பூஜையறையில் இந்த 1 விஷயத்தை செய்வதால் துன்பங்கள் நீங்கி சுபீட்சம் பெருகும்! அது என்ன விஷயம் தெரியுமா?

murugan-om

பூஜை அறை என்பது இறைவனுக்கு உரிய இடமாகும். அந்த இடத்தில் நாம் செய்ய வேண்டிய முக்கிய விதிமுறைகளை சரியாக கடைபிடித்தாலே நம் வாழ்வு சிறப்பானதாக இருக்கும். பூஜை அறையை எப்பொழுதுமே தெற்கு நோக்கியபடி தப்பி தவறியும் வைக்கவே கூடாது. மற்ற எந்த திசையில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். தெற்கு நோக்கிய திசையில் பூஜை அறையும் இருக்கக்கூடாது, பூஜைக்கு உரிய படங்களும் இருக்கக்கூடாது. மற்ற மூன்று திசைகளில் எந்த திசையை வேண்டுமானாலும் நாம் தேர்ந்தெடுக்கலாம். அதில் குறிப்பாக கிழக்கு திசை விசேஷமானது.

pooja-room

இது போல் நிறைய விஷயங்களை சாஸ்திரப்படி நாம் கடைபிடிக்கும் பொழுது அந்த வீட்டில் சுபீட்சம் நிலைத்து இருக்கும். அவ்வகையில் நாம் பின்பற்ற இருக்கும் இந்த 1 விஷயமும் வீட்டின் சுபீட்சத்திற்கு வழிவகுக்கும். அதை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

பூஜை அறையில் கட்டாயமாக ஒரு கோலமாவது நாம் போட்டிருக்க வேண்டும். கோலம் போடும் பொழுது அதை சாக்பீஸ் கொண்டு போடாமல், கோலமாவு கல் பயன்படுத்தி போடுவது மிகவும் நல்லது. முடிந்தால் பச்சரிசி மாவில் கோலம் போட்டு வைப்பது சிறந்த பலன்களை கொடுக்கும். அப்படி கோலம் போடும் பொழுது உங்களுக்கு ஸ்ரீசக்ரம் வரைய தெரிந்தால் நீங்கள் ஸ்ரீ சக்கரம் வரைந்து வைக்கலாம். தெரியாதவர்கள் ‘ஓம்’ என்கிற பிரணவ மந்திரத்தை வரைந்து வைப்பது விசேஷ பலன்கள் கொடுக்கும்.

om-mantra

வீட்டில் லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம் போன்றவைகள் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டே இருப்பது அந்த வீட்டின் செல்வ வளத்தை அதிகரிப்பதற்கு உதவுவதாகக் கூறப்படுகிறது. அதே போல் ‘ஓம்’ என்கிற ப்ரணவ மந்திரத்தை பூஜை அறையில் ஒலிக்க விடுவதும் பல நல்ல விஷயங்களை நமக்கு கொடுக்கும் ஆற்றல் படைத்துள்ளது. தமிழ் கடவுளாக விளங்கும் முருகப் பெருமானுடைய இந்த பிரணவ மந்திரம் உச்சரிக்கும் பொழுதே உடலுக்குள் ஒருவித மாற்றம் நிகழ்வதை நீங்கள் உன்னிப்பாக கவனித்து பாருங்கள். அடி நாதத்திலிருந்து, நம் கபாலம் வரை இதனுடைய ஒலி அலைகள் பரவுவதை உணரலாம்.

- Advertisement -

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரம் பூஜை அறையில் கோலமாக போட்டு வைப்பதால் வீட்டில் சுபீட்சம் நிலைத்து நிற்கும். அது மட்டுமல்லாமல் பூஜையறையில் எப்பொழுதும் உங்களுக்கு பிடித்த கந்த சஷ்டி கவசம், மற்ற ஆன்மீக புத்தகங்கள், தெய்வீக பாசுரங்கள் வைத்திருப்பது மனதை தூய்மை படுத்துவதற்கு உதவி செய்யும்.

murugan-silai-abishegam

நமக்கு எப்பொழுதெல்லாம் மன சஞ்சலம் ஏற்படுகிறதோ! அப்பொழுதெல்லாம் பூஜையறையில் அமைதியாக இரண்டு நிமிடம் அமர்ந்து அந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்து, கண்ணை மூடிக்கொண்டு ஒரு பக்கத்தைத் திருப்பினால், அதிலிருக்கும் வாசகத்தை உங்களுக்கான வாசகமாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மனதில் நினைத்த கேள்விக்கு தேவையான விடையை அந்த பதிவு உங்களுக்கு நிச்சயமாக கொடுக்கும். இதை ஒவ்வொருவரும் பின்பற்றினால் உங்களுடைய இந்தக் கேள்விகளுக்கான விடைகள் சுலபமாகவே கிடைத்துவிடும்.

flower-poo

சுவாமி படங்களுக்கு எப்பொழுதும் வாசனை மிக்க மலர்களை தான் சாற்ற வேண்டும். ஒரு பொழுதும் வாசனை இல்லாத மலர்களை சாற்றி விடாதீர்கள். அது போல் முன்னோர்களுடைய படத்தை பாசத்தின் காரணமாக சிலர் தெய்வத்துடன் சேர்த்து வைக்கிறார்கள். தனியாக வைப்பது தான் முறையாகும். சில சாஸ்திர நியதிகளை இவ்வாறு மீறுவது அவ்வளவு நல்லதல்ல.

இதையும் படிக்கலாமே
நினைத்த நேரத்தில் பணவரவை கொடுக்கும் பச்சை குங்குமத்தை இப்படி மட்டும் பயன்படுத்தினால் அதிர்ஷ்டம் பெருகுமாம்! குபேர சம்பத்தை கொடுக்கும் பச்சை குங்குமத்தின் மகிமைகள் நீங்களும் தெரிஞ்சிக்கணுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.