எண்ணெய் பிசுபிசுப்போடு இருக்கும் உங்க வீட்டு ஸ்டவ்வை, ஒரு சொட்டு தண்ணீர் கூட ஊற்றாமல், 5 நிமிடத்தில் பளிச்சு பளிச்சென மாற்றலாம். இதோ ஒரு சூப்பர் ஐடியா.

gas
- Advertisement -

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு இந்த கேஸ் ஸ்டவ்வை சுத்தம் செய்வது பெரிய வேலை. அதிலும் வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால், கேட்கவே வேண்டாம். கேஸ் ஸ்டவ் எண்ணெய் பிசுபிசுப்போடு அப்படியே இருக்கும். வாரத்தில் ஒரு நாளோ, இரண்டு வாரத்திற்கு ஒரு நாளோ, தான் அந்த ஸ்டவ்வை துடைத்து சுத்தம் செய்வார்கள். எண்ணெய் பிசுபிசுப்பு அதிகமாக உள்ள ஸ்டவ்வை, குறைந்த நேரத்தில் தண்ணீர் எதுவும் சேர்க்காமல் சுத்தம் செய்வது எப்படி. அது மட்டுமில்லாமல் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் போது நம்ம வீட்டு ஸ்டவ் சீக்கிரமே துருப்பிடித்து பழுதாக வாய்ப்புகள் உள்ளது.

தண்ணீர் இல்லாமல் இந்த மெத்தடை முயற்சி செய்து பாருங்கள். உங்களுடைய ஸ்டவ் சுத்தமாவதோடு சேர்த்து, 10 வருடத்திற்கு வரக்கூடிய ஸ்டவ், இன்னும் கொஞ்சம் கூடுதலாக 2 வருடத்திற்கு சேர்த்து உழைக்கும். வாங்க இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

தண்ணீர் இல்லாமல் கேஸ் ஸ்டவ் சுத்தம் செய்யும் முறை:
முதலில் உங்கள் கேஸ் ஸ்டவ்வின் மேலே சிந்தியிருக்கும் பொருட்களை எல்லாம் துடைத்து எடுக்க வேண்டும். கூடவே, அந்த எண்ணெய் பிசுபிசுப்பையும் துடைத்து எடுக்க வேண்டும். ஒரு நியூஸ் பேப்பர் எடுத்து மடித்து கேஸ் ஸ்டவ்வை முழுமையாக துடைத்து எடுத்தால், பாதி எண்ணெய், மேலே கொட்டி இருக்கக்கூடிய தூசி தும்பு பிசுக்கு நியூஸ் பேப்பரில் ஒட்டி வந்து விடும். மேலே சிந்திஇருக்கக் கூடிய பொருட்கள் எல்லாம் இப்போது சுத்தமாக இருக்கும்.

அடுத்தபடியாக இந்த ஸ்டவ்வுக்கு மேலே கோதுமை மாவு வெறும் 1 ஸ்பூன் அளவு தூவி விட வேண்டும். உங்கள் கையாலேயே இந்த கோதுமை மாவை எல்லா இடங்களிலும் பரப்பி விட்டு, இரண்டு நிமிடம் தேய்த்துக் கொடுத்தாலே போதும். ஸ்டவ்வுக்கு மேலே இருக்கும் அழுக்கு எல்லாம் எண்ணெய் பிசுபிசுப்பு எல்லாம் சுத்தமாக நீங்கிவிடும். குழம்பு சிந்திருக்கக்கூடிய இடத்தில் கூடுதல் கவனம் எடுத்து இந்த கோதுமை மாவை வைத்து கையாலே தேய்க்கலாம்.

- Advertisement -

முடியாது என்றால் ஒரு ஸ்பான்ச் நார் வைத்துக் கூட இந்த கோதுமை மாவை ஸ்டவ்வுக்கு மேல் பக்கத்தில் எல்லாம் தேய்ந்துவிடலாம். பிறகு ஒரு சின்ன காட்டன் துணியை வைத்து தூவி இருக்கும் இந்த கோதுமை மாவை அப்படியே துடைத்து எடுத்து விடுங்கள். ஸ்டவ் முழுமையாக சூப்பராக சுத்தமாகிவிடும். இருந்தாலும் நமக்கு ஒரு மன திருப்தி கிடைக்காது. அந்த கோதுமை மாவு ஆங்காங்கே வெள்ளை வெள்ளை திட்டுக்களாக தெரியும் அல்லவா.

இதையும் படிக்கலாமே: எண்ணெய் பிசுக்கு படிந்து நிறம் மாறி போன பூஜை பாத்திரங்களை கூட நொடியில் பொழுதில் பளிச்சென்று மாற்ற எந்த இரண்டு பொருள் இருந்தால் போதும்.

ஒரு சின்ன கிண்ணத்தில் வினிகர் 1 மூடி, தண்ணீர் 1 மூடி, ஊற்றி ஒரு சின்ன காட்டன் துணியில் நனைத்து, அந்த துணியை வைத்து ஸ்டவ் முழுவதும் தொடச்சுக்கோங்க. சூப்பரான பளபளப்புடன் ஸ்டவ் தயார். குறிப்பை படிப்பதற்கு வேண்டும் என்றால் நீளமாக தெரியலாம். இந்த பிராசஸை செய்து முடிக்க 5 லிருந்து 7 நிமிடங்கள் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல ஸ்டவ்வுக்கு பின்பக்கம் இருக்கும் டைல்ஸ் பகுதி, ஸ்டவ்க்கு கீழே இருக்கும் மேடை இந்த பகுதியையும் சுத்தம் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இல்லத்தரசிகளுக்கு இந்த குறிப்பு பயனுள்ள வகையில் அமைந்தால் முயற்சி செய்து பார்க்கவும்.

- Advertisement -