பாம்பு யாருடைய வீடுகளில் வரும் தெரியுமா? பாம்பை அடித்து கொன்றால் பழிவாங்க வரும் என்பது உண்மையா?

பாம்பு புற்றுக்கு பால், முட்டை எல்லாம் ஊற்றி வழிபாடு செய்தாலும் பாம்பு உங்கள் வீட்டில் வந்தால் அடித்து துரத்த தான் செய்வீர்கள். எது எது எங்கு இருக்க வேண்டுமோ? அங்கு இருந்தால் தான் அதற்கு மதிப்பு. மனிதர்கள் வாழும் வீடுகளில் பாம்பு நுழைவது சாதாரணமான விஷயம் அல்ல. உங்கள் வீட்டை சுற்றி காடுகளோ, காலி இடங்களோ, புதர்களோ மண்டிக் கிடந்தால் பாம்பு வருவது இயற்கையான விஷயம் தான். அதை தவிர்க்க முடியாது. நீங்கள் தான் அதற்கான பாதுகாப்புகளுடன் இருந்து கொள்ள வேண்டும். ஆனால் காரணம் இல்லாமல் பாம்பு வருகிறது என்றால் யாருடைய வீட்டில் எல்லாம் வரும் என்று இப்பதிவில் காணலாம்.

pambu-puthu

பாம்புகள் அடிக்கடி நுழையும் இது போன்ற வீடுகளில் நீங்கள் இருந்தால், சிறியா நங்கை, பெரியா நங்கை, ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு போன்ற நாகங்களுக்கு ஒவ்வாத செடிகளை கட்டாயம் வளர்த்து வருவது நல்லது. ஒரு நேரம் போல், ஒரு நேரம் இருப்பதில்லை. எப்போதும் நாம் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க முடியாது. குழந்தைகள் இருந்தால் வீட்டை சுற்றிலும் இருக்கும் தேவையற்ற புதர்களை அகற்றிவிடுவது நல்லது. மேலும் வீட்டை சுற்றி சுத்தமாக வைத்து, வேலி அமைத்துக்கொள்வது பாதுகாப்பானது. அதே போல் ஒரு வீட்டில் பாம்புகள் வருவதற்கு வேறு கரணங்களும் உண்டு. அந்த வீட்டை சுற்றி அதன் இரையான எலிகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் வரலாம். எங்கோ சென்று கொண்டிருக்கும் பாம்பு, ஏதோ இடையூறு ஏற்பட்டு பாதுகாப்பிற்காக அருகில் இருக்கும் வீடுகளுக்குள் நுழையலாம். இவை இயற்கையான காரணங்கள் தான்.

காரணங்கள் இல்லாமல் ஒருவரது வீட்டில் பாம்பு ஏன் வருகிறது?
ஒருவரது வீட்டில் பாம்பு வருவதற்கு குலதெய்வ குற்றமும் காரணமாக இருக்கிறது. உங்கள் குலதெய்வத்தை நீங்கள் மறந்திருப்பது, வேண்டிய வேண்டுதல்களை நிறைவேற்ற மறப்பது போன்ற காரணங்களால் அதனை நினைவுப்படுத்த சர்ப ரூபத்தில் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக முன்னோர்கள் கூறியுள்ளனர். வழி வழியாக சந்ததி மாறாமல் செய்து வரும் ஏதேனும் வழிபாடு இடையில் நிறுத்தபட்டு இருந்தால் அதனை நியாபகப்படுத்த இது போன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. கனவில் பாம்பு வருவதும் இந்த காரணங்களினால் தான்.

Snake

தேவையற்ற தீய சிந்தனைகளை கொண்டிருப்பவர்கள் வீட்டில் பாம்புகள் வரலாம். நீங்களோ, உங்களது முன்னோர்களோ வாங்கிய நிலம், மனை போன்றவற்றிக்கு அருகே கிணறு ஏற்படுத்தவோ, சுவர் எழுப்பவோ அங்கிருக்கும் புற்றை அகற்றி, அழிக்க நேர்ந்து இருந்தால், உங்களது வீட்டில் பாம்புகள் வரலாம். மனதில் பக்தி இருந்தும் ஒருவித குழப்பம் ஆட்கொண்டு இருப்பவர்கள் இல்லத்தில் பாம்புகள் வரும். கிராமங்களில் வசித்து வந்தவர்கள் வீடுகளில் பாம்புகள் வந்தால், அதை அவர்கள் அடித்து கொன்று விடுவார்கள். அவர்களின் அடுத்த அடுத்த சந்ததியினர் வீடுகளில் பாம்புகள் வரும்.

- Advertisement -

மனிதர்கள் இல்லாத பாழடைந்த வீட்டை பாதுகாப்பிற்காகவும், உணவிற்காகவும் பயன்படுத்தி வரும் பாம்பை காட்டிக் கொடுத்து அடித்தாலும், காட்டிக் கொடுத்தாலும் அவர்களது வீட்டிலும் பாம்புகள் வரும். காக்கை இடது புறத்தில் அடிக்கடி வந்து சத்தம் போட்டால் பாம்பு வரும். பல்லி அடிக்கடி சத்தம் போட்டு கொண்டிருந்தாலும் பாம்பு வரும். இரவில் ஆந்தையின் அலறல் ஒலிக்கும் வீடுகளில் பாம்பு வரும். நீங்கள் பிறக்கும் நேரத்தில் ராகு, கேது உச்சமோ, நீச்சமோ அடைந்திருந்தால் அல்லது சரியான இடத்தில் இல்லாமல் இருந்தால் உங்கள் வீட்டில் பாம்பு காரணமின்றி வரும். இது போன்ற ஜோதிட காரணங்களால் அடிக்கடி பாம்புகள் வரும் வீட்டில், நாகதந்தி வேரை வாங்கி செம்பு கம்பியில் கட்டி வீட்டின் நுழைவு வாயிலில், மற்றும் வீட்டை சுற்றிலும் கட்டித் தொங்கவிட்டால் போதும், தோஷங்கள் நீங்கி பாம்புகள் வருவது தடைபடும்.

Cobra snake

பாம்பை அடித்து கொன்றால் பழிவாங்க வரும் என்பது உண்மையா?
மேற்கூறிய ஜோதிட ரீதியான பழம்பெரும் காரணங்கள் ஒருபுறம் தள்ளி வையுங்கள். இப்போது அறிவியல் ரீதியான காரணங்களை பார்ப்போம். பாம்பை அடித்து கொன்றால், திரும்பவும் அதே வீட்டிற்கு வரும் என்பது அறிவியல் ரீதியாகவும் உண்மை தான். ஆனால் அது நீங்கள் நினைப்பது போல் பழி வாங்க அல்ல. பாம்பை அடித்து கொல்லும்போது அதன் கழிவுப் பாதையில் இருந்து ஒரு விதமான திரவம் வெளியேறி தரையில் சிந்துகின்றன. இந்த நாற்றம் அடிபட்ட பாம்பின் எதிர்பாலின பாம்புகளால் கவரபட்டு அந்த இடத்திற்கு வருகின்றன. பார்ப்பதற்கு பெரிய வித்தியாசம் தெரியாது. அதே போன்ற உருவத்தில் தான் இதுவும் இருக்கும். இதை அறியாத பலர் அதே பாம்பு தான் பழிவாங்க வந்திருக்கிறது என்று நினைத்து கொண்டு விடுகின்றனர்.

இது போன்று பழி வாங்குவதற்கு பாம்பின் நினைவு பெட்டகத்தில் எந்த சக்தியும் கிடையாது. காற்றில் பரவும் வாசத்தை தன் நாவினால் நுகர்ந்து உள்ளிழுத்து உணரும் திறனை கொண்டே இரையையும், எதிரிகளையும் அடையாளம் காணும். பாம்பு என்றாலே ஸ்வாரஸ்யம் தான். பாம்புகள் பற்றிய ஆய்வுகளும், கட்டுக்கதைகளும் மக்களுக்கு பிடித்த கருத்து பொருளாக இருப்பதற்கு காரணங்கள் இதுவரை கண்டுப் பிடிக்கபடவில்லை.

இதையும் படிக்கலாமே
வீட்டுவாசலில் துணி காய போடும் பழக்கம் உங்களிடம் உள்ளதா? அப்படினா இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Snake facts in Tamil. Snake patriya thagaval. About snake in Tamil. Why snake comes in home. Snake revenge is it true.