உங்கள் படுக்கை அறையில் இந்த பொருட்களெல்லாம் இருந்தால் கணவன் மனைவிக்குள் நிச்சயம் பிரச்சனை வரும். நிம்மதி என்பதே இருக்காது!

couple-fight-bedroom

வாஸ்து சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு அறைகள் சரியாக அமைத்து வைத்திருப்பதே யோகத்தை தரும். அந்த வகையில் படுக்கை அறையின் வாஸ்து சரியாக அமைந்து இருப்பது கணவன் மனைவி பிரச்சனையை தவிர்ப்பதற்கு உதவும். மேலும் அந்த படுக்கை அறையில் நீங்கள் வைத்திருக்கும் பொருட்களை வைத்தும் கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சனைகளை தீர்வுக்கு கொண்டு வர முடியும். அப்படியான சில பொருட்களை பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

fight4

எப்போதும் படுக்கை அறை தென்மேற்கு மூலையில் அமைத்திருப்பது மிகவும் நல்லது. படுக்கை அறையின் அளவு மிகவும் பெரியதாக ஒரு வீட்டில் இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டில் நிச்சயம் கணவன் மனைவியிடம் ஒற்றுமை இருப்பதில்லை. தென்மேற்கு மூலையில் அமைந்திருக்கும் படுக்கையறை அளவில் பெரியதாக இருக்க கூடாது.

அது போல் படுக்கை அறையில் முகம் பார்க்கும் கண்ணாடி மிகப் பெரியதாக இருக்கவே கூடாது என்கிறது வாஸ்து சாஸ்திர ஜோதிடம். முகம் பார்க்க சாதாரணமான சிறிய அளவிலான கண்ணாடிகள் போதுமானது. அதையும் நீங்கள் திரை போட்டு மறைத்து வைத்திருப்பது தான் நல்லது. மிகப் பெரிய அளவில் கண்ணாடிகளை மாட்டி வைத்தால் அந்த அறையை பயன்படுத்தும் தம்பதியர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் நிச்சயம் நிலவும்.

mirror

மேலும் படுக்கை அறையில் கணினியை கட்டாயம் பயன்படுத்த கூடாது. கணினி உபயோகப்படுத்தும் நேரத்தை தவிர எப்பொழுதும் படுக்கை அறையில் கணினியை வைத்திருப்பது கணவன் மனைவிக்கு இடையேயான ஒற்றுமையை சீர்குலைக்கும். கூடுமானவரை கணினி, தொலைபேசி போன்ற கதிர்வீச்சை உள்வாங்கும் நவீன உபகரணங்களை முழு நேரமும் படுக்கை அறையில் வைக்கும் படியாக வைத்துக் கொள்ளாதீர்கள்.

- Advertisement -

படுக்கை அறையில் மீன் தொட்டிகள் அமைத்து இருந்தால் நிச்சயம் அந்த வீட்டில் தம்பதிகளுக்குள் தேவையில்லாத பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். மீன் தொட்டியை எப்போதும் வரவேற்பறையில் வைப்பது தான் நல்லது. படுக்கை அறையில் மீன் தொட்டி வைத்து இருந்தால் கணவன் மனைவி பிரிவு இயல்பாகவே ஏற்பட்டு விடும். கணவனை பிரிந்து மனைவியோ அல்லது மனைவியை பிரிந்து கணவனோ இருக்கும் சூழ்நிலையை உருவாக்கிவிடும்.

fish tank

நீங்கள் படுக்கும் கட்டிலுக்கு அடியில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இரும்பு என்பது சனி பகவானுக்கு உரியது ஆகும். எனவே இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை நீங்கள் படுக்கும் இடத்திற்கு அடியில் வைத்திருப்பது எதிர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும்.

iron-nail-aani

அது போல் படுக்கை அறையில் சிறிய அளவிலான வெளிச்சத்தை கொடுக்கும் பல்பு ஒன்றையாவது இரவில் தூங்கும் பொழுது ஒளிர விட வேண்டும். ஒரு சிறிய வெளிச்சம் கூட இல்லாமல் படுக்கை அறையை அமைத்திருப்பது கணவன் மனைவிக்குள் விவாகரத்து வரை கொண்டு போய் சேர்க்கும் அபாயம் ஏற்படலாம். அது போல் பல்பு ஒளிர்ந்து ஒளிர்ந்து எறியக் கூடியவையாக இருக்கக் கூடாது. அதையும் பார்த்துக் கொள்ளுங்கள். படுக்கை அறையில் அமைத்திருக்கும் பல்புகள் ஒளிர்ந்து ஒளிர்ந்து மின்னக்கூடிய வகையில் நிச்சயம் இருக்கக் கூடாது.

bedroom-light

இது போல் உங்கள் படுக்கையறையில் நீங்கள் வைத்திருக்கும் ஒரு சில பொருட்களால் கூட கணவன் மனைவி இடையேயான உறவு சிக்கலில் போய் முடிவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே கூடுமானவரை மேற்கூறிய இந்த பொருட்களை எல்லாம் சரியாக கையாள்வதன் மூலம் உங்கள் பிரச்சனைகளை நீங்கள் குறைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்தச் செடியை இப்படி செய்தால் பணப்பிரச்சினை முற்றிலுமாக நீங்கி விடுமாம்! அதெப்படி?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான வாஸ்து சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.