அட்டகாசமான ‘அவல் கட்லெட்’ அவ்வளவு சுவையாக எப்படி செய்வது? டேஸ்டியான அவல் பொட்டேட்டோ கட்லெட் ஈஸி ரெசிபி இதோ உங்களுக்காக!

white-aval-cutlet
- Advertisement -

பொதுவாக கட்லெட் என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒரு சுவையான ஸ்னாக்ஸ் வகையாக இருக்கிறது. இந்த வகையில் வெள்ளை அவல் கொண்டு செய்யப்படும் இந்த கட்லெட் இன்னும் ருசியை கூட்டி கொடுக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து, ருசித்து சாப்பிடக் கூடிய இந்த அவல் கட்லெட் ஆரோக்கியமான முறையில் சுலபமாக எப்படி வீட்டிலேயே தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.

அவல் கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்:
வேக வைத்த உருளைக்கிழங்கு – மூன்று, வெள்ளை அவல் – ஒரு கப், பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2, துருவிய இஞ்சி – சிறிதளவு, பூண்டு – ரெண்டு பல், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், தனியா தூள் – அரை ஸ்பூன், கரம் மசாலா – ஒரு டீஸ்பூன், எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

அவல் கட்லெட் செய்முறை விளக்கம்:
முதலில் மூன்று மீடியம் சைஸ் உருளைக் கிழங்குகளை பதமாக வேக வைத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை நன்கு மேஷ் செய்ய வேண்டும். வேக வைத்த உருளைக் கிழங்குகளை நன்கு பிசைந்த பின்பு, 15 நிமிடம் ஊற வைத்த வெள்ளை அவலை எடுத்துக் கொள்ள வேண்டும். வெள்ளை அவல் நன்கு தண்ணீர் எல்லாம் வடிகட்டி விட்டு இதனுடன் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.

பின்னர் இவற்றுடன் தோல் உரித்து பொடி பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். காரத்திற்கு இரண்டு பச்சை மிளகாய்களை காம்பு நீக்கி சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி சேருங்கள். ரெண்டு பல் பூண்டு மற்றும் அதே அளவிற்கு துருவிய இஞ்சி ஆகியவற்றை நசுக்கி சேருங்கள். பின்னர் இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை தேவையான அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இதற்கான புளிப்பு சுவைக்கு கொஞ்சம் எலுமிச்சை சாற்றை விதைகள் நீக்கி பிழிந்து கொள்ளுங்கள். சிறிதளவு கொத்தமல்லியை சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி சேருங்கள். பின்னர் இந்த கட்லட்டிற்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். எல்லா கலவையும் ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்து வரும் அளவிற்கு பிசைந்த பின்பு கெட்டியாக இருக்கும் இதை கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து உருண்டைகளாக தட்டிக் கொள்ளுங்கள். பின்னர் கட்லெட் போல தட்டையாக தட்டி ஒரு பிளேட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் கொஞ்சம் போல் எண்ணெய் விட்டு ஒவ்வொரு கட்லெட்டாக சேர்த்து ஒரு புறம் நன்கு சிவக்க வெந்து வந்தவுடன், மறுபுறம் திருப்பி போடுங்கள். இது போல எல்லா புறமும் நன்கு சிவக்க வேக எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு டீப் ஃப்ரை செய்ய வேண்டிய அவசியம் இல்லை, கொஞ்சம் போல் எண்ணெய் விட்டு இது போல செய்து பாருங்கள், ரொம்பவும் ஆரோக்கியமான மற்றும் சுவையான அவல் கட்லெட் தயார்! இதே மாதிரி நீங்களும் செய்து பார்த்து அசத்துங்க.

- Advertisement -