வறுத்தரைத்த வத்த குழம்பு இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க, 3 நாளைக்கு கூட வைத்து சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம்! அவ்வளவு ருசியாக இருக்கும்.

vatha-kuzhambu-powder
- Advertisement -

என்னதான் மிளகாய் பொடி போட்டு வத்த குழம்பு செஞ்சாலும், இப்படி ஒரு முறை நம் கைகளால் அரைத்து செய்யும் பொழுது அதன் ருசியே அபாரம் தான். கெட்டியான பதத்தில், கை மணக்க நம் கைகளால் மசாலா பொருட்களை சேர்த்து வறுத்து அரைத்து பின்னர் இப்படி ஒரு முறை வத்த குழம்பு செஞ்சு பாருங்க, மூன்று நாட்களுக்குக் கூட சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு கொண்டே இருக்கலாம். சுவையான வத்தக் குழம்பு செய்வது எப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

வறுத்தரைத்த வத்த குழம்பு செய்ய தேவையான பொருட்களை:
கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன், பாசிப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன், தனியா விதைகள் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், வர மிளகாய் – 2, சீரகம் – கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், கருவேப்பிலை – 2 இணுக்கு, சின்ன வெங்காயம் – 8, தக்காளி – 1, புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, குழம்பு மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

வறுத்தரைத்த வத்த குழம்பு செய்முறை விளக்கம்:
வறுத்தரைத்த வத்த குழம்பு செய்வதற்கு முதலில் வறுக்க தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து, அதில் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். இப்போது ஒன்றன் பின் ஒன்றாக இந்த பொருட்களை போட்டு லேசாக வறுத்து எடுக்க வேண்டும். அதற்கு முதலில் நீங்கள் கடலைப்பருப்பு சேர்த்து லேசாக வதக்க வேண்டும். பின்னர் அதே அளவிற்கு மற்ற பொருட்களையும் ஒவ்வொன்றாக போட வேண்டும்.

இப்போது பாசிப்பருப்பு சேர்த்து லேசாக வறுக்க வேண்டும். அதன் பிறகு தனியா ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்து நன்கு வாசம் வர வேண்டும். பிறகு மிளகு, சீரகம் சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். கடைசியாக 2 வரமிளகாய்களை காம்பு நீக்கி கிள்ளி சேர்த்து லேசாக வறுத்து அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். இவை நன்கு ஆறிய பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் இவற்றை சேர்த்து நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த பொடியை ஒரு கிண்ணத்தில் எடுத்து விட்டு அதே மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயத்தை தோலுரித்து சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தக்காளி பேஸ்டையும் தனியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எல்லாமே அரைத்து செய்வதால் இதன் ருசி அபாரமாக இருக்கும். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயத்தின் பச்சை வாசம் போக, தக்காளி பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். இவற்றுடன் நீங்கள் அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து நன்கு இடைவிடாமல் வதக்க வேண்டும்.

பின்னர் ஒரு எலுமிச்சை அளவு புளியை கரைத்து ஊற்றி கொள்ளுங்கள். இதில் சேர்க்கப்பட்டுள்ள பொடி வகைகள் நல்ல கெட்டித் தன்மையை தரும். எனவே தேவையான அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். பின்னர் குழம்பு மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் அளவிற்கு மட்டும் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கலந்து விடுங்கள். குழம்பு கெட்டியாக கொதித்து வந்த பிறகு சூடான எண்ணெயில் கொஞ்சம் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கினால் அவ்வளவு அருமையான ஒரு வத்த குழம்பு தயார்! இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -