சமையலறையில் மறந்தும் கூட வைக்க கூடாத 4 பொருட்கள் என்னென்ன? இதெல்லாம் இருந்தால் உடனே மாத்திடுங்க தரித்திரம் பிடிக்கும்!

kitchen-thudaippam-broom
- Advertisement -

சமையலறையில் சில பொருட்களை வைப்பதால் எதிர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இந்த சில பொருட்களை சமையல் அறையில் தெரியாமல் கூட வைத்து விடாதீர்கள். அப்படி இருந்தால் அவற்றை உடனே அதற்குரிய இடத்தை தேர்ந்தெடுத்து மாற்றி விடுங்கள். இதனால் குடும்பத்தில் தரித்திரம் பிடிக்காமல், எதிர்மறை ஆற்றல்கள் அதிகரிக்காமல் இருக்கும். அப்படியான சில விஷயங்கள் என்னென்ன? என்பதை இனி தொடர்ந்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க.

சமையலறை என்பது மிகவும் முக்கியமான ஒரு இடமாக இருக்கிறது. இந்த இடங்களில் வைக்கக் கூடிய பொருட்கள் ரொம்பவும் முக்கியமானது. நம் வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருட்களும் ஒவ்வொரு விதமான அதிர்வலைகளை உண்டாக்கக்கூடிய தன்மையை கொண்டுள்ளது எனவே சமையலறையில் இருக்கக்கூடிய இந்த 4 பொருட்கள் எதிர்மறை ஆற்றல்களை வெளியிடும் என்பதால் இவற்றை அப்புறப்படுத்த வாஸ்து சாஸ்திரம் எச்சரிக்கிறது.

- Advertisement -

அந்த வகையில் முதலாவதாக சமையல் அறையில் வைக்கவே கூடாத பொருள் ‘துடைப்பம்’ ஆகும். பெரும்பாலானோர் வீட்டில் சமையல் அறையில் தான் துடைப்பத்தை வைத்திருக்கின்றனர். துடைப்பம் மகாலட்சுமியின் அம்சம் என்று கூறப்பட்டாலும், அதனை வைக்க வேண்டிய இடத்தில் தான் வைக்க வேண்டும். பூஜை அறையில் அல்லது சமையலறையில், நிலை வாசலில் கொண்டு போய் வைத்தால் வரக்கூடிய லட்சுமி தேவி கோபமடைவால் என்பது ஐதீகம். எனவே துடைப்பத்தை சமையல் அறையில் இனி வைக்காதீர்கள். அது போல துடைப்பத்தை நிமிர்த்தி தான் வைக்க வேண்டும். யாருடைய கால்களிலும் படாதவாறு கூட்டி பெருக்க வேண்டும். துடைப்பம் தேய்ந்து போய்விட்டால் உடனடியாக அதனை தூக்கி போட்டு விட வேண்டும், பயன்படுத்தக் கூடாது. இப்படி செய்தால் தான் நன்மை தரும்.

அது போல சமையலறையில் உடைந்த கண்ணாடி பொருட்கள் இருக்கவே கூடாது. அது முகம் பார்க்கும் கண்ணாடியாக இருந்தாலும் சரி அல்லது சமையலுக்கு பயன்படுத்தும் கண்ணாடி டம்ளர்கள், கண்ணாடி சார்ந்த பொருட்களாக இருந்தாலும் சரி, உடைந்து போய்விட்டால் அதனை அப்புறப்படுத்தி விட வேண்டும். பிடி தானே இல்லை பயன்படுத்தலாம் என்று பயன்படுத்தாதீர்கள். இது எதிர்மறை ஆற்றல்களை வெளியிடும்.

- Advertisement -

சமையலறையில் குப்பை தொட்டியை வைக்கக் கூடாது. அந்தந்த நேரத்தில் சேகரிக்கும் சமையல் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி விட வேண்டும். சிலர் நாள் முழுக்க குப்பை தொட்டியில் கழிவுகளை போட்டுக் கொண்டே வருவார்கள். அதை மறுநாள் தான் குப்பைக்கு கொண்டு செல்வார்கள். இது போல ஒரு நாள் முழுவதும் சேகரிக்கும் குப்பை கழிவுகள் சமையல் அறையில் இருந்தால் அங்கு அன்னபூரணியின் வாசம் குறையும். இதனால் வறுமை உண்டாகும். எனவே இந்த தவறை தெரியாமலும் செய்யாதீர்கள்.

இதையும் படிக்கலாமே:
வீட்டின் இந்த திசையில் மட்டும் இவற்றை தெரியாமல் கூட வைக்காதீர்கள்! இதுதான் உங்களுக்கு பணத்தை கொடுக்கக் கூடிய திசையாக இருக்கிறது தெரியுமா?

துருப்பிடித்த இரும்பு பொருட்களை சமையல் அறையில் வைக்க கூடாது. கனமான ஆயுதங்கள் சமையல் அறையில் வைக்க வேண்டிய தேவை இல்லை! இருப்பினும் வேறு இடமில்லை என்கிற காரணத்தினால் இவற்றை அங்கு வைத்தால் அது துருப்பிடிக்காமல் இருக்கிறதா? என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். துருப்பிடித்த இரும்பு பொருட்கள் சமையல் அறையில் இருந்தால் எதிர்மறை ஆற்றல்களை வெளியிடும். இது சனி பகவானுக்கு உரிய உலோகம் என்பதால் குடும்பத்தில் பிரச்சனைகளை உண்டு பண்ணும்.

- Advertisement -