நம்ம வீட்டு பாத்ரூம் எவ்வளவு கறை படிந்திருந்தாலும் பளிச் பளிச்சுன்னு மாத்த இனி கை வலிக்க தேய்த்து கஷ்டப்படவே வேண்டாமே! பாத்ரூம் சுத்தம் செய்ய 5 புதிய டிப்ஸ்.

toilet-cleaning-tips
- Advertisement -

வீட்டில் எல்லா அறைகளை காட்டிலும் குளியலறை மற்றும் கழிப்பறை ரொம்பவே சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகிறது. அதிகமான குழந்தைகள் இருக்கும் இல்லங்களில் இதனை சுத்தம் செய்வது என்பது ரொம்பவே கடினமான விஷயமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த விஷயங்களை நீங்கள் செய்யும் பொழுது கொஞ்சம் கூட சிரமப்படாமல், கை வலிக்காமல் நொடியில் உங்களுடைய பாத்ரூம் பளிச் பளிச்சுன்னு மாத்திடலாம். அது எப்படின்னு? இந்த வீட்டுக்குறிப்பு பதிவின் மூலம் இனி தெரிஞ்சுக்க போறோம் வாங்க.

yellow-stain-toilet

வீட்டில் இருக்கும் பாத்ரூம் சுத்தம் செய்ய இதுவரை நீங்கள் சிரமப்பட்டு இருக்கலாம், ஆனால் இந்த விஷயங்களை நீங்கள் கடைபிடிக்கும் பொழுது எப்பொழுதுமே நறுமணமாகவும், சுத்தமாகவும் கிருமிகள் இன்றியும் உங்களுடைய பாத்ரூம் ஆரோக்கியமானதாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 1:
நம்ம வீட்டு பாத்ரூம் எப்பொழுதும் நறுமணத்துடன் இருக்க, கிருமிகள் இல்லாமல் இருக்க நாம் பயன்படுத்தக்கூடிய தண்ணீரில் டெட்டால் சேர்ப்பது நல்லது. குறிப்பாக குழந்தைகள் அடிக்கடி பாத்ரூம் பயன்படுத்தும் பொழுது பக்கெட் நிறைய தண்ணீர் பிடித்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு மூடி டெட்டால் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரை பயன்படுத்தும் பொழுது பாத்ரூம் எப்பொழுதும் சுத்தமாகவும், நறுமணமாகவும் இருக்கும்.

குறிப்பு 2:
பாத்ரூமில் தண்ணீர் போகும் ஓட்டைகளில் இருக்கக்கூடிய பில்டர் கப்புகள் மீது ஒன்றிரண்டு நாப்தலின் பால்ஸ் எனப்படும் பாச்சா உருண்டைகளை போட்டு வையுங்கள். பாத்ரூம் மற்றும் அல்லாமல் பாத்திரம் தேய்க்கும் சிங்க்கிலும் போட்டு வைத்தால் நாற்றம் அடிக்காமல் இருக்கும். பூச்சிகளும் வராது.

- Advertisement -

குறிப்பு 3:
கழிப்பறையில் நீங்கள் வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவராக இருந்தால் ஃபிளஷ் டாங்கில் வாரம் ஒரு முறையாவது சிறிதளவு டூத் பேஸ்ட்டை போட்டு வையுங்கள். இதனால் ஒவ்வொரு முறை ஃபிளஷ் செய்யும் பொழுதும் கிருமிகள், அழுக்குகள், கறைகள் படியாமல் நுரைக்க தண்ணீர் வரும். இதனால் கழிப்பறை சுத்தமாகவே இருக்கும்.

குறிப்பு 4:
அதிகமான உப்பு கறை படிந்துள்ள பாத்ரூம் டைல்ஸ் மற்றும் சிங்க் அருகே இருக்கும் டைல்ஸ்களில் ஈரம் படாமல் ஒரு நாள் முழுவதும் நன்கு காய விட்டு விடுங்கள். காய்ந்த பிறகு எமரி பேப்பர் எனப்படும் உப்பு பேப்பரை வைத்து லேசாக தேய்த்துக் கொடுத்தால் போதும், உப்பு கறை தானாகவே கீழே உதிர்ந்து விழுந்து விடும். பிறகு சாதாரணமாக நீங்கள் சோப்பு போட்டு கழுவிக் கொள்ளலாம். கொஞ்சம் கூட சிரமமே பட வேண்டாம். இதற்காக எந்த கெமிக்கலையும் பயன்படுத்தவும் வேண்டாம்.

- Advertisement -

blue-soap-bar

குறிப்பு 5:
பாத்ரூம் டைல்ஸ், கழிப்பறை மற்றும் அழுக்கு, விடாப்பிடியான கறைகள் நிறைந்துள்ள எல்லா இடங்களையும் சுத்தம் செய்வதற்கு இந்த ஒரு லிக்விட் ஒன்றை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அரை லிட்டர் அளவிற்கு தண்ணீரில் ஐந்து ரூபாய் துணி துவைக்கும் சோப்பு ஒன்றை வாங்கி ஊற வைத்து விடுங்கள். இது முழுவதுமாக கரைந்த பின்பு ஒரு பெரிய எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி சாறை எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். அரை கப் அளவிற்கு கல் உப்பு போட்டு நன்கு கரையுங்கள். பின் ரெண்டு ஸ்பூன் லைசால் அல்லது ஹார்பிக் ஏதாவது ஒன்றை சேருங்கள்.

இதையும் படிக்கலாமே:
கிளாஸ் டாப், ஸ்டீல் கேஸ் ஸ்டவ் பயன்படுத்துபவர்கள் இனி கை வலிக்க அதிக நேரம் எடுத்து சுத்தம் செய்ய வேண்டாம் 10 நிமிடத்தில் கேஸ் ஸ்டவ் பளபளன்னு மின்னும்!

எல்லாவற்றையும் நன்கு நீர்க்க கரைத்த பின்பு ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் மூடி மீது ஒரு ஓட்டை போட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் பாத்ரூம் கழுவுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு எல்லா இடங்களிலும் படும்படி இந்த லிக்விடை ஊற்றி பிரஷ் வைத்து தேய்த்து கொடுங்கள். ஊற விட்டுவிட்டு அரை மணி நேரம் பிறகு பாருங்கள், எவ்வளவு விடாப்பிடியான கறைகள் கூட முழுமையாக நீங்கி இருக்கும். அதன் பிறகு லேசாக பிரஷ் கொண்டு தேய்த்து, தண்ணீர் ஊற்றி கழுவினால் போதும், உங்களுடைய பாத்ரூமா இது? என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!

- Advertisement -