உடல் எடை குறைய, முதுகுவலி நீங்க, மூட்டு வலி நீங்க, வயசானாலும் சிக்குனு இளமையா இருக்க, வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டே இருக்க தினமும் இதை குடித்தாலே போதுமே.

drink
- Advertisement -

இந்த கால சூழ்நிலையில் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அப்போதுதான் சுறுசுறுப்பாக வேலை செய்து நிறைய சம்பாதிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தி விட்டால், பிறகு வாழ்க்கையில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் போய்க்கொண்டே இருக்கலாம். உடல் ஆரோக்கியத்தை சீர் செய்யக்கூடிய எளிமையான இரண்டு ஹெல்த் ட்ரிங்க் குறிப்புகளை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். ஒன்று சூப் ரெசிப்பி, இன்னொன்று ஸ்மூதி ரெசிபி. இரண்டுமே செய்யறது ஈசி தான். ஆனா இத குடிச்சு வந்தா உங்களுடைய உடல் எடை குறையும். மூட்டு வலி வராது, எலும்பு தேய்ந்து போகாது, முதுகு வலி வராது, வயதானாலும் சூப்பரா சிக்குன்னு இளமையா இருப்பீங்க.

முதலில் உடல் எடையை குறைக்கவும் உடலுக்கு தேவையான அத்தனை கால்சியம் சத்தையும் கொடுக்கக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஒரு ஸ்மூதி ரெசிபியை பார்க்கலாம். ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உலர் திராட்சை 10, அத்திப்பழம் 4, முந்திரி 3, பேரிச்சம்பழம் 2, பிஸ்தா பருப்பு 10, வால்நட் 5, பாதாம் பருப்பு 5, இந்த பொருட்களை எல்லாம் போட்டு 3/4 கப் அளவு தண்ணீரை ஊற்றி இரவே இதை ஊற வைத்து விடுங்கள். ( ஒருவர் குடிப்பதற்கு இந்த அளவுகள் சரியாக இருக்கும்.)

- Advertisement -

மறுநாள், காலை உணவாக இதை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை அப்படியே ஊற வைத்த தண்ணீரோடு மிக்ஸி ஜாரில் போட்டு இன்னும் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி நன்றாக அரைத்து அப்படியே குடித்து விட வேண்டியதுதான். இதில் சுவைக்காக சில பேர் வாழைப்பழம், தேன், பால் கூட சேர்த்து அரைத்துக் குடிப்பார்கள். அது உங்களுடைய விருப்பம்.

இதை தினமும் குடிக்கலாம். வாரத்தில் மூன்று நாட்கள் குடிக்கலாம். வாரத்தில் இரண்டு நாட்கள் குடிக்கலாம். எப்படி குடித்தாலும் உங்களுக்கு ஆரோக்கியம் மேம்படும். (இதை குடிப்பவர்கள் காலை உணவு சாப்பிட வேண்டாம்.)

- Advertisement -

அடுத்தபடியாக உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்களை கொடுக்கும் சூப்பரான சிம்பிளான முருங்கைக்கீரை சூப். ஒரு சிறிய உரலில் வர மல்லி – 1 ஸ்பூன், மிளகு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் போட்டு நன்றாக தட்டி இதோடு தோல் உரித்த சின்ன வெங்காயம் – 6, தோல் உரித்த பூண்டு பல் – 6, போட்டு மீண்டும் எல்லா பொருட்களையும் ஒன்றும் இரண்டுமாக தட்டிக் கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் இந்த எல்லா பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக ஒரு ஓட்டு ஓட்டிக்கோங்க.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து தக்காளி பழம் நறுக்கியது – 1, இடித்து வைத்திருக்கும் இந்த மசாலா விழுது, முருங்கைக்கீரை சுத்தம் செய்தது 2 கைப்பிடி போட்டு, தண்ணீர் 2 டம்ளர் ஊற்றி இதை நன்றாக வேக வைத்து விடுங்கள். வெந்த பிறகு ஒரு மத்தை வைத்து இதை லேசாக கடைந்து விட வேண்டும். ஒரு ஸ்மேஷர் இருந்தால் கூட கீரையை நன்றாக நசுக்கி விடலாம். அதன் பின்பு இதிலிருந்து அந்த சாறை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது முருங்கைக்கீரை சூப்பை மட்டும் வடிகட்டி எடுத்துவிட்டு, உப்பு தேவையான அளவு, மிளகுத்தூள் தூவி, தேவைப்பட்டால் இதன் மேலே கான் சிப்ஸ் தூவி, இதை சுட சூடா இருக்கும்போதே குடித்து விட்டால் சுவையாகவும் இருக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும். இதை விட இரும்பு சத்து நிறைந்த ஒரு உணவு நிச்சயமாக வேறு எதுவுமே இருக்க முடியாது. வாரத்தில் ஒரு நாளாவது இதை குடிங்க.

- Advertisement -