நினைத்த நேரத்தில் பணவரவை கொடுக்கும் பச்சை குங்குமத்தை இப்படி மட்டும் பயன்படுத்தினால் அதிர்ஷ்டம் பெருகுமாம்! குபேர சம்பத்தை கொடுக்கும் பச்சை குங்குமத்தின் மகிமைகள் நீங்களும் தெரிஞ்சிக்கணுமா?

green-kumkum-kuberan

ஒவ்வொருவருக்கும் பணத் தேவைகள் ஒவ்வொரு மாதிரியான சமயங்களில் வேறுபடுகிறது. ஆனால் எதிர்பார்த்த நேரத்தில் பணவரவு தடைபடும் பொழுது இறைவன் மேல் நமக்கு கோபம் வருகிறது. அவசர தேவைக்கு கூட கிடைக்க வேண்டிய பணம் உங்களுக்கு கிடைக்காமல் போக இதுவும் ஒரு காரணம் தான். மகாலட்சுமி சில இடங்களில் வாசம் செய்வதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் செய்யும் சிறு சிறு தவறுகள் கூட உங்களிடத்தில் இருக்கும் மகாலட்சுமி கடாட்சத்தை நீக்கி விடும். தேவையான நேரத்தில் பணம் கிடைக்காமல் தடைபடும். அந்த சமயத்தில் இந்த பச்சை குங்குமம் எப்படி வேலை செய்யும்? இதற்கு ஏன் இவ்வளவு மகிமை? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

money

லட்சுமி கடாட்சம் நம்மை சுற்றி சூழ்ந்து கொள்ள நம் வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் இருப்பது அவசியமாகும். நம் வீட்டில் நேர்மறை ஆற்றல் தான் இருக்கிறதா? இல்லை எதிர்மறை ஆற்றல்கள் ஊடுருவி இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள முடியும். நேர்மறையான ஆற்றல்கள் இருக்கும் வீட்டில் தொடர்ந்து நல்ல விஷயங்கள் தடைபடாமல் நடைபெறும். அந்த வீட்டில் இருப்பவர்களின் மனநிலையும் தினம் தினம் மாறிக் கொண்டே இருக்காமல் சீராக இருக்கும்.

ஆனால் எதிர்மறை ஆற்றல்கள் நிறைந்துள்ள வீட்டில் வாசிப்பவர்களின் மனநிலை நாளுக்கு நாள் மாறிக் கொண்டே இருக்கும். இன்று பாசமாக பேசுபவர்கள், நாளைக்கு திடீரென கோபப்படுவார்கள். அடிக்கடி சண்டை, சச்சரவுகள் வரும். அதுவும் காரணமே இல்லாமல் சண்டை போடுவார்கள். கெட்ட வார்த்தைகளின் அதிர்வலைகள் இருக்கும். வீட்டில் பணவரவு தடைபடும். எதிர்பார்த்த நேரத்தில் பணம் கிடைக்காமல் அல்லல்பட நேரிடும். உங்களுடைய பணமாக இருந்தாலும், அது உங்கள் கைக்கு வருவதற்கே நீங்கள் போராட வேண்டி இருக்கும். இது போல் இருந்தால் எதிர்மறை ஆற்றல்கள் இருக்கிறது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

sad-crying4

இதற்கு உங்கள் வீட்டை ஒரு முறை சுத்தம் செய்து விட்டு, வெண்கடுகு போட்டு சாம்பிராணி தூபம் காட்டலாம். இருக்கின்ற திருஷ்டிகள் எல்லாம் கழிந்து போகும். பின்னர் பூஜையறையில் பச்சை கற்பூரம் மற்றும் பச்சை குங்குமத்தை வைத்து தூப, தீபம் காண்பித்து, கற்பூர ஹாரத்தி எடுத்து வீடு முழுவதும் காண்பிக்கலாம். இவ்வாறு செய்யும் பொழுது நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் பிரச்சனைகளும் நீங்கும்.

- Advertisement -

குபேர சம்பத்தை பெற்ற ஒரு வஸ்து பச்சை குங்குமம். பச்சை குங்குமம் வைத்துக் கொள்பவர்களுக்கு மனம் சாந்தமாகவே இருக்கும். அலைபாயும் மனம் கொண்டவர்கள் பச்சை குங்குமத்தை தினமும் நெற்றியில் வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு இக்கட்டான பண பிரச்சனை இருக்கும் சூழ்நிலையில் குபேரனை வணங்கி பச்சை குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்டு, குபேர மந்திரத்தை உச்சரித்தால் எங்கிருந்தாவது உங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். குபேரனுடைய எந்த மந்திரத்தையும் நீங்கள் கூறலாம்.

green-kumkum

பச்சை குங்குமம் குபேர வஸ்து என்பதால் பச்சை குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்பவர்களுக்கு குபேரனுடைய அருள் கிடைக்கும். குபேர வஸ்துகளை பயன்படுத்துபவர்களுக்கு பொதுவாகவே குபேர உறவு ஏற்படும். தூய மனதோடு குபேரனை வேண்டி வணங்குபவர்களுக்கு குபேரன் சிரித்துக் கொண்டே முழுமனதாக அவர்களுக்கு செல்வ வளத்தை வாரி வழங்குவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. நோக்கம் சிறந்ததாக இருந்தால் பலனும் அதை விட சிறப்பாகவே இருக்கும் என்பதை கூறி இப்பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
10 ரூபாய் நோட்டை இப்படி மடித்து, இந்த இடத்தில் வைத்து விடுங்கள்! பின்பு போதும் போதும் என்று சொன்னாலும் பண மழையை உங்களால் நிறுத்தவே முடியாது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.