அம்பேத்கர் பெற்ற பட்டங்கள் | Dr Ambedkar how many degrees complete in Tamil

dr Ambedkar how many degrees complete in tamil
- Advertisement -

டாக்டர். அம்பேத்கர் பெற்ற பட்டங்கள்

ஜனநாயக ரீதியிலான ஆட்சி நடைபெறும் நாட்டிற்கு அதன் அரசியல் அமைப்பு சட்டம் தான் முதுகெலும்பு. அந்த வகையில் 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேய காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றி புகழ்பெற்றவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தவரான டாக்டர். அம்பேத்கார் Dr (Ambedkar how many degrees complete in Tamil) அவர்கள்.

ambedkar-1

அம்பேத்கர் பெற்ற பட்டங்கள் பட்டியல்

ஆண்டு பயின்ற இடம்பெற்ற கல்வி பட்டம்
1902சத்தாரா, மகாராஷ்டிராஆரம்பக் கல்வி
1907எலிபின்டஸ்டோன் உயர்நிலை பள்ளிமெட்ரிகுலேஷன் கல்வி
1909எலிபின்டஸ்டோன் கல்லூரிஇன்டர்மீடியட் கல்வி
1913எலிபின்ட்ஸ்டோன் கல்லூரிபி. ஏ. பட்டம்
1915எலிபின்ட்ஸ்டோன் கல்லூரிஎம். ஏ. பட்டம்
1917கொலம்பியா பல்கலைக்கழகம், அமேரிக்காபி. எச். டி எனம் முனைவர் பட்டம்
1920லண்டன் சட்டக் கல்லூரி, இங்கிலாந்துபாரிஸ்டர் பட்டம்
1921லண்டன் பொருளாதார பள்ளி, இங்கிலாந்துஎம்.எஸ்.சி பட்டம்
1923 லண்டன் பொருளாதார பள்ளி, இங்கிலாந்துடி. எஸ். சி எனப்படும் டாக்டர் ஆப் சைன்ஸ் பட்டம்
1952கொலம்பியா பல்கலைக்கழகம், அமேரிக்காகௌரவ முனைவர் பட்டம்
1953உஸ்மானியா பல்கலைக்கழகம், ஹைதராபாத்கௌரவ முனைவர் பட்டம்

- Advertisement -

இந்தியாவில் சமூக ரீதியிலான பிரிவினைகள் அதிகமாக இருந்த காலகட்டத்தில் பிறந்தவரான டாக்டர். அம்பேத்கார் அவர்கள் வறுமை நிலையையும், சாதிய ரீதியிலான ஒடுக்குமுறைகளையும் கடந்து தனது கல்வி அறிவு மற்றும் திறமை காரணமாக இந்திய நாடு போற்றும் அளவிற்கான வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நபராக உயர்ந்த, மிகச்சிறந்த படிப்பாளியாக திகழ்ந்த அம்பேத்கர் அவர்கள் தனது வாழ்நாள் பெற்ற கல்வி பட்டங்கள் என்னென்ன என்பது குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ambedkar-4

அம்பேத்கர் கல்வி தகுதி

1902 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாவட்டத்தில் இருக்கின்ற சத்தாரா எனும் ஊரில் ஆரம்பக் கல்வி படிப்பை தொடங்கினார். 1907 ஆம் ஆண்டு மும்பை நகரில் இருக்கின்ற எலிபின்டஸ்டோன் உயர்கல்வி பள்ளியில் மெட்ரிகுலேஷன் படிப்பை பயின்று முடித்தார். 1909 ஆம் ஆண்டு மும்பை நகரில் இருக்கின்ற எலிபின்டஸ்டோன் கல்லூரியில் அக்காலத்திய இன்டர்மீடியட் கல்வியை முடித்தார்.

- Advertisement -

அம்பேத்கர் பயின்ற கல்வி நிறுவனங்கள்

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் 1913 ஆம் ஆண்டு மும்பை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட எலிபின்ட்ஸ்டோன் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் அரசியல் துறையில் பி.ஏ. எனப்படும் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். 1915 ஆம் ஆண்டு அதே கல்லூரியில் மானுடவியல், சமூக பொருளாதாரம், அரசியல் மற்றும் வரலாற்று தத்துவவியல் ஆகிய பாடப் பிரிவுகள் கொண்ட துறையில் எம். ஏ. எனப்படும் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார்.

அம்பேத்கர் படிப்பு

1917 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரத்தில் இருக்கின்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பி. எச். டி எனப்படும் முனைவர் பட்டத்தை டாக்டர் அம்பேத்கார் அவர்கள் பெற்றார். 1920 ஆம் ஆண்டு லண்டன் சட்டக் கல்லூரியில் சட்டவியல் படித்து, பாரிஸ்டர் பட்டத்தை பெற்றார்.

- Advertisement -

republic day speech in Tamil - Br Ambedkar

1921 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கார் அவர்கள் லண்டன் பொருளாதார பள்ளியில் எம்.எஸ்.சி எனப்படும் முதுகலை கல்வியை முடித்து பட்டம் பெற்றார். 1923 ஆம் ஆண்டு லண்டன் பொருளாதார பள்ளியில் பொருளாதார பாடப்பிரிவில் டி. எஸ். சி எனப்படும் டாக்டர் ஆப் சைன்ஸ் பட்டம் பெற்றார்.

Dr ambedkar education qualification in Tamil

டாக்டர் அம்பேத்கார் இரண்டு பல்கலைக்கழகங்களில் கௌரவ டாக்டர் பட்டங்களை பெற்றுள்ளார். 1952 ஆம் ஆண்டு அம்பேத்கர் அவர்கள் முனைவர் பட்டம் பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகம் இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியதற்காக டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு கௌரவ முனைவர் பட்டத்தை வழங்கியது.

1953 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் ஹைதராபாத் நகரில் இருக்கின்ற உஸ்மானியா பல்கலைக்கழகம் டாக்டர். அம்பேத்கார் (Ambedkar how many degrees complete in Tamil) தனது வாழ்நாளில் புரிந்த சாதனைகளுக்காகவும் மற்றும் அவரது தலைமை பண்பை போற்றும் விதமாகவும் அவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

- Advertisement -