உங்க வீட்டில் தோசை மாவு இருக்கா? பிரட் டோஸ்ட் செய்து சாப்பிட்டிருப்போம்! அது என்ன தோசை டோஸ்ட்? சட்டுனு ஒரு புது ரெசிபி.

- Advertisement -

எப்போதும் ஒரே வகையாக சாப்பிட்டு போரடித்து போனவர்களுக்கு, புதுமையாக எதையாவது சமைக்க தோன்றும்! அப்படி இருக்கும் பலருக்கு ரொம்பவே பிடித்தமான இந்த பிரட் வைத்து செய்யப்படும் டோஸ்ட் வித்தியாசமான ஒரு சுவையை கொடுக்க இருக்கிறது. பிரட் டோஸ்டர் வைத்து தக்காளி சாஸ் உடன் சாப்பிடுபவர்களுக்கு இந்த தோசை டோஸ்ட்டும் நிச்சயம் ரொம்பவே விருப்பமானதாக இருக்கும். எளிதான முறையில் தோசை டோஸ்ட் செய்வது எப்படி? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தோசை டோஸ்ட் செய்ய தேவையான பொருட்கள்:
தோசை மாவு – ஒரு கப், பிரட் துண்டுகள் – 6, பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 1, துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவைக்கு ஏற்ப, தாளிக்க: கடுகு – கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், சமையல் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

- Advertisement -

தோசை டோஸ்ட் செய்முறை விளக்கம்:
இப்பொழுது டோஸ்ட் செய்வதற்கு ஒரு தாளித்த மாவை தயார் செய்ய வேண்டும். உங்களுக்கு தேவையான அளவிற்கு தோசை மாவு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முதலில் நறுக்கிய கொத்தமல்லித்தழை, நறுக்கிய கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றை ரொம்பவும் பொடி பொடியாக நறுக்கி சேர்ப்பது நல்லது. பின்னர் ஒரு பெரிய பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்க வேண்டும்.

ஒரு டீஸ்பூன் அளவிற்கு தோல் நீக்கி துருவிய இஞ்சி துருவலைச் சேர்த்து கொள்ளுங்கள். இந்த எல்லாப் பொருட்களையும் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். பின்னர் கால் டீஸ்பூன் அளவிற்கு கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும், கால் டீஸ்பூன் அளவிற்கு சீரகம் சேர்த்து தாளித்து கொள்ளுங்கள்.

- Advertisement -

தாளித்த இந்த பொருள்களையும் தோசை மாவுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்போது பிரெட்டை டோஸ்ட் செய்ய தோசை மாவு தயார். ஒவ்வொரு பிரட் துண்டுகளையும் எடுத்து மெதுவாக தோசை மாவில் இரண்டு புறமும் முக்கி எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தவாவை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு சுற்றிலும் எண்ணெய் விட்டு மெதுவாக இந்த பிரட் ஸ்லைஸ்களை வையுங்கள்.

சுற்றிலும் தேவையான அளவிற்கு நெய் அல்லது எண்ணெய் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விட்டுக் கொள்ளுங்கள். ஒருபுறம் நன்கு சிவக்க வெந்ததும், மறுபக்கம் திருப்பி போடுங்கள். இரு புறமும் நன்கு வேக எடுத்து வைத்து சுடச்சுட ஒரு காரச் சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறினால் அவ்வளவு அருமையாக இருக்கும். புதுமை விரும்பிகளுக்கு இந்த தோசை டோஸ்ட் ரொம்பவே பிடித்துப் போய்விடும், எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து சாப்பிடுவார்கள், நீங்களும் இதே முறையில் முயற்சித்துப் பாருங்கள்.

- Advertisement -