தோசைக்கல்லில் தோசை ஒட்டாமல் வர டிப்ஸ்

dosa kal ice cube
- Advertisement -

எல்லார் வீட்டிலும் காலை வேலைக்கு செல்லும் நேரம் ஆகட்டும் அல்லது இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு செய்யும் எளிமையான ஒரு டிபன் வகை என்றால் அது தோசை தான். என்ன தான் ஆரோக்கியமான இட்லி இருந்தாலும் கூட பாத்திரத்தை சுத்தப்படுத்துவது முதல் மாவு அரைப்பது வாங்குவது என அனைத்திலும் சுலபமான வேலை இந்த தோசை ஊற்றுவது தான்.

தோசை ஊற்றுவது எப்படி சுலபமான வேலையோ அதே போல அதை நான் ஸ்டிக்கில் ஊற்றுவது தான் இன்னும் சுலபமான வேலை. இப்படி நினைத்து தான் அனைவர் வீட்டிலும் நான்ஸ்டிக் இன்று அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஆரோக்கியத்தை பொருத்த வரையில் நான் ஸ்டிக் பயன்படுத்துவது நல்லதல்ல.

- Advertisement -

சரி ஆரோக்கியமாக தோசை சாப்பிட வேண்டும் என்று நினைத்து இரும்பு போன்றவற்றை மற்ற தோசை கல்லை பயன்படுத்தலாம் தான். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் உண்டு. சில நேரங்களில் தோசை வரவே வராது அதுமட்டுமின்றி அதை பழக்குவது முதல் பயன்படுத்துவதில் இருந்து அனைத்தையுமே கொஞ்சம் சிரமம் தான்.

இப்படி யோசிப்பவர்களுக்காக தான் இந்த பதிவு பழைய தோசை கல்லாக இருந்தாலும் சரி புதிய தோசைக்கல் இருந்தாலும் சரி எளிமையாக சுத்தப்படுத்தி சுலபமாக தோசை ஊற்ற முடியும். அது எப்படி என்று வீட்டுக் குறிப்பு குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

பழைய தோசை கல்லை சுத்தம் செய்யும் முறை

முதலில் அடுப்பில் நீங்கள் பயன்படுத்தும் தோசை கல்லை வைத்து விடுங்கள. இதற்கு நான் ஸ்டிக்கை தவிர மற்ற அனைத்து கல்லும் இந்த முறையில் சுத்தப்படுத்தலாம். கல் நன்றாக சூடானவுடன் அதில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடுங்கள்

இந்த தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது அதில் கல் உப்பு சேர்த்த பிறகு சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து விட்டு எலுமிச்சை தோலை வைத்து கல்லை நன்றாக தேய்க்க வேண்டும். இதற்கு நேரடியாக கைகளை வைத்து தேய்க்காமல் கத்தி,கம்பி, ஸ்போர்க்ஸ், போன்றவற்றை வைத்து தேயுங்கள். ஏனெனில் தோசைக் கல் சூடாக இருக்கும்.

- Advertisement -

அதன் பிறகு அந்த தண்ணீரை ஊற்றி விட்டு மீண்டும் இதே முறையில் தண்ணீர் உப்பு எலுமிச்சை சாறு கலந்து கொதிக்க விட்டு அந்த தோசை கல்லை அப்படியே கீழே இறக்கி ஊற்ற விடுங்கள். ஒரு வேளை உங்களுடைய தோசைக்கல் அதிக துருவேறி இருந்தால் மட்டும் கம்பி நார் வைத்து தேயுங்கள் இல்லை என்றால் முதலில் சொன்ன முறையே போதும்.

இது எல்லாம் செய்த பிறகு ஒரு முறை தோசை கல்லை தண்ணீர் ஊற்றி அலசி விடுங்கள். இப்போது மீண்டும் தோசை கல்லை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பாதியாக நறுக்கி அதை தொட்டு கல் முழுவதுமாக தேய்த்து விடுங்கள் இப்போது கல் நன்றாக சூடாக இருக்கும். இதில் தோசை ஊற்றுங்கள் தோசை நன்றாக வரும்.

தோசைக் கல்லை சுத்தப்படுத்த இன்னொரு முறையும் பயன்படுத்தலாம். அடுப்பில் தோசை கல் வைத்து சூடான உடன் இரண்டு ஐஸ் கட்டிய தோசை கல்லில் போடுங்கள். இந்த ஐஸ்கட்டி உருகி வரும் போது கல்லில் உள்ள அழுக்குகளை எல்லாம் சேர்த்து உருக்கி விடும். அதன் பிறகு லேசாக கம்பி நார் வைத்து தேய்த்தால் கல் சுத்தமாகும்.

இது எளிமையான முறை தான் ஆனால் அதிக அளவு துருவிய தோசை கல்லுக்கு இந்த முறை சரி வராது. அதே போல் தோசை ஊற்றி திருப்பி போடும் போது ஸ்டவ்வை மிதமான தீயில் வைத்து வேக விட வேண்டும். அதன் பிறகு அடுத்த தோசை ஊற்றும்போது அடுப்பை வேகமாக வைக்க வேண்டும். அப்போது தான் கல் மிதமான சூட்டில் இருக்கும் தோசை ஊற்றவும் நன்றாக வரும்.

இதையும் படிக்கலாமே: செம்பு பாத்திரங்களை சுத்தம் செய்வது எப்படி?

அதுமட்டுமின்றி தோசை மாவு ஊற்றி சிறிதளவு வெந்த பிறகு தான் எண்ணெய் ஊற்ற வேண்டும். அப்போது தான் தோசை நல்ல மொறு மொறு வென்று வரும். தோசை கல்லை எளிமையாக சுத்தப்படுத்தவும் தோசை மொறு மொறு என்று ஊற்றவும் இந்த குறிப்பு உங்களுக்கு பயன்படும் என நினைத்தால் பயன்படுத்தி பலன் அடையலாம்.

- Advertisement -