இந்தப் பெயர்களை பெண்களுக்கு வைக்க வேண்டாம். தீராத கஷ்டம் வரும் என்று சாஸ்திரம் சொல்கிறது!

- Advertisement -

நம்முடைய குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது ஜாதகம் பார்த்து, எந்த எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டு பெயர் வைக்கவேண்டும் என்பதைத் தீர்மானிப்போம். ஆனால் பெயரை வைப்பதற்கு முன்பு இந்தப் பெயரை வைக்கலாமா? வேண்டாமா? என்று நம்மில் பலபேர் சிந்திப்பதே இல்லை. ஏனென்றால் அந்த பெயர்களின் மூலம் என்ன பாதிப்பு ஏற்படும் என்பது நமக்கு தெரியாது. எல்லா பெயர்களும் நல்ல பெயர்கள் தான் என்று ஒரு கூற்று இருந்தாலும், சில இயற்கையான விஷயங்களையும், அதன் குணாதிசயங்களையும் நம்மால் கட்டாயமாக மாற்றவே முடியாது. அதன் வரிசையில் என்னென்ன பெயர்களை பெண் குழந்தைகளுக்கு வைக்க கூடாது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

girl-baby1

மனித தர்ம சாஸ்திரப்படி பெண்களுக்கு சில பெயர்களை வைக்க கூடாது என்று ரிஷிகளால் சொல்லப்பட்டுள்ளது. இந்தப் பெயர்களை பெண்களுக்கு வைக்கக்கூடாது என்று தெரிந்தே யாரும் வைப்பதில்லை. தெரியாத பட்சத்தில் நாம் செய்த தவறுகள் தான் இது.

- Advertisement -

வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களை சந்தித்து, எத்தனையோ இழப்புகளை சந்தித்து வாழ்ந்த பத்தினிகளின் பெயர்களை பெண் குழந்தைகளுக்கு வைக்கும் போது, அதே கஷ்டத்தை இவர்களும் அனுபவிப்பார்கள் என்று கூறுகிறது சாஸ்திரம். எடுத்துக்காட்டாக அருந்ததி, அகல்யா, திரௌபதி, சீதா, இப்படிப்பட்ட பெயர்களை முடிந்தவரை வைக்காமல் இருப்பது நல்லது.

seetha

இதேபோல் சில மலைகளின் பெயர்களை வைக்க கூடாது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக விந்திய மலை. விந்தியா என்று பெயர் வைப்பார்கள். முடிந்தவரை மலைகளின் பெயர்களை பெண்களுக்கு பெயராக வைப்பதையும் தவிர்த்துக் கொள்வது நல்லது.

- Advertisement -

அடுத்ததாக நதிகளின் பெயர்களையும் வைக்கக்கூடாது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, காவேரி, சிந்து இப்படிப்பட்ட பெயர்களையும் முடிந்தவரை வைப்பதை தவிர்த்து கொள்ள வேண்டும். நதிகளின் பெயரை பெண்களுக்கு வைத்தால் கடைசிவரை கன்னியராகவே இருந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையும் இதில் அடங்கியுள்ளது.

river aaru

சில மலர்களின் பெயர்களையும் வைக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. மலர்களின் வாழ்நாள் என்பது, வாசம் வீசி ஓரிரு நாட்களில் முடிந்து விடும். ஆகையால் முடிந்தவரை மலர்களின் பெயர்களை வைப்பதை தடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இயற்கைக்கு, இயற்கையாகவே அமைந்த பெயர்களில் இருக்கின்ற சக்தியும் அதன் தாக்கமும், அந்தப் பெயரை வைத்திருப்பவர்களையும் தாக்கும் என்ற காரணத்தினால் தான் இந்த பெயர்களை வைக்க கூடாது என்று சொல்லியுள்ளார்கள். நமக்கு தெரிந்தவர்கள், சுற்றத்தார் நண்பர் இவர்களுள் இந்தப் பெயரை வைத்திருப்பவர்கள் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு வருவதைக் கூட நாம் கண்கூடாகவே கண்டிருப்போம்.

girl-baby

இப்படியிருக்க பிரச்சனைகள் இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு எதற்காக அந்த பெயரை வைக்கவேண்டும். சிலருக்கு எல்லாம் பிறக்கும் போது ஒரு பெயரை வைத்திருப்பார்கள். அவர்கள் வளர்ந்த பின், ஒரு பெயரை அவர்களாகவே மாற்றி வைத்துக் கொண்டிருப்பார்கள். பெயரை மாற்றிய பின்பு அவருக்கு யோகம் அடிக்கும். இப்படிப்பட்ட பல பேரையும் சந்தித்திருப்போம் அல்லவா? இதற்கு பல பிரபலங்களை கூட எடுத்துக்காட்டாக கூறலாம். எது எப்படி இருக்க, சில பெயர்களை வைத்தால் கஷ்டம் வரும் என்று தெரிந்தால் அதை வைக்காமல் தவிர்த்துவிட்டு, அர்த்தமுள்ள எத்தனையோ பெயர்கள் உள்ளது. அதில் எதையாவது ஒன்றை வைத்துக் கொள்ளலாமே!

இதையும் படிக்கலாமே
பஞ்சலோக நாணயத்தை வீட்டில் இப்படி வைத்தால் அதிர்ஷ்ட யோகம் பெருகி வருமாம் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Pen kuzhanthai peyar. Pen kuzhanthai peyar in Tamil. Pen kulanthai name. Pen kuzhanthai peyargal in Tamil. Kuzhanthai peyar vaithal.

- Advertisement -