இரும்பு சத்து மிக்க முருங்கைச் கீரை சட்னி செய்முறை

drustick chutney recipe
- Advertisement -

கீரை வகையில் அதிகமான சத்துக்கள் உள்ளது. இது எல்லா கீரை வகைகள் பொருந்தும். ஆனால் என்னவோ இந்த கீரை என்றாலே பெரும்பாலும் அவருக்கு அலர்ஜி. யாரோ ஒரு சிலர் மட்டும் தான் கீரையை விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் இப்போது வளரும் குழந்தைகளிடம் கீரை என்று சொன்னாலே ஏதோ பார்க்க கூடாத கேட்கக் கூடாததை கேட்டது போல தெறித்து ஓடுகிறார்கள்.

அப்படி இருக்கையில் முருங்கைக் கீரையில் சட்னி செய்தால் எப்படி சாப்பிடுவார்களா? என்ற எண்ணம் தோன்றலாம் ஆனால் இந்த சட்னியை அரைத்தால் இது கீரையில் அரைத்த சட்னி என்று நீங்கள் சொல்லாமல் யாராலும் கண்டு பிடிக்கவே முடியாது. சுவையும் அட்டகாசமாக இருக்கும் வாங்க அந்த சட்னியை எப்படி அரைப்பது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

முருங்கைக்கீரை – 1 கப்,
கடலைப்பருப்பு -1 டேபிள் ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு -1 டேபிள் ஸ்பூன்
கடுகு -1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 6
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
தேங்காய் துருவியது -1/4 கப்
கல் உப்பு – 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு

செய்முறை

இந்த சட்னி அரைக்க முதலில் முருங்கைக் கீரையை காம்புகள் நீக்கி சுத்தம் செய்து தனியாக வைத்து விடுங்கள். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து இரும்பு கடாய் வைத்துக் கொள்ளுங்கள். இரும்பு கடாய் இல்லை என்றால் கொஞ்சம் அடி கனமான கடாயாக பார்த்து பயன்படுத்துங்கள் இதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானவுடன் அரை ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிய விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, நான்கு காய்ந்த மிளகாய், கல் உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக நிறம் மாறி சிவந்து வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். இவையெல்லாம் நன்றாக சிவந்ததும் சுத்தம் செய்து வைத்த கீரையை இதில் சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். கடாயின் சூட்டிலே கீரை நன்றாக வெந்து விடும்.

அடுத்து மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், புளி சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் பல்சு மோடில் நன்றாக அரைத்து எடுத்து விடுங்கள். அதன் பிறகு வதக்கிய கீரையை இதில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இது பார்க்க புதினா சட்னி பதத்திற்கு நன்றாக அரைப்பட்டு வந்து விடும்.

- Advertisement -

அதன் பிறகு இந்த சட்னியை ஒரு பவுலின் மாற்றிக் கொள்ளுங்கள். ஒரு சிறிய தாளிப்பு கரண்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு உளுத்தம் பருப்பு காய்ந்த மிளகாய் பெருங்காயம் சேர்த்து பொரிந்தவுடன் இந்த தாளிப்பை சட்னியில் ஊற்றி கலந்து விடுங்கள். நல்ல கமகமவென்று தாளிப்பு மணத்துடன் முருங்கைக்கீரை சட்னி தயார்.

இதையும் படிக்கலாமே: வெண்டைக்காய் வடை செய்முறை

இந்த சட்னியை ஒரு முறை செய்து பாருங்கள் இனி எல்லோரும் இந்த சட்னியை அடிக்கடி செய்ய சொல்லி கேட்பார்கள். இது முருங்கைக்கீரையில் செய்த சட்னி தான் என்று நீங்கள் சொல்லாத வரை யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது சுவையும் மணமும் பிரமாதமாக இருக்கும்.

- Advertisement -