மசாலா பூரி வித்தியாசமாக இப்படியும் கூட செய்யலாம். இந்த பூரிக்குத் தொட்டுக்கொள்ள எதுவுமே தேவை இருக்காது.

masala-poori
- Advertisement -

சாதாரணமாக எப்போதும் பூரி செய்வது போல இல்லாமல், கொஞ்சம் வித்தியாசமாக கோதுமை மாவுடன் இன்னும் சில மசாலா பொருட்களை சேர்த்து, வாசத்தோடு இப்படி ஒரு மசாலா பூரியை செய்து பாருங்கள். இந்த பூரிக்கு தொட்டுக்கொள்ள கூட எந்த சைட் டிஷ் தேவைப்படாது. குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் அப்படியே, கஷ்டப்படாமல் சாப்பிட்டு விடுவார்கள். சுலபமான முறையில் வித்தியாசமான மசாலா பூரி ரெசிபி உங்களுக்காக.

masala-poori1

ஒரு அகலமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கடலை மாவு – 3/4 கப், கோதுமை மாவு – 3/4 கப், ரவை – 1/4 கப், தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய்தூள் – 1 ஸ்பூன், ஓமம் – 1 ஸ்பூன், கஸ்தூரி மேத்தி – 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து முதலில் தண்ணீர் எதுவும் ஊற்றாமல் உங்கள் கையை கொண்டு நன்றாக கலந்து விடுங்கள். எல்லா மசாலாப் பொருட்களும் ஒன்றாக கலக்கட்டும். (ஓமத்தை உள்ளங்கைகளில் வைத்து நுனிக்கு சேர்த்துக்கொள்ளுங்கள். இதேபோல் கஸ்தூரிமேத்தியையும் உள்ளங்கையில் வைத்து நுனிக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.)

- Advertisement -

அதன் பின்பு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை மாவின் மேலே தூவி கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து இந்த மாவை, பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். மாவை கொஞ்சம் கெட்டியாக பிசைந்து கொள்ளுங்கள். தண்ணீராக பிசைந்துவிட்டால் எண்ணெயில் பொரித்து எடுக்கும் போது பூரியில் எண்ணெய் குடித்து விடும். (பிசைந்த மாவை 10 நிமிடம் போல ஒரு மூடி போட்டு ஊறவைத்து விடுங்கள்.)

masala-poori

மாவு ஊறிய பின்பு எப்போதும் போல சிறிய சிறிய உருண்டைகளாக திரட்டி மாவு தொட்டு இதை பூரி போல கொஞ்சம் தடிமனாக திரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டியது தான். எண்ணெய் நன்றாக சூடு ஆன பின்பு பூரிகளை எண்ணெயில் போட்டு சுட்டு எடுத்தால் எண்ணெய் குடிக்காமல் சூப்பரான பூரி உப்பலாக நமக்கும் கிடைக்கும்.

- Advertisement -

குழந்தைகள் இந்த பூரியை ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக இரண்டு பூரி செய்து கொடுக்கலாம். தேவைப்பட்டால் இதற்கு தேங்காய் சட்னி தொட்டுக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். உங்களுக்கு இந்த வித்தியாசமான ரெசிபி பிடிச்சிருக்கா உங்க வீட்ல ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.

kerai

பின்குறிப்பு: நிறைய பேர் வீடுகளில் கஸ்தூரி மேத்தி இருக்காது. காய்ந்த வெந்தயக் கீரையை தான் கஸ்தூரி மேத்தி என்று சொல்லுவார்கள். வெந்தயக்கீரை கிடைத்தாலும் அதை சுத்தம் செய்து பொடியாக வெட்டி இந்த மாவுடன் பிசைந்து பூரி செய்யலாம்.

- Advertisement -