அந்த வீட்டில் 48 நாட்களுக்குள் ஏதோ ஒரு கெட்ட விஷயம் கட்டாயம் நடந்துவிடும்.

இப்படிப்பட்ட பிரச்சனைகள் உங்களுக்கும் இருப்பதாக இருந்தால், தயவுசெய்து கதவுகளையும், ஜன்னல்களையும் அடைத்து வைக்காதீர்கள். வெளியிலிருக்கும் சூரிய வெளிச்சம் உள்ளே வரும்படி கதவு, ஜன்னல்களை திறந்து வைப்பது மிகவும் நல்லது. வீடு ஒட்டடை படியாமல், தூசு படியாமல் சுத்தமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். தேவையற்ற பொருட்களை வீட்டில் இருந்து அகற்றிவிட்டு வீடு சுத்தமாகவும், அழகாகவும், வாசனையாகவும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

varatti

சாணத்தால் செய்யப்பட்ட வரட்டியை எரித்து, அதில் தூபம் போட்டு வீடு முழுவதும் காண்பித்தால், கெட்ட அதிர்வுகள் வெளியே சென்றுவிடும். இப்படி செய்யும்பட்சத்தில் வரப்போகிற பிரச்சனையில் இருந்து முழுமையாக தப்பித்துக்கொள்ள முடியும் என்று சொல்ல முடியாது. அதனுடைய பாதிப்புகள் குறையும். முடிந்தவரை குலதெய்வ வழிபாட்டை செய்து கொண்டே இருங்கள். அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
பாம்பு யாருடைய வீடுகளில் வரும் தெரியுமா? பாம்பை அடித்து கொன்றால் பழிவாங்க வரும் என்பது உண்மையா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Tharithiram neenga. Tharithiram. Tharithiram vilaga. Dharithiram. Pen thollai theera. Pen thollai poga tips in Tamil.

- Advertisement -