இந்த 2 தவறுகளை செய்யாமல் இருந்தாலே தோல் வறட்சி நிரந்தரமாக சரியாகிவிடும். டிரை ஸ்கின் உள்ளவர்கள் கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கணும்.

face10
- Advertisement -

இன்று பல பேருக்கு சருமம் ரொம்பவும் டிரை ஆக இருக்கிறது. சில பேருக்கு குளிர்காலத்தில் மட்டும் தான் வறண்ட சருமம் இருக்கும். சில பேருக்கு வருடத்தில் 365 நாளுமே சருமம் வறட்சியோடு தான் காணப்படும். இப்படி வறட்சியாக இருக்கக்கூடிய சருமத்தை கொண்டவர்களுக்கு, சீக்கிரமாக வயதான தோற்றம் வந்துவிடும். தோல் சுருக்கம் வந்துவிடும். அது மட்டுமல்லாமல் சருமத்தில் அரிப்பு ஏற்பட்டு, வெள்ளை வெள்ளையாக தெரியும். முழுமையான அழகை பெற முடியாது. இந்த வறட்சியான சருமத்தை நிரந்தரமாக சரி செய்ய வேண்டும் என்றால், நாம் செய்ய வேண்டிய இரண்டு விஷயங்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம். இதை பின்பற்றுவதன் மூலம் உங்களுடைய சரும வறட்ச்சிக்கு நிரந்தரமான ஒரு தீர்வு கிடைக்கும்.

சருமம் வறட்சி நீங்க செய்யக்கூடாதது:
அன்றாடம் செய்யக்கூடிய தவறு இது. இந்த தவறை திருத்திக் கொண்டாலே உங்களுடைய சருமத்தை வறட்சியிலிருந்து மீட்டு எடுத்து விடலாம். தினமும் சோப்பு போட்டு தேய்த்து தேய்த்து முகத்தை கழுவ கூடவே கூடாது. சோப்பு எந்த அளவுக்கு சருமத்தின் மீது அதிக நேரம் இருக்கிறதோ, அந்த அளவுக்கு அந்த சோப் ஆனது, சருமத்தில் மிச்சம் மீதி இருக்கும் ஈரத்தன்மையையும் உறுஞ்சி கொண்டு டிரையாக மாற்றிவிடும்.

- Advertisement -

டிரை ஸ்கின் உள்ளவர்கள் தயவுசெய்து இன்றிலிருந்து சோப்பு போட்டு குளிப்பதை நிறுத்தி விடுங்கள். சோப்புக்கு பதில் பாசிப் பருப்பு பொடி, பச்சை பயிறு பொடி, நலங்கு மாவு போன்ற பொருட்களை பயன்படுத்தி குளிக்கலாம். அல்லது அதிக அளவில் கிளிசரின் உள்ள சோப்புகளை மிகக் குறைந்த அளவில் பயன்படுத்திக் கொள்ளலாம். பிரஷாக வேண்டும் என்பதற்காக நுரை பொங்க சோப்பை இரண்டு மூன்று நிமிடம் வரை சருமத்தில் போட்டு தேய்த்து தேய்த்து குளிக்கவே கூடாது. இந்த தவறை திருத்தி பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய சருமம் ஒரு சில நாட்களில் ஈரப்பதத்தை பெறும்.

வறட்சியை நிரந்தரமாக போக்க செய்ய வேண்டியது என்ன?
நம்முடைய உடம்பில் நல்ல கொழுப்பு குறைந்தாலும், சருமம் நிரந்தரமாக வளர்ச்சி தன்மையை பெறும். நல்ல கொழுப்பு உள்ள பொருட்களை சீரான அளவில் உட்கொண்டு வர வேண்டும். அதே சமயம் சரியான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீரை குடிக்கவில்லை என்றால், பிறகு சருமத்திற்கு ஈரப்பதம் எப்படி கிடைக்கும். சரியான அளவு தண்ணீர் குடிப்பதை கவனித்துக் கொள்ளுங்கள். அதே சமயம் நல்ல கொழுப்பு உள்ள பொருட்களை உணவோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சரிங்க, இந்த நல்ல கொழுப்பை எளிமையாக பெறுவது தான் எப்படி. நல்லெண்ணெயில் நல்ல கொழுப்பு அதிக அளவில் உள்ளது. தினமும் காலையில் எழுந்து பல் துலக்கி விட்டு, 1 சின்ன ஸ்பூன் அளவு நல்லெண்ணெயை குடித்துவிட்டு, வெதுவெதுப்பான தண்ணீர் 1 டம்ளர் குடிப்பது உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு சேர்த்து எள்ளு உருண்டை, எள்ளு மிட்டாய் போன்ற பொருட்களை அளவோடு சாப்பிட்டு வந்தாலும் உடம்பில் நல்ல கொழுப்பு சீராக இருக்கும்.

சுத்தமான பசு நெய் கிடைத்தால் தினம் தோறும் குறைந்த அளவு சாப்பாட்டில் சேர்த்து வர வேண்டும். உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களை பின்பற்றும்போது உங்களுடைய ஆரோக்கியத்தையும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். அதாவது இருதய நோய் உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், தொடர்ந்து மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள் என்று இப்படிப்பட்டவர்கள் எல்லாம், நல்லெண்ணெயை உட்கொள்வதற்கு முன்பு, தினமும் நெ சாப்பாட்டோடு சேர்த்துக் கொள்வதற்கு முன்பு, உங்களுடைய மருத்துவரையும் ஒருமுறை அணுக வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இனி நீங்க நரை முடியை மறைக்க தேவையே இல்லை இந்த ஒரு பொருள் உங்களிடம் இருந்தால் போதும் நரை முடி பிரச்சனை உங்கள் வாழ்நாளில் வரவே வராது.

உடம்பில் எந்த பிரச்சனையும் இல்லை. நான் ஆரோக்கியமாகத் தான் இருக்கிறேன் என்பவர்கள் மேல் சொன்ன டயட்டை தாராளமாக பின்பற்றலாம். எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. இதையெல்லாம் விட்டுவிட்டு வெறும் கிரீமை வாங்கி பூசிக் கொள்வதால் மட்டும் டிரை ஸ்கின் சரியாகாது. மேல் சொன்ன குறிப்புகளை பின்பற்றினால் ஒரு வருடத்திற்குள் உங்களுடைய சருமம் வறட்சி தன்மையிலிருந்து மீண்டு நல்ல ஆரோக்கியமான அழகை பெறும். இந்த அழகு குறிப்பு பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -