இந்த கனவுகள் எல்லாம் உங்களுக்கு வந்திருக்கின்றதா? எதிர்காலத்தில் நீங்கள் பணக்காரராக போவது உறுதி!

dream-sleep-cashrain

நமக்கு வரக்கூடிய கனவுகளில் பல வகைகள் இருந்தாலும், சில கனவுகள் மட்டும் ஏனோ, கண் விழித்தவுடன் நம் நினைவிலிருந்து மறைந்து விடும். அதாவது அப்படி நம் நினைவிலிருந்து மறக்கப்பட்ட கனவுகள், நிஜத்தில் நடப்பதற்கும் வாய்ப்பு உள்ளதாக சில ஆராய்ச்சியில் சொல்லப்பட்டுள்ளது. கண் விழித்தவுடன் நம் நினைவிலிருந்து, நீங்கும் அந்த கனவு பலிக்கும் போதுதான் தெரியும். ‘இதேபோல் நமக்கு, இதற்கு முன்பாகவே ஒரு நிகழ்வு நடந்தது போலிருக்கிறதே!’ கனவு சம்பவம் நினைவில் வரும். நம்மில் பல பேருக்கு இது அனுபவத்தில் கூட நடந்திருக்கும்.

Dream

இப்படியாக கனவுகளில் பல வகை உண்டு. அதில் சில குறிப்பிட்ட கனவுகள் வந்தால் மட்டும், நமக்கு அதிர்ஷ்டம் கட்டாயம், இன்றைக்கு இல்லை என்றாலும், என்றைக்காவது தேடிவரும் என்று சொல்லப்பட்டுள்ளது. உங்கள் கனவில் பின்வருபவை எல்லாம், இதற்கு முன்பாகவே வந்திருந்தாலும் சரி. இனி வந்தாலும் சரி. கட்டாயம் உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அது என்னென்ன கனவுகள் என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்!

புயல், மழை, காற்று, வெள்ளம் என்று பெரிய இயற்கை பேரழிவு நடக்கும். ஆனால், அந்த இயற்கை பேரழிவில் இருந்து நீங்கள் மட்டும் தப்பித்துக் கொள்ளும் படி கனவு வந்தால், நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது.

சில பேரது கனவில் அரச மரம், வேப்ப மரம், ஆல மரம், வில்வமரம் இப்படிப்பட்ட மரங்கள் கனவில் வரும். இந்த மரங்கள் எல்லாம் கனவில் வந்தால் நிச்சயம் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் தான். குறிப்பாக சிவன்கோவிலில் வில்வ மரத்தை தரிசனம் செய்வது போல் கனவு வந்தால் நிச்சயம் நீங்கள் எதிர்காலத்தில் செல்வந்தர்களாக போவது உறுதி. அதோடு மட்டுமல்லாமல் உங்களது மன தைரியமும் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

உங்களது கனவுகளில், வயல்வெளி பச்சை பசேலென்று வரும் பட்சத்தில் நீங்கள், உங்களுடைய வாழ்வின் இறுதி நாட்களில், அதாவது வயதான பின்பு வசதியாக இருப்பீர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

nerkathir

சில பேரது கனவில் வீடு எரிவது போல கனவு வரும். இப்படி கனவு வந்தால், கட்டாயம் எல்லோரது மனதிலும் பயம் வரும். ஆனால் இந்த கனவு, நீங்கள் சொந்த வீடு கட்டுவீர்கள் என்பதை குறிக்கிறது.

உங்கள் கனவில், தண்ணீருக்குள் நீந்தும் மீன்கள் கூட்டமாக பார்த்தால், நிச்சயம் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் தான். அதற்கு உணவு போடுவது போல, அதாவது பொறி போடுவது போல, கனவு வந்தால் அது அதிர்ஷ்டத்தை தரும். உங்களுக்கு ஏதோ ஒரு யோகம் அடிக்க போவது உறுதி.

feeding fish

நீங்களே கோவில் தேர் இழுப்பதாக கனவு கண்டாலும் அல்லது கோவில் தேர், வீதியில் உலா வரும் போது, நீங்கள் அதை தரிசனம் செய்வது போல கனவு வந்தாலும், உங்களது வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றம் வரப்போவது உறுதி என்று சொல்லப்பட்டுள்ளது. உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தீராத சோகம் ஒன்று உங்களை விட்டு கட்டாயம் போய்விடும்.

கரையான், புற்று கட்டுவது போல கனவு வந்தாலும், கட்டிய கரையான் புற்று உங்கள் கனவில் வந்தாலும் உங்கள் வீட்டில் சுபநிகழ்ச்சிகள், சுபச் செலவுகள், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு சுபச் செய்தி வந்து சேரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

karaiyan-putru

உங்கள் கனவில் பசுவுடன் சேர்ந்த கன்று வந்தாலோ அல்லது யாராவது பால் கரப்பதை, நீங்கள் பார்ப்பது போல கனவு வந்தாலோ உங்களுக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த 6 ராசிகளில் பிறந்த ஆண்களை திருமணம் செய்து கொண்டால், பெண்கள் மகாராணியை போல் வாழலாம்.

இது போன்று மேலும் உங்களுக்குரிய ஜோதிட சாஸ்திர பலன்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kanavu palangal in Tamil. Kanavu palan in Tamil. Kanavu palan Tamil. Kanavu palangal. Kanavugal sollum palan.