மனிதன் செய்யக்கூடாத 6 விஷயங்கள் என்ன தெரியுமா? இவற்றை மட்டும் நீங்கள் செய்தால் கண்டிப்பாக வாழ்க்கையில் நிம்மதியே இருக்காது!

sad-fear-vinayagar
- Advertisement -

ஒரு விரல் போல இன்னொரு விரல் இருப்பதில்லை. ஒரு கையில் இருக்கும் ஐந்து விரல்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அப்படி இருக்கும் பொழுது மனிதன் மட்டும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்? நீங்கள் என்னவோ அறிவாளி போல், மற்றவர்கள் எல்லோரும் முட்டாள் போல் நினைத்து கொள்ளும் நபரா நீங்கள்? நாம் மட்டும் தான் இந்த உலகத்தில் நல்லவர், மற்றவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு தவறு செய்கிறார்கள்! என்கிற நினைப்பா உங்களுக்கு? ஒரு மனிதன் நிம்மதியாக வாழ இந்த 6 விஷயங்களை செய்யவே கூடாது. அப்படியான விஷயங்கள் என்னென்ன? என்பதை இந்த பதிவின் தெரிந்து கொள்வோம்.

sad-crying4

மனிதன் செய்யக்கூடாத முதல் தவறு:
அல்ப விஷயத்திற்கு கூட விட்டுக் கொடுக்காமல் இருப்பது மனிதன் செய்யும் முதல் தவறாகும். ஒரு சிறு விஷயத்திற்கு நீங்கள் விட்டுக் கொடுத்துப் போயிருந்தால் மிகப்பெரிய பிரச்சனையை தடுத்திருக்கலாம் என்று எவ்வளவோ இடத்தில் நீங்கள் நினைத்து பார்த்து இருப்பீர்கள். அப்படியான பிடிவாத குணத்தை மாற்றிக் கொண்டால் நிம்மதிக்கு கேரன்டி இருக்கும்.

- Advertisement -

மனிதன் செய்யக்கூடாத இரண்டாவது தவறு:
ஒரு விஷயத்தை மாற்றவே முடியாது. இனி அதை எப்படியும் சரி செய்யவே முடியாது என்ற பட்சத்தில் அதைப்பற்றி வீணாக கவலைப்பட்டுக் கொண்டே இருப்பது மனிதன் செய்யும் இரண்டாவது தவறாகும். நடக்கவே நடக்காத ஒரு விஷயத்தை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் நேரம் வீண் தானே? அடுத்து என்ன செய்வது? என்பதை மட்டும் யோசிப்பது அறிவாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

mobile-searching

மனிதன் செய்யக்கூடாத மூன்றாவது தவறு:
உங்களால் ஒரு விஷயத்தை செய்ய முடியாது என்று தோன்றிவிட்டால் அதை வேறு யாராலும் செய்ய முடியாது என்று அடித்து பேசுவது முட்டாள்தனமான ஒன்று. வெறும் 50 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது நாம் பயன்படுத்தும் டச் போன் பற்றி யாரிடமாவது சொல்லி இருந்தால் நம்பி இருப்பார்களா? முடியாதது என்று இந்த உலகத்தில் எதுவுமே இல்லை.

- Advertisement -

மனிதன் செய்யக்கூடாத நான்காவது தவறு:
மற்றவர்களை தள்ளிவிட்டு தான் உங்களால் உயர முடியும் என்று நினைப்பது நான்காவது தவறாகும். போகும் பாதை ஒன்றாக இருந்தாலும், அடையும் இலக்கு வெவ்வேறானவை. அப்படியிருக்க ஒருவரை மிதித்துவிட்டு தான் நீங்கள் முன்னேற வேண்டும் என்றால் அதற்கு ஏன் நீங்கள் மனிதனாக பிறந்தீர்கள்? ஐந்தறிவு உள்ள மிருகம் கூட தன் இனம் காக்க ஏதாவது ஒரு வகையில் போராடும். மனிதனுக்கு இருக்கும் மட்டமான புத்தியில் இதுவும் ஒன்று.

enemy1

மனிதன் செய்யக்கூடாத ஐந்தாவது தவறு:
உங்களுடைய மனதினை பக்குவப்படுத்திக் கொள்ள தவறுவது ஐந்தாவது தவறாகும். உங்கள் பேச்சை உங்கள் மனமே கேட்கவில்லை என்றால், மற்றவர்கள் எப்படி கேட்பார்கள்? ஒரு விஷயத்தை தவறு என்று தெரிந்தே செய்வதைவிட மிகப்பெரிய தவறு எதுவும் இல்லை. தவறு என்று பட்டவுடன் சட்டென அதனை மாற்றிக் கொள்பவர்கள் எப்பொழுதும் நிம்மதியாக வாழ்வார்கள். அறிவையும், மனதையும் பக்குவப்படுத்தும் மனிதனே வாழ தகுதியானவன் என்கிறது வேதம்.

- Advertisement -

bird-flying

மனிதன் செய்யக்கூடாத ஆறாவது தவறு:
மேலே கூறியது போல் எல்லோரும் ஒன்று போல் இருப்பதில்லை. நம்மைப் போல மற்றவர்களும் இருக்க வேண்டும் என்று நினைப்பதும், நம்முடைய விருப்பு, வெறுப்புகளை மற்றவர்கள் மேல் திணிப்பதும் ஆறாவது தவறாகும். பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிரும் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப வாழ்வதற்கு உரிமை உண்டு. யாராக இருந்தாலும் அதனைத் தட்டிப் பறிப்பது அறிவீனம். இவற்றை எல்லாம் மாற்றிக் கொண்டால் நீங்களும் நிம்மதியாக வாழலாம்.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்டு பிரஷர் குக்கர், விசில் வரும்போது கூட, இனி பொங்கி வழியவே வழியாது. இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணி பாருங்களேன்!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -