இந்த ஐடியா தெரிந்தால் காய்ந்த பூக்களை கடைவீதியில் பார்த்தால் கூட விட்டு வைக்க மாட்டீங்க. பூஜை அறையில் காய்ந்த பூக்களை தூக்கி இனி குப்பை தொட்டியில் போட வேண்டிய அவசியமே இருக்காதே!

dry-flower
- Advertisement -

நம்முடைய வீட்டில் உருளியில், பூஜை அறையில் பயன்படுத்திய பூக்களை காய்ந்த பிறகு வீணாக குப்பையில் தூக்கி தான் போடுவோம் அல்லவா. ஆனால் அப்படி குப்பையில் தூக்கி போடக்கூடிய பூக்களை பயனுள்ளபடி எப்படி மாற்றுவது என்பதை பற்றிய ஒரு வீட்டு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். வீட்டை தெய்வீக நறுமணத்தோடு வைத்துக் கொள்ள, செலவு இல்லாமல் இந்த குறிப்பை முயற்சி செய்து பாருங்கள். செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் உங்களுடைய வீடு தெய்வீக நறுமணத்தோடு இருக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த பயனுள்ள வீட்டுக் குறிப்பு என்ன என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

காய்ந்த பூக்களில் இருந்து சுலபமாக சாம்பிராணி தயாரிக்கும் முறை:
பூக்கள் காய்ந்து போனாலும் அதில் இருக்கும் நறுமணமானது நமக்கு நிச்சயம் மீண்டும் கிடைக்கும். காய்ந்த பூக்களை எல்லாம் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். சுவாமி படத்திற்கு போட்ட பூ, உருளியில் போட்ட பூ என்று எல்லா பூக்களையும் ஒரு தட்டில் பரப்பி நிழலிலேயே வைத்தாலும் காய்ந்து விடும்.

- Advertisement -

வெயிலில் வைக்க முடிந்தாலும் காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த காய்ந்த பூக்களோடு தேவையான அளவு சாம்பிராணி கட்டியை போட்டு கலக்க வேண்டும். எல்லா கடைகளிலும் இந்த சாம்பிராணி கட்டி கிடைக்கும். அதை வாங்கி தூள் செய்து இந்த பூக்களோடு கலந்து கொள்ளுங்கள். (காய்ந்த பூக்கள் 250 கிராம் இருந்தால், வெறும் 10 கிராம் சாம்பிராணி கட்டியை போட்டால் போதும்.)

மிக்ஸி ஜாரில் காய்ந்த பூக்கள், நறுக்கிய சாம்பிராணி கட்டிகளை, போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை மீண்டும் ஒரு அகலமான பவுலில் போட்டு தேவையான அளவு நெய் அல்லது நல்லெண்ணெய் சூடு செய்து ஊற்றி லேசாக கலந்து விடுங்கள். சூடு ஆறியதும் உங்கள் கையைக் கொண்டு பிசைந்தால் உருண்டை உருண்டையாக பிடிக்க வரும். சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து அதை அப்படியே வெயிலில் நன்றாக காய வைத்துக் கொள்ளுங்கள். இதை சாம்பிராணி தூபம் போட்டுக்கொள்ள பயன்படுத்திக்கொள்ளலாம்.

- Advertisement -

இதில் வாசனைக்காக சாம்பிராணி கட்டியை தவிர வேறு எந்த பொருட்களையும் சேர்க்க வேண்டாம். இதுவே நல்ல நறுமணத்தை கொடுக்கும். காய வைத்த இந்த சாம்பிராணி உருண்டைகள் மேலே ஒரு கற்பூரம் வைத்து ஏற்றி விட்டால் அது அப்படியே பற்றிக்கொள்ளும். புகை வரும். நல்ல வாசம் வீசும்.

எண்ணெய் ஊற்றி பிசையையெல்லாம் உங்களுக்கு நேரம் இல்லை என்றால், அரைத்த பூ, சாம்பிராணி தூளை, அப்படியே ஒரு பாட்டிலில் கொட்டி ஸ்டோர் செய்து கொள்ளலாம். சாம்பிராணி தூபம் போடு இந்த பொடியை தூவி பாருங்கள். நல்ல நறுமணத்தோடு ஒரு மணம் வீசும். சூப்பராக இருக்கும்.

- Advertisement -

காய வைத்த இந்த சாம்பிராணி உருண்டைகளை டப்பாவில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் எப்போது தேவையோ அப்போது எடுத்து நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். கடையிலிருந்து அதிக காசு கொடுத்து சாம்பிராணி தூபம் வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உங்களுக்கு எந்த வடிவத்தில் வேண்டுமோ அந்த வடிவத்தில் அரைத்த இந்த கலவையை நீங்கள் தயார் செய்து கொள்ளுங்கள்.

நம்முடைய கையாலேயே, அதுவும் நம் வீட்டில் பயன்படுத்திய பூக்களில் இப்படி சாம்பிராணி தூபம் செய்யும் போது நமக்கு நல்ல மன நிறைவு கிடைக்கும். தேவைப்பட்டால் இதில் ஆரஞ்சு பழ தோலை சேர்த்து அரைக்கும் போது இன்னும் நல்ல வாசம் வீசும். வீட்டில் இருக்கும் ஆரஞ்சு பழ தோலை வெயிலில் காய வைத்து சின்ன சின்ன துண்டுகளாக உடைத்து பொடி செய்து இதோடு கலந்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: தேவாமிர்தம் போல இட்லி தொண்டையில இறங்க வேண்டுமா? அப்ப டக்குனு யோசிக்காம 2 நிமிடத்தில் இந்த சட்னி தான் செய்யணும்.

சாமந்திப்பூ, ரோஜா பூ, தாமரைப் பூ, உங்கள் வீட்டில் எந்த பூக்களை நீங்கள் பயன்படுத்தினாலும் அந்த பூக்களை காய வைத்து அதன் மூலம் சாம்பிராணி தூள் செய்யலாம். உங்களுக்கு இந்த எளிமையான வீட்டு குறிப்பு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -