பூஜை அறையில் சுவாமி படங்களோடு இந்த படங்களை மட்டும் தவறியும் வைத்து விடாதீர்கள்! தீராத பாவத்தை உண்டாக்கும்.

ஒரு பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்? என்கிற ஒரு சாஸ்திர வழிமுறை உண்டு. அந்த முறையின் படி பூஜை அறையை நாம் அமைத்துக் கொண்டால் நம்முடைய வாழ்வும் சிறப்பானதாக அமையும். இதில் வாஸ்து சாஸ்திரமும் இந்த திசையில் பூஜை அறை மற்றும் பூஜை அறையில் வைக்கப்படும் படங்களும் வைக்க வேண்டும் என்கிற விதி முறைகளைக் கூறுகிறது. இவ்வகையில் பூஜை அறையில் அமைக்க கூடாத சுவாமி படங்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

pooja-room

வாஸ்து முறைப்படி தெற்குத் திசையை தவிர மற்ற அனைத்து திசைகளிலும் சுவாமி படங்களை நீங்கள் உங்கள் வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். குறிப்பாக கிழக்கு திசையை நோக்கிய சுவாமி படங்களை அமைத்து இருப்பது யோகம் தரும் அமைப்பாகும். எந்த ஒரு நல்ல செயல்களை செய்யும் பொழுதும் கிழக்கு திசையில் நின்று செய்ய அச்செயல் நற்பலன்களை கொடுக்கும் என்பது ஐதீகம்.

பூஜை அறையில் அமைக்கப்பட்டிருக்கும் சுவாமி படங்களுக்கு இடையே இடைவெளிகள் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். ஒரு படத்துக்கும், இன்னொரு படத்துக்கும் இடையே இடைவெளி கட்டாயம் சிறிதளவு ஆவது இருக்க வேண்டும். ஒன்றோடு ஒன்று ஒட்டிய படி வைத்திருக்கக் கூடாது. சுவாமி படங்களின் பார்வை கீழ்நோக்கி பதியும்படி அமைக்கப்பட்டிருப்பது இன்னும் சிறப்பான பலன்களை கொடுக்கும்.

முந்தைய காலங்களில் நம் முன்னோர்கள் வீட்டில் சுவாமி படங்களை ஒரு சட்டம் அடித்து அதில் வைத்து கம்பியால் கட்டி தொங்க விட்டிருப்பார்கள். சாமி படங்கள் உடைய பார்வை பூமியில் பதியும்படியான அந்த அமைப்பை உருவாக்கி வைத்திருந்தார்கள். இதுவே சாமி படங்கள் இருக்கும் சரியான முறையாகும் என்கிறது சாஸ்திரம்.

- Advertisement -

சுவாமி படங்களுடன் கட்டாயம் நம் முன்னோர்களுடைய படத்தை சேர்த்து வைக்கக் கூடாது என்பதும் விதியாகும். என்னதான் உங்களுடைய முன்னோர்கள் உங்களுக்கு கடவுளை விட உயர்ந்தவர்களாக இருந்தாலும் கூட சுவாமி படத்திற்கு நிகராக அவர்களை வைத்திருப்பது சில சங்கடங்களை ஏற்படுத்தும் என்கிறது சாஸ்திரம். எனவே கூடுமானவரை இவற்றை தவிர்ப்பது உத்தமம். இறந்த நம் முன்னோர்களின் படங்களை தெற்கு திசையை நோக்கி வைப்பது முறையாகும். தெற்கில் தான் பித்ரு உலகம் இருப்பதாக புராணங்கள் கூறுகிறது.

babaji

அதே போல நீங்கள் வணங்கும் ஜீவாத்மாக்கள் ஆக விளங்கும் சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள், ஆன்மீக பெரியோர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்களுடைய படங்களை நீங்கள் சுவாமி படங்களுக்கு மேல் பகுதியில் வைக்கக் கூடாது. சுவாமி படங்களுக்கு கீழ் பகுதியில் தான் வைக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். சாமி படங்கள் வைத்திருக்கும் இடத்திற்கு மேலே எந்த ஒரு படங்களும் இடம் பெற்றிருக்க கூடாது. அது முன்னோர்கள் படமாக இருந்தாலும் சரி, மேற்கூறிய மகான்களின் படமாக இருந்தாலும் சரி. சாமி படங்களுக்கு கீழே வைத்து வணங்குவது தான் சிறப்பானது.

pooja-room

மேலும் சாமி படங்கள் அமைத்திருக்கும் இடங்களுக்கு மேற்பகுதியில் கண்ட கண்ட விஷயங்களை போட்டு வைத்திருப்பதும் தவறான ஒரு செயல் ஆகும். இதனால் வீட்டில் கெட்ட அதிர்வலைகள் உண்டாகும். சுவாமி படங்களுக்கு மேல் பகுதியில் எந்தவித பொருட்களும், எந்தவித மற்ற படங்களும் வைத்து இருக்கக் கூடாது. இவ்வகையில் உங்களுடைய பூஜை அறையை நீங்கள் அமைத்துக் கொண்டால் அனைத்தும் சுபமாக இருக்கும்.