ஊற வைக்காமல், கெமிக்கல்ஸ் இல்லாமல் பாத்ரூமில் இருக்கும் உப்பு கறையை நொடியில் கிளீன் செய்வது எப்படி? 3 ரூபாய் போதும் மொத்த வேலையும் முடிச்சிடலாம்!

bathroom-tiles-cleaning
- Advertisement -

பொதுவாக பாத்ரூமில் இருக்கும் உப்பு கறையை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் அவ்வளவுதான், நாளுக்கு நாள் அதில் அழுக்குகள் சேர்ந்து ரொம்பவே மோசமாக தெரிய ஆரம்பிக்கும். இதை சுத்தம் செய்வது என்பதும் கடினமாகிவிடும். இன்று இருக்கும் இந்த உப்பு கறை அதிகம் உள்ள பாத்ரூம் டைல்ஸ்களை கொஞ்சம் கூட கெமிக்கல் சேர்க்காமல், எதையும் போட்டு ஊற வைக்காமல் நொடியில் சுத்தம் செய்வது எப்படி? அப்படின்னு தான் இந்த வீட்டு குறிப்பு ரகசியங்களின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

இன்று பெரும்பாலானோர் இல்லங்களில் நிலத்தடி நீர் அடியில் சென்று விட்டதால், அதிகமாக உப்பு கலந்த தண்ணீர் தான் நமக்கு கிடைக்கிறது. இந்த உப்பு நிறைந்த தண்ணீரை அடிக்கடி பயன்படுத்தும் பொழுது, அந்த இடங்களில் எல்லாம் உப்பு கறை அப்படியே படிந்து நாளடைவில் விடாமல் ஒட்டிக் கொண்டு விடுகிறது. இதை சுத்தம் செய்வது ரொம்பவே சிரமமான ஒரு விஷயமாகவும் மாறிவிடுகிறது.

- Advertisement -

பாத்ரூம் டைல்ஸ் மட்டும் அல்லாமல், பாத்திரம் கழுவும் டைல்ஸ்களில் கூட இந்த உப்பு கறையை நாம் காண முடியும். இதை ரொம்ப சுலபமாக எந்த கெமிக்கல்ஸும் இல்லாமல் சுத்தம் செய்ய, அதிக செலவு கூட செலவு ஆகப் போவது கிடையாது. இதற்கு ஒரு மக் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் அளவுக்கு ஏதாவது ஒரு சீயக்காய் பவுடரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

சீயக்காய் பவுடரில் பூந்திக்கொட்டை சேர்த்து அரைத்து இருப்பார்கள். இது பொதுவாக நன்கு நுரைத்து சுத்தம் செய்யக்கூடிய தன்மை கொண்டது. எனவே இரண்டு ஸ்பூன் சீயக்காய் உடன், ஒரு பாக்கெட் ஏதாவது ஒரு பிராண்டட் ஷாம்பூ ஒன்றை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு இதனுடன் கடைசியாக நன்கு புளித்துப் போன தயிர் அல்லது இட்லி மாவு இருந்தால் அதையும் ரெண்டு ஸ்பூன் அளவுக்கு சேர்த்து பேஸ்ட் போல கறைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்கள் பாத்ரூமுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவிற்கு நீங்கள் இந்த பேஸ்ட்டை தயார் செய்ய வேண்டும். பின்னர் கைகளில் கிளவுஸ் போன்ற ஏதாவது ஒன்றை அணிந்து கொள்ளுங்கள். எதுவுமே இல்லை என்றால் பாலித்தீன் கவர் போட்டுக் கொள்ளுங்கள். பாத்திரம் தேய்க்க பயன்படுத்திய பழைய இரும்பு நார் ஏதாவது இருந்தால், அதை எடுத்து இந்த பேஸ்ட்டை தொட்டு உங்களுடைய உப்பு கறை படிந்த டைல்ஸ்களில் லேசாக தேய்த்து கொடுங்கள். ரொம்பவும் கஷ்டப்பட்டு தேய்க்க வேண்டிய அவசியம் இல்லை, சாதாரணமாக தேய்தாலே போதும்.

இதையும் படிக்கலாமே:
கொசுவை விரட்டி அடிக்க இந்த ஐடியா ரொம்பவும் கெட்டிக்காரத்தனமான ஐடியா தான் போல! இப்படி செய்தால் ஒரு கொசு கூட வீட்டுக்குள்ள உயிரோட வாழ முடியாது.

சீயக்காய், ஷாம்பூ, புளித்த தன்மை இவை அனைத்தும் ஒன்று சேரும் பொழுது உடனடியாக ஆற்றல் புரிகிறது. இதில் கெமிக்கல்ஸ் எதுவும் கலக்கப்படவில்லை ஆனால் இதனுடைய எபெக்ட் கெமிக்கல்ஸ் கலந்தது போல ரொம்ப அற்புதமாக இருக்கும். இதை ஊற வைக்க வேண்டிய அவசியம் கூட இல்லை! நீங்கள் தேய்த்தவுடன் தண்ணீர் ஊற்றி கழுவினால் புத்தம் புதிய டைல்ஸ் போல பளபளன்னு மின்னும். கொஞ்சம் கூட உங்களுக்கு உப்பு கறை இருக்கவே செய்யாது. இதை வாரம் ஒரு நாள் கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்க, இனி உங்களுடைய டைல்ஸ் புதிதாக வாங்கும் பொழுது எப்படி இருந்ததோ அப்படியே தான் இருக்கும்.

- Advertisement -