1 லிட்டர் பாலில் 1/4 கிலோ பன்னீரா? வீட்டிலேயே சுவையான பன்னீர் தயாரிப்பது இவ்வளவு சுலபமா? இவ்வளவு நாளா இது தெரிஞ்சுக்காம விட்டுட்டோமே!

panner-paneer1
- Advertisement -

பாலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் இந்த பன்னீர் ஒரு சிலருக்கு மிகவும் பிடித்தமான ஒரு பொருளாக இருக்கிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் உணவு பண்டங்களை அதிகம் விரும்பி சாப்பிடும் மக்கள் இதனை அதிக விலை கொடுத்து கடைகளில் வாங்க வேண்டிய நிலை உள்ளது. நம் வீட்டிலேயே ரொம்ப ரொம்ப சுலபமாக ஆரோக்கியமான முறையில் நாமே பன்னீர் தயாரிப்பது எப்படி? ஒரு லிட்டர் பாலில் கால் கிலோ பன்னீரை சுலபமாக தயாரித்து விடலாம். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

milk1

ஆவினில் இருந்து அதிக கொழுப்புள்ள பால் ஒரு லிட்டர் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதை அடுப்பில் வைத்து குறைந்தது பத்து நிமிடமாவது மிதமான தீயில் வைத்து கொதிக்க விடுங்கள். பால் கொதித்து வரும் வேளையில் ஒரு ஸ்பூன் அளவிற்கு வினிகர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். கொஞ்ச நேரத்தில் பால் திரிந்து விடும். வினிகர் இல்லாதவர்கள் எலுமிச்சை பழத்தை அரை மூடி அளவிற்கு பிழிந்து சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் எலுமிச்சைப் பழம் சேர்த்தால் பன்னீரை நன்கு அலச வேண்டும். அப்பொழுது தான் எலுமிச்சை பழத்தின் உடைய வாசனை பன்னீரில் வராமல் இருக்கும். இதனால் வினிகர் சேர்த்தால் இன்னும் சுலபமாக இருக்கும்.

- Advertisement -

திரிந்த இந்த பாலினை ஒரு சுத்தமான காட்டன் துணியில் ஊற்றி வடிகட்ட வேண்டும். தண்ணீரை நன்கு வடிகட்டிய பின் சுத்தமான தண்ணீர் ஊற்றி ஒரு முறை பன்னீரை அலசிக் கொள்ளுங்கள். எலுமிச்சை சேர்த்து இருப்பவர்கள் கண்டிப்பாக மூன்றிலிருந்து, நான்கு முறை இப்படி பன்னீரை அலசிக் கொள்ள வேண்டும். காட்டன் துணியை நன்கு இறுக்கமாக முடிந்து, உங்களுக்கு சதுர வடிவமாக பன்னீர் கிடைக்க, தண்ணீரை நன்கு பிழிய வேண்டும். சதுர வடிவில் வரும் வரை சுற்றி சுற்றி உங்கள் கைகளால் சதுரமாக்கி தண்ணீரில் முக்கி முக்கி எடுத்து ஒரு பத்து நிமிடம் பிழிந்து கொள்ளுங்கள்.

panner-paneer

சதுர வடிவில் பன்னீர் உங்களுக்கு வந்ததும் தண்ணீரை நன்கு கைகளால் அழுத்தி முழுவதுமாக பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அப்படியே அந்த பன்னீரை இறுக்கமாக துணியுடன் கவிழ்த்து ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வையுங்கள். அதன் மேல் ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவால் மூடி விடுங்கள். அதற்குப் பிறகு மூடி போட்டு அந்த பெரிய டப்பாவை மூடி அப்படியே பிரிட்ஜில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் கழித்து எடுத்துப் பார்த்தால் சுத்தமான பன்னீர் அதீதமான சுவையுடன் ஆரோக்கியமான முறையில் உங்களுக்கு கிடைத்துவிடும். இந்த பன்னீரை கத்தியால் வெட்டி சதுர சதுரமாக எடுத்து கத்தரித்துக் கொள்ளுங்கள். இதனை இரண்டிலிருந்து மூன்று நாட்கள் வரை ஒரு டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைத்து எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

panner

கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய இந்த பன்னீரை நாம் ஒரு லிட்டர் பாலில் ரொம்ப ரொம்ப சுலபமாக செய்து விடலாம். எனவே ஆரோக்கியமான இந்த பன்னீர் நீங்களும் இதே முறையில் ஒருமுறை செய்து பார்த்து பயனடையலாமே! ஃபிரிட்ஜில் வைப்பதற்கு முன்னர் கிடைத்த அந்த பன்னீரை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சர்க்கரை பாகில் போட்டால் அது தான் ரசகுல்லா. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்து விடலாம் என்று தானே தோன்றுகிறது?

- Advertisement -