டபுள் சைட் டேப் இந்த விஷயங்களுக்கெல்லாம் உபயோகப்படுத்த முடியுமா?

double side tape
- Advertisement -

வீட்டில் முக்கியமாக சில பொருட்கள் இருக்க வேண்டும் அந்த பொருட்களை வைத்து நம்முடைய அவசர தேவைக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று சில பொருட்களை நாம் வைத்திருப்போம் அந்த பொருட்களின் வரிசையில் இனிமேல் டபுள் சைட் டேப்பையும் வைத்திருக்க வேண்டும் இந்த வீட்டு குறிப்பு குறித்த பகுதியில் டபுள் சைட் டேப்பை வைத்து என்னென்ன அவசர தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று பார்ப்போம்.

திடீரென்று நாம் அணிந்திருக்கும் உடை கிழிந்து விட்டால் இந்த டபுள் சைட் டேப்பை சிறிதாக வெட்டி கிழிந்த துணியை ஒட்ட வைத்து வீட்டிற்கு வந்து விடலாம். அதேபோல் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுது நாம் புடவைக்கு ஏற்றார் போல் நகைகளை அணிந்து கொண்டு செல்வோம். அப்படி அணிந்து கொண்டு செல்லும் நகைகள் ஒரே இடத்தில் இருக்காமல் அங்குமிங்கும் ஆக நகர்ந்து கொண்டே இருக்கும்.

- Advertisement -

அதை சரி செய்வதே ஒரு பெரிய வேலையாக இருக்கும் அதற்கு பதிலாக அந்த நகைக்கு பின் சிறிது டேப்பை ஒட்டி நம் புடவையின் மேல் ஒட்டிவிட்டால் அந்த நகை எந்த பக்கமும் போகாமல் ஒரே இடத்தில் நிலையாக இருக்கும். நம்முடைய குழந்தைகளுக்கும் இதே போல் நெத்தி சுட்டி வைக்கும் பொழுது இப்படி ஒட்டி விட்டால் அது அப்படியே நிரந்தரமாக இருந்து விடும்.

வீட்டில் இருக்கும் கால்மிதி அனைவரும் நடந்து வரும்பொழுது ஓரமாக சென்றுவிடும் அல்லது சில நேரங்களில் அந்த கால்மிதி வழுக்கிவிட்டு கீழே விழுவதற்குரிய வாய்ப்புகளும் இருக்கும். இந்த சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு கால்மிதிக்கு கீழ் நான்கு மூலைகளிலும் ஒரு இன்ச் அளவிற்கு டபுள் சைட் டேப்பை ஒட்டி தரையில் ஒட்டிவிட்டோம் என்றால் கால் மிதி எங்கும் செல்லாமல் அதே இடத்தில் இருக்கும். வழுக்கி விழுவதற்குரிய வாய்ப்புகளும் இருக்காது.

- Advertisement -

டைரி எழுதும் பழக்கம் இருப்பவர்களோ அல்லது கணக்கு எழுதுவதற்காக டைரி வைத்திருப்ப வர்கள் டைரியில் ஏதாவது எழுத வேண்டும் என்று நினைக்கும் பொழுது பேனாவை தேடுவார்கள். அவ்வாறு தேடுவதற்கு பதிலாக டைரியின் பக்கவாட்டில் ஒரு சிறிய டேப்பை ஒட்டி அதன் மேல் நம் பேனாவை ஒட்டி வைத்து விட்டோம் என்றால் டைரியுடன் பேனா எப்பொழுதும் இருக்கும் எந்த இடத்திலும் மிஸ் ஆவதற்கு வாய்ப்புகள் இல்லை இதே போல் தேவையில்லாத விசிட்டிங் கார்டுகள் இருக்கும்.

அந்த விசிட்டிங் கார்டுகளின் ஒரு பக்கம் சிறிது டேப்பை ஒட்டி கேலண்டரில் ஒட்டி விட வேண்டும் மற்றொரு பக்கத்தில் நாம் பேனாக்களை மாட்டி வைத்து பேனா ஸ்டாண்டாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதே போல் கதவிற்கு பின்னால் சிறிது டேப்பை ஒட்டி அதன் மேல் கிளிப்பை மாட்டி வைத்துக் கொண்டால் அதில் அதை நாம் செயின் மாட்டும் ஸ்டாண்டாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: கரப்பான் பூச்சியை ஒழிக்க எளிய குறிப்புகள்.

இந்த எளிமையான குறிப்புகளை பின்பற்றி பயன் அடையலாம்.

- Advertisement -