உங்கள் குழந்தைகளை சமாதானப்படுத்த இந்த சிம்பிளான இட்லி கேக்கை ஒரு முறை செய்து கொடுங்கள் ஒரு முறை சாப்பிட்டால் அடம்பிடிக்கும் குழந்தை கூட அடங்கிப் போகும்

idli-cake
- Advertisement -

அடம் பிடிக்கும் குழந்தைகளை சமாதனம் படுத்துவதென்பது மிக கடினமான விஷயம் தான். இருந்தாலும் குழந்தைகளின் கோபமும் அழகுதான். அவர்கள் அடம் பிடிக்கும் பொழுது நாமும் அவர்களிடம் கோபமாக நடந்து கொண்டால் குழந்தைகள் அழ ஆரம்பித்து விடுவார்கள். பெரிய குழந்தைகளாக இருந்தால் மிகவும் கவலைப் படுவார்கள். எனவே அவர்களுக்கு பொறுமையாக சொல்லி புரிய வைக்க வேண்டும். நீங்கள் என்னதான் சமாதானம் செய்தாலும் அந்த குழந்தைகள் அடம் பிடித்த விஷயத்தை எண்ணி கவலையுடன் தான் இருப்பார்கள். எனவே அவர்களை குஷிப்படுத்த அவர்களுக்கு பிடித்த இனிப்பு சுவையில் இந்த ரவை கேக்கை ஒருமுறை செய்து கொடுங்கள். கேக் என்றதும் இதனை செய்ய எவ்வளவு நேரம் ஆகுமோ என்ற யோசனை வர வேண்டாம். நீங்கள் இட்லி செய்வது போல இதனை சுலபமாக செய்து விடலாம். வாருங்கள் இந்த இட்லி கேக்கை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
ரவை – ஒரு கப், பால் – ஒரு கப், தேங்காய் – கால் மூடி, ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன், நாட்டுச் சர்க்கரை – முக்கால் கப், உப்பு – ஒரு சிட்டிகை, சோடா மாவு – ஒரு சிட்டிகை, முந்திரி – 10, நெய் – 2 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். பிறகு அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து, அதனுடன் ஒரு கப் ரவையை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் நெய்யில் ரவையை பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் மாற்றிக் கொள்ள வேண்டும். வறுத்த ரவை கை பொறுக்கும் சூடு வரும் வரை நன்றாக ஆற வேண்டும்.

ரவை நன்றாக ஆறியதும் அதனுடன் காய்ச்சிய பால் ஒரு கப் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். பிறகு அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை சோடா மாவு சேர்த்து நன்றாக 10 நிமிடம் ஊற விட வேண்டும். பிறகு கால் மூடி தேங்காயை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து துருவலாக அரைத்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு அதே போல் முக்கால் கப் நாட்டுச் சர்க்கரையை எடுத்துக் கொள்ள வேண்டும். நாட்டுச் சர்க்கரை மற்றும் துருவி வைத்த தேங்காயை ரவைவையுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அரை ஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் ஒன்றாக கலந்துவிட வேண்டும்.

பின்னர் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதனை அடுப்பின் மீது வைத்து விட வேண்டும். பிறகு ஒவ்வொரு இட்லி தட்டிலும் லேசாக நெய் தடவிக் கொள்ள வேண்டும். பிறகு ஒவ்வொரு இடத்தட்டிலும் ஒவ்வொரு முந்திரியாக வைத்து, அதன் மீது சிறிது தேங்காய் துருவல் சேர்க்க வேண்டும். பின்னர் கலந்து வைத்துள்ள ரவை கலவையில் இருந்து ஒவ்வொரு கரண்டியாக அள்ளி எடுத்து இட்லி தட்டில் வைக்க வேண்டும். பின்னர் இதனை இட்லி பாத்திரத்தில் வைத்து பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வேக வைத்து எடுத்தால் போதும். சுவையான இட்லி கேக் தயாராகிவிடும்.

- Advertisement -