தோசை கல்லில் மாவு ஒட்டி கொண்டு தோசை வராமல் இருப்பது சாதாரணமாக எல்லோரும் சந்திக்க கூடிய ஒரு பிரச்சனை தான். இது காலைல வேலைக்கு கிளம்பும் போது இது போல நடந்தால், இந்த சாதாரண பிரச்சனை கூட பெரிய பூதாகரமான பிரச்சனையாக மாறி விடும். அந்த அவசர நேரத்துல தோசை வராமல், அது கூட போராடி டென்ஷன் ஆகி மற்ற வேலையும் சொதப்பி அன்னைக்கு நாள் முழுசுமே வீணாக்கிட இந்த ஒரே ஒரு தோசை போதும். அத சரி பண்ண ஈசியா ஒரு டிப்ஸ்.
முதல்ல மாவு இப்படி ஒட்டிக்கிட்டு தோசை வராமல் இருப்பதற்கான காரணங்களை தெரிஞ்சுகிட்டா, இந்த பிரச்சனையை வருவதற்கு முன்னாடியே சரி பண்ணிக்கலாம் இல்லையா அந்த காரணங்கள் என்னன்னு பாத்துக்கலாமா?.
முதல்ல ஃப்ரிட்ஜில் இருந்து மாவு எடுத்த உடனே தோசை ஊத்தவே கூடாது. அப்படி ஊத்துனா கண்டிப்பா இந்த மாதிரி ஆக வாய்ப்பு அதிகம். அதனால தோசை ஊற்ற கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியே மாவுவை எடுத்து வெளி வைச்ச பிறகு ஊத்தினா தோசை நல்ல வரும். இது ரொம்ப முக்கியமான விஷயம்.
அடுத்தது நம்ம சப்பாத்தி, பரோட்டா இது போல மாவு அதிகமா போட்டு திரட்டின பொருளை போட்டு செய்தாலோ, மீன் வறுத்து இருந்தாலோ, இதுக்கு அப்புறம் தோசை ஊத்துனா அவ்வளவு சீக்கிரத்துல கல்லுல இருந்து வராது, திக் பிரண்ட்ஸ் மாதிரி ஒட்டிக்கிட்டு இருப்பாங்க. இதுக்கெல்லாம் காரணம் இந்த பொருளை செய்யறதுக்கு அடுப்ப அதிகமான தீயில வைச்சி தான் செய்வோம். இதனால கல்லு முறுகிப் போய் இருக்கும் மறுபடியும் நீங்க தோசை ஊத்தும் தோசை வராது. ஏன்னா தோசைக்கு அவ்வளவு தீ பட்ட கல் தேவைப்படாது அந்த நேரத்துல மாவு புடிச்சுக்கும். (தனி தனியா தோசை கல்லு வைச்சு இருக்கவங்களுக்கு இந்த கவலை இல்ல)
மூணாவது விஷயம் இதுக்கு நம்ம கவன குறைவு தான் காரணம். தோசை சுட்டு முடிச்ச பிறகு அடுப்பை ஆஃப் பண்ண மறந்துடுவோம். அப்போ கல்லு அதிக சூடாகிடும் இதுக்கு அப்புறம் ஊற்றும் தோசையும் சரியா வராது. இதெல்லாம் சின்ன சின்ன விஷயங்கள் தான் இது தெரிஞ்சுக்கிட்டா ஈசியா சரி பண்ணலாம். அப்புறம் எதுக்கு டிப்ஸ் அப்படின்னு யோசிக்கிறீர்களா? இதெல்லாம் பண்ண பிறகும் தோசை வரலைன்னா என்ன பண்ணுவீங்க அதையும் தெரிஞ்சிக்கலாம் இல்ல.
சப்பாத்தி, மீன், வறுத்த பிறகு தோசை ஊத்தும் போது ஒட்டாமல் வருவதற்கு என்ன செய்கிறது என்பது தெரிஞ்சுக்கலாம். முதல்ல நீங்க சப்பாத்தி, மீன் வறுத்த பிறகு தவாவை வைக்கும் போது அடுப்பில் வைச்சி சூடான பிறகு, அதற்கு மேல் கொஞ்சம் தண்ணீர் தெளித்து அந்த தண்ணியே கீழ ஊத்திட்டு, மறுபடியும் மிதமான தீயில் தோசை கல்லை வெச்சு எண்ணெய் தேய்ச்சு அதுக்கப்புறம் தோசை ஊத்த ஆரம்பிச்சா கண்டிப்பா தோசை ஒட்டாமல் வரும்.
இதெல்லாம் எதுவுமே செய்யல ஆனாலும் தோசை ஊத்த வரல கல்லுல பிடிச்சிட்டு இருக்குன்னா, அந்த சமயத்துல இதே தான் முதல்ல கல்ல சூடு பண்ணிக்கோங்க கொஞ்சம் தண்ணி தெளிச்ச பிறகு துணி வைச்சி துடைச்சு எடுத்துட்டு (கல்லி சூடா இருக்கும் கவனம்) மறுபடியும் கல்லை சூடாக்கி நல்லா எண்ணெயை தேச்சி விட்டுடுங்க. எண்ணெய் தேய்ச்சு சூடான பிறகு திரும்பவும் தண்ணீர் தெளித்து அதையும் ஒரு காட்டன் துணி வச்சி நல்லா துடைச்சிட்டு, அதுக்கு அப்புறம் நீங்க எப்பவும் போல ஊத்தினா, கண்டிப்பா தோசை ஒட்டாம வரும்.
இவ்வளவு தாங்க கல்லில் மாவு ஒட்டாம தோசை ஊத்தி எடுக்கிறது எல்லாம் ஒரு விஷயமே கிடையாது. இனி டென்ஷன் ஆகாம வேலைய பாருங்க.