கால் மிதியடியை கைப்படாமல் அழுக்குப் போகத் துவைக்க ஒரு வாட்டர் கேனில், இப்படி ஒரு சூப்பர் ஐடியாவா? இந்த ஐடியா முன்னால் வாஷிங்மெஷின் தலை குனிந்து நிற்கும்.

mat-cleaning
- Advertisement -

இந்த ஐடியாவை நீங்கள் தெரிந்து கொண்டால், துணி துவைப்பதில் உங்கள் வீட்டு வாஷிங் மெஷின் தோற்றுப் போகும். அந்த அளவுக்கு சூப்பரான ஒரு ஐடியாவை தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாஷிங் மெஷின் இல்லாமல் கைப்படாமல் கால்மிதிகளை சுலபமாக அழுக்குப் போக துவைப்பது எப்படி. இந்த டிப்ஸை வெறும் கால்மிதிகளுக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று கிடையாது. நம் தினமும் துவைக்கும் நம்முடைய ஆடைகளையும் இப்படி துவைத்தால் துணியில் இருக்கும் அழுக்கு சீக்கிரம் போகும். நிறைய பேர் வீடுகளில் கால் மிதியடியை சோப்பு தண்ணீரில் போட்டு நன்றாக ஊற வைத்துவிட்டு, அலசி எடுத்து வாஷிங் மிஷினில் போட்டு துவைப்பார்கள்.

சில பேருக்கு அது பிடிக்காது. கையால் பிரஷ் போட்டு, கல்லில் அடித்து துவைப்பார்கள். ஆனால் சில பேருக்கு ஆரோக்கிய பிரச்சனை காரணமாக கீழே அமர்ந்து துவைக்க முடியாத நிலை இருக்கும். பிரஷ் போட்டு அடித்து துவைக்க முடியாத நிலை. இப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் கால்மிதி அடியை சுலபமாக துவைக்க ஒரு பயனுள்ள வீட்டு குறிப்பு இருக்கு. அது என்ன பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

கால் மிதியடியை கைப்படாமல் துவைக்க சூப்பர் ஐடியா:
இந்த குறிப்பை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால், ஒரு பழைய வாட்டர் பாட்டில் தேவை. அது கொஞ்சம் ஸ்ட்ராங்கான பிளாஸ்டிகாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு கொக்கோகோலா பிளாஸ்டிக் பாட்டில், மாசா பாட்டில் இப்படி எடுத்துக்கோங்க. 1/2 லிட்டர் பாட்டில் இருந்தால் போதும். அதனுடைய மூடியை கழட்டி விடுங்கள். பாட்டிலுக்கு அடி பக்கம் இரண்டு இன்ச் வரை கட் பண்ணி எடுத்து தூக்கி போட்டுடுங்க.

இப்போது பாட்டிலை சுற்றி  கொஞ்சம் கேப் விட்டு விட்டு, ஆங்காங்கே ஓட்டை போட வேண்டும். ஒரு கம்பியை சூடு படுத்தி ஓட்டை போட்டுக்கோங்க. ஒரு நீளமான உருண்டையான குச்சி எடுத்துக்கோங்க. அந்த குச்சி வாட்டர் பாட்டில் வாய் பகுதிக்கு சரியாக டைட்டாக செட் ஆகும்படி இருக்க வேண்டும். அந்த குச்சை வாட்டர் பாட்டிலின் வாய் பகுதியில் நுழைத்து பாருங்கள். செட்டாகிவிட்டால், அப்படியே விட்டுடுங்க.

- Advertisement -

இல்லையென்றால் குச்சியையும், வாட்டர் கேன் வாய் பகுதியையும் ஒரு செலோபின் டேப் போட்டு முட்டிக்கணும். இல்லையென்றால் வாட்டர் கேன் வாய்ப்பகுதியை லேசாக சூடு படுத்தி அந்த குச்சில் ஒட்டிக் கொள்ளலாம். இப்போது சூப்பரான வாஷிங் மெஷின் தயார். எப்படின்னு கேக்குறீங்களா. சொல்றேன்.

ஒரு பக்கெட்டில் வெதுவெதுப்பான தண்ணீரை தாராளமாக ஊற்றுங்கள். அதில் துணி துவைக்கும் லிக்விட் அல்லது பவுடர் அல்லது ஷாம்புவோ, அல்லது வேறு ஏதாவது கிளீனிங் லிக்விட் உங்கள் விருப்பம் போல போட்டு நன்றாக கலந்து விடுங்கள். இரண்டு அல்லது மூன்று கால் மிதிக்கும் மேட்டை போட்டுவிட்டு, ஒரு மணி நேரம் ஊற விட்டு விடுங்கள்.

- Advertisement -

அடுத்துநாம் தயார் செய்து வைத்திருக்கிறோம் அல்லவா குச்சியில், வாட்டர் கேனை சொருக்கி, அதை அப்படியே அந்த மேட்டுக்கு உள்ளே விட்டு குத்தி குத்தி கொஞ்சம் சுற்றியபடி எடுக்க வேண்டும். (வாஷிங் மெஷின் இந்த பக்கமும் அந்த பக்கமும் சுத்தும் இல்லையா அதே போல.) இப்படி செய்தால் அழுக்கு போகுமா. ஐந்து நிமிடத்தில் இருந்து ஏழு நிமிடங்கள் தயார் செய்து வைத்திருக்கும் குச்சியை வைத்து அந்த ஊற வைத்திருக்கும் தண்ணீரில் ஊறிக் கொண்டிருக்கும் மேட்டை குத்தி குத்தி சுழற்றக எடுக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: எண்ணெய் பிசுபிசுப்போடு இருக்கும் உங்க வீட்டு ஸ்டவ்வை, ஒரு சொட்டு தண்ணீர் கூட ஊற்றாமல், 5 நிமிடத்தில் பளிச்சு பளிச்சென மாற்றலாம். இதோ ஒரு சூப்பர் ஐடியா.

நாம் தயார் செய்திருக்கும் வாட்டர் கேனில் போட்டிருக்கும் ஓட்டை பகுதி, சொரசொரப்பாக இருக்கும். அடி பகுதி சொரசொரப்பாக இருக்கும். ஒரு வாஷிங் மெஷின் சுழன்று துணிகளில் இருக்கும் அழுக்கை எப்படி நீக்குகிறதோ, அதே போல இந்த வாட்டர் கேனும் உங்கள் கால்மிதி அடியில் இருக்கும் எல்லா அழுக்கையும் சுத்தமாக நீக்கி தரும். வாஷிங் மெஷின் தண்ணீர் எப்படி தாராளமாக இருக்கிறதோ, அதேபோல அகலமான டப்பில் தாராளமாக தண்ணீர் ஊற்றி இரண்டு அல்லது மூன்று மேட் போட்டு இப்படி துவைத்து தான் பாருங்களேன். பிறகு இரண்டு மூன்று முறை நல்ல தண்ணீரை ஊற்றி அலசி விடலாம். ட்ரை பண்ணி பார்த்தா ரிசல்ட் என்னவாக இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும். டிப்ஸ் பிடிச்சவங்க ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -