எண்ணெய் பிசுக்கு படிந்து நிறம் மாறி போன பூஜை பாத்திரங்களை கூட நொடியில் பொழுதில் பளிச்சென்று மாற்ற எந்த இரண்டு பொருள் இருந்தால் போதும்.

pooja vessels cleaning tips
- Advertisement -

எந்த பூஜையாக இருந்தாலும் அதை மன நிறைவோடு செய்ய வேண்டும் எனில் நாம் பயன்படுத்தும் இந்த பூஜை பொருட்கள் பளிச்சென்று பார்க்க பிரகாசமாக இருக்க வேண்டும். இப்படி இருந்தாலே பார்க்கும் போததே மன நிறைவு வரும். அதற்காகவே நாம் இதை கொஞ்சம் சிரத்தை கொண்டு தேய்த்து சுத்தப்படுத்தி வைத்திருப்போம். வீட்டில் நல்ல நாள் விசேஷம் என எது வந்தாலும் எந்த அளவிற்கு மகிழ்ச்சியை தருமோ அதே அளவுக்கு கொஞ்சம் கலக்கத்தை தரக் கூடிய விஷயம் என்றால் அது பூஜை பாத்திரங்களை தேய்ப்பது தான். இப்போது இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் பூஜை பாத்திரங்களை மிக எளிதாக எப்படி சுத்தப்படுத்துவது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்

பூஜை பாத்திரங்களை எளிதாக சுத்தம் செய்வது எப்படி
இந்த முறையில் சுத்தம் செய்ய முதலில் பூஜை பாத்திரங்களில் உள்ள எண்ணெய் கறை மஞ்சள் குங்குமம் முதலியவற்றை சுத்தமாக துடைத்து எடுத்து விட வேண்டும். இதற்கு டிஷ்யூ பேப்பர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் அல்லது வீட்டில் காட்டன் துணி இருந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம். பூஜைப் பொருட்களுக்கு பயன்படுத்தும் போது இதற்கென தனியாக காட்டன் துணி வைத்துக் கொள்வது நல்லது.

- Advertisement -

அடுத்து நீங்கள் எடுத்து இருக்கும் பூஜை பாத்திரங்களில் அளவிற்கு ஏற்றார் போல் கொஞ்சம் கோலமாவையும் எலுமிச்சை பழத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள. இதற்கு வீட்டில் இருக்கும் பழைய எலுமிச்சை பழத்தை கூட எடுத்துக் கொள்ளலாம். இப்போது எலுமிச்சை பழத்தை இரண்டாக அரிந்து அதைக் கோலமாவில் தொட்டு தொட்டு பூஜை பாத்திரங்களின் மீது தேய்த்து வைத்து விடுங்கள்.

இதே போல அனைத்து பூஜை பாத்திரங்களிலும் தேய்த்த பிறகு இந்த பூஜை பாத்திரங்களை தேய்ப்பதற்கு என்று தனியாக ஒரு டூத் பிரஷ் வைத்துக் கொள்ளுங்கள். இதை வைத்து விளக்குகளை லேசாக தேய்த்து கொடுங்கள். ஏனென்றால் விளக்குகளில் கொஞ்சம் நுணுக்கமான வேலைப்பாடுகள் இருக்கும். அந்த இடத்தில் அழுக்கு படிந்து இருக்கும். அதை இது போல பிரஷ் வைத்து சுத்தம் செய்யும் பொழுது எளிதாக அழுக்கு வந்து விடும்.

- Advertisement -

அடுத்ததாக இதைத் தவிர மற்ற பூஜை பாத்திரங்களில் எல்லாம் நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் ஸ்கிரப்பர் வைத்து லேசாக தேய்த்து பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டாலே போதும் பூஜை பாத்திரங்கள் பளிச்சென்று மாறி விடும். அழுக்கு அதிகம் இல்லாத பூஜை பாத்திரங்களை நீங்கள் ஸ்கிரப்பர் வைத்து தேய்க்க கூட தேவையில்லை. கோலமாவும் எலுமிச்சை பழத்தையும் வைத்து தேய்க்கும் போதே பாத்திரங்கள் பளிச்சென்று மாறி விடும்.

பூஜை பாத்திரங்களை தேய்த்த பிறகு சுத்தமாக துணி வைத்து துடைத்து விட்டு, இதை சிறிது நேரம் காய வைத்து அதன் பிறகு எடுத்து எண்ணையை ஊற்றி பயன்படுத்துங்கள். இப்படி செய்வதன் மூலம் சில நேரம் துலக்கிய பிறகும் பூஜை பாத்திரங்களில் புள்ளி புள்ளியாக இருக்கும். அது போல ஆகாமல் இருக்கும். அதுமட்டுமின்றி இந்த முறையில் சுத்தம் செய்யும் போது பூஜை பாத்திரங்களும் உடனடியாக கருத்துப் போகாமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் டாய்லெட்டில் இனி எப்போதுமே துர்நாற்றம் வீசாது. ஒவ்வொரு முறை டாய்லட்டை பயன்படுத்திய பிறகும், பிரஷ் போட்டு தேய்த்து கழுவியது போல பளிச் பளிச்சென இருக்க, இது ஒரு சூப்பர் ஐடியா.

இனி வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் கொஞ்சம் கூட டென்ஷன் ஆகாமல் இந்த முறையில் பூஜை பாத்திரங்களை எளிமையாக சுத்தம் செய்து விடுங்கள். உங்கள் வீட்டு பூஜை பாத்திரங்கள் அனைத்து தங்கம் போல ஜொலி ஜொலிக்கும் இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -