இப்படி மட்டும் நீங்கள் செய்தால் கொஞ்சம் கூட சிரமப்படாமல் கொஞ்ச நேரத்தில் மூட்டை மூட்டையாக துணி இருந்தாலும் துவைத்து விடலாமே! துணி துவைக்க சோம்பல் படுபவர்களுக்கு பயனுள்ள டிப்ஸ்.

washing-clothe-baking-soda
- Advertisement -

இன்று இருக்கும் அவசரமான உலகில் யாருக்கும் தங்களையே அக்கறையுடன் கவனிக்க நேரமில்லாமல் போய்விட்டது. இதில் எப்படி துணிகளை அக்கறையோடு துவைத்துக் கொள்வோம்? குறிப்பாக தன் துணிகளை தானே துவைக்கும் ஆண்களுக்கு இந்த குறிப்புகள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். துணிமணிகளை மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்திருப்பவர்கள், சிரமம் இல்லாமல் துணி துவைத்து முடிப்பது எப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள போகிறோம்.

எப்போது துணி துவைக்கும் பொழுது அன்றைய நாளைய துணியை அன்றைக்கே துவைத்து விடுவது தான் நல்லது. கொஞ்சம் சோம்பல் பட்டு சேர்த்து வைத்து விட்டால் அவ்வளவுதான், இடுப்பு எலும்பு உடைந்து போகும் அளவிற்கு நாம் உட்கார்ந்து துவைக்க வேண்டி இருக்கும். துணிமணிகளை கொஞ்சம் கூட சிரமப்படாமல், கை வலிக்க நோகாமல் துவைக்க சொல்லி கொடுத்தால் கசக்குமா என்ன?

- Advertisement -

உண்மையில் பெண்களின் எடை கூடுவதற்கு துணி துவைக்காமல் மெஷினில் போடுவதும் ஒரு காரணம் என்கிறது ஆய்வுகள்! கைகளால் துணி துவைக்கும் பெண்களுக்கு அவ்வளவு சீக்கிரம் உடல் எடை கூடாது. குறைந்தது ஒரு மணி நேரமாவது குனிந்து நிமிர்ந்து துணி துவைத்து காய போட்டு பாருங்கள் குண்டாக இருப்பவர்கள் சீக்கிரமே எதுவும் செய்யாமலேயே ஒல்லி ஆகிவிடலாம்.

சரி, இப்போது பதிவிற்குள் போவோம். முதலில் ஒரு பெரிய பக்கெட் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு ஆப்ப சோடா எனப்படும் சமையல் சோடா சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ரெண்டு ஸ்பூன் அளவுக்கு வினிகர் சேர்த்துக் கொள்ளுங்கள். வினிகர் ஆப்ப சோடாவின் மீது ஊற்றியதும் அதில் நுரைக்க ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் நீங்கள் துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர் அல்லது லிக்விட் எவ்வளவு போட வேண்டுமோ அவ்வளவு உங்கள் தேவைக்கு ஏற்ப போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் பாதி அளவிற்கு தண்ணீரை பிடித்துக் கொள்ளுங்கள். கைகளால் நன்கு கரைத்துக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் துவைக்க வேண்டிய துணிமணிகளை அதில் போட்டு அழுத்தி விடுங்கள். அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை அப்படியே ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு நீங்கள் சோப்பு, கம்ஃபோர்ட், பிரஸ் என்று எதுவுமே போடத் தேவையில்லை! ஒவ்வொரு துணியாக எடுத்து லேசாக தரையில் போட்டு கும்மி துவைத்து எடுத்தாலே போதும், விடாப்பிடியான அழுக்குகள் முதல் காலரில் படிந்துள்ள தீராத கறைகள் வரை அனைத்துமே நீங்கிவிடும். அந்த அளவிற்கு இது எஃபக்டிவாக இருக்கும். இதை மெஷினுக்கு பயன்படுத்தக் கூடாது மேலும் துணிமணிகளை துவைத்ததும் நீங்கள் கம்போர்ட் போடுவதற்கு பதிலாக டெட்டால் கலந்த தண்ணீரில் அலசி எடுத்தால் வாசமும் நன்றாக இருக்கும், கிருமிகளும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
அட இஞ்சி பூண்டு அரைப்பது ஒரு விஷயமா அப்படின்னு யோசிக்கிறவங்க, இஞ்சி பூண்டு விழுதை இப்படி அரைச்சு பாருங்க, ஆறு மாசம் ஆனா பிறகும் கூட இப்ப அரைச்ச மாதிரியே பிரஸ்ஷா இருக்கும். நீங்களும் மத்தவங்களுக்கு சொல்லுவீங்க.

ரொம்பவும் ஆரோக்கியமான முறையில் நீங்கள் இப்படி துணி துவைத்து பாருங்கள், துணிகள் சீக்கிரம் கிழிந்து போகாது. துணியின் நூலிழைகளுக்கு பாதுகாப்பாக இவை இருக்கும். மேலும் நம்மையும் சிரமப்படாமல் நம்முடைய வேலைகளை முடிக்க வைக்கும். சமையல் செய்யும் பொழுது அல்லது எண்ணெய் கறை உங்களுடைய துணிமணிகள் தெரியாமல் பட்டுவிட்டாலும், நீங்கள் உடனே விபூதியை எடுத்து அந்த இடத்தில் பூசி விட வேண்டும். அதன் பிறகு எப்பொழுதும் போல இந்த முறையில் நீங்கள் துவைத்து எடுத்தால் கொஞ்சம் கூட எண்ணெய் கறைகள் இருக்காது. இப்படி விடாப்பிடியாக மற்றும் அழுக்குகள் நிறைந்துள்ள துணிமணிகளை கொஞ்சம் கூட கஷ்டப்படாமல் துவைத்து எடுத்து விடலாமே!

- Advertisement -