பூஜைக்கு பயன்படுத்திய பூக்களை வீணாக்காமல் சாம்பிராணி தயாரிக்கும் முறை

dry flowers samburani
- Advertisement -

வீட்டில் வெள்ளி, செவ்வாய் மற்றும் விசேஷ நாட்களில் பூஜை செய்வது நம்முடைய வழக்கங்களில் மிகவும் முக்கியமான ஒன்று. அப்படி பூஜை செய்த பிறகு காய்ந்த பூக்களை நாம் இது வரை தூக்கி தூர போட்டு இருப்போம். ஆனால் அந்த பூக்களை வைத்து நல்ல நறுமணம் மிக்க சாம்பிராணிகளை தயார் செய்யலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும். தெரியாதவங்க இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் அதை தெரிந்து கொள்ளலாமே.

காய்ந்த பூக்களை வீணாக்காமல் பயன்படுத்துவது எப்படி?

இந்த முறையில் சாம்பிராணி தயாரிக்க முதலில் தேங்காய் நாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சின்ன சின்னதாக நறுக்கி ஈரம் இல்லாமல் காய வைத்த பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக்க வேண்டும். அது பைன் பவுடராக ஆகாது ஆகையால் ஜலித்து பவுடரை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த தேங்காய் நார் பவுடரை மிக்ஸி ஜாரில் சேர்த்து விடுங்கள். அதன் உடன் பூஜைக்கு பயன்படுத்திய காய்ந்த பூக்களை சேர்த்து விடுங்கள். அத்துடன் 4 லவங்கம், 5 கற்பூரம் 1 கம்ப்யூட்டர் சாம்பிராணி, ஆரஞ்சு பழத்தோல் (காய்ந்தது) 3 ஊதுபத்தியை உடைத்து குச்சிகளை தனியாக எடுத்து விட்டு மேலிருக்கும் பகுதியை மட்டும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இதையும் அதிக பைன் பவுடராக அரைக்க வேண்டாம் கொஞ்சம் கொரகொரப்பாகவே அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பவுடரை ஒரு தட்டில் கொட்டி அதில் இரண்டு ஸ்பூன் நெய், இரண்டு ஸ்பூன் தேன் கொஞ்சம் ஜவ்வாது கலந்து விடுங்கள். இதையெல்லாம் சேர்க்கும் போது நல்ல நறுமணமாக இருக்கும். இதை அப்படியே பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக சாம்பிராணி போல பிடித்து கொள்ளுங்கள். இதை மேலும் நறுமணம் ஆக்க வேண்டுமெனில் ஜாஸ்மின் ரோஸ் எசன்ஸ்களையும் சேர்க்கலாம்.

- Advertisement -

இந்த சாம்பிராணிகளை ஒருநாள் மட்டும் வெயிலில் வைத்து எடுத்து அதன் பிறகு ஒரு டப்பாவில் போட்டு வைத்து விடுங்கள். இதை வைக்கும் டப்பாவில் கொஞ்சம் ஜவ்வாது அல்லது பச்சை கற்பூரம் இப்படி வாசனைக்கு ஏதாவது ஒன்றை போட்டு வைக்கலாம். இனி நீங்கள் பூஜை செய்யும் போது இந்த சாம்பிராணிகளை ஏற்றி பாருங்கள் வீட்டில் தெய்வீக மணம் கமழும்.

இதையும் படிக்கலாமே: கறை படிந்த டாய்லெட்டை சுத்தப்படுத்த இந்த தண்ணீரை கொஞ்சம் ஊத்தி விடுங்க போதும்.

காய்ந்து வீணாக தூக்கிப் போடும் பூக்களையும், தேங்காய் நாரையும் வைத்து இது போல உபயோகமாக செய்து வைத்துக் கொண்டால், நிறைய பணம் மிச்சம் ஆவதோடு நாமே தயாரித்த சாம்பிராணியை தெய்வத்திற்கு ஏற்றும் போது மனதிற்கு நிறைவாகவும் இருக்கும்.

- Advertisement -