கிளாஸ் டாப், ஸ்டீல் கேஸ் ஸ்டவ் பயன்படுத்துபவர்கள் இனி கை வலிக்க அதிக நேரம் எடுத்து சுத்தம் செய்ய வேண்டாம் 10 நிமிடத்தில் கேஸ் ஸ்டவ் பளபளன்னு மின்னும்!

onion-gas-stove
- Advertisement -

கிளாஸ் டாப் எல்லோருடைய வீட்டிலும் இருக்கும் என்று கூறி விட முடியாது. கிளாஸ் டாப் ஸ்டவ் பயன்படுத்துபவர்கள் அதை ரொம்பவே எளிதாக சுத்தம் செய்து விடுவார்கள். அதிலும் உட்புறம் இருக்கக்கூடிய ஸ்டீல் பகுதியை சுத்தம் செய்வது கடினமாகத் தான் இருக்கும். இப்படி கிளாஸ் டாப் மற்றும் ஸ்டீல் கேஸ் ஸ்டவ் பயன்படுத்துபவர்கள் இனி கை வலிக்க, நேரம் செலவு செய்து அதை தேய்த்து சுத்தம் செய்ய வேண்டாம். ரொம்ப ஈசியாக பளிச்சென்று மாற்றுவது எப்படி? என்று இந்த வீட்டு குறிப்பு பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க.

நாம் சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள் வெங்காயம்! இந்த வெங்காயத்தை வைத்து உங்களுடைய கிளாஸ் ஸ்டவ் இனி பளபளன்னு ஜொலிக்கப் போகிறது பாருங்க. ஒன்றிரண்டு வெங்காயத்தை தோலுரித்து நான்கைந்தாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். வெட்டிய வெங்காயத்துடன் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு வேக விடுங்கள். ஒரு ஐந்து நிமிடம் தண்ணீர் கொதித்த பிறகு அப்படியே மூடி போட்டு ஆறவிட்டு விடுங்கள்.

- Advertisement -

இந்த தண்ணீர் ஆறியதும் வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். இந்த வெங்காய கரைசலை ஸ்டவ்வின் மீது எல்லா இடங்களிலும் படும்படி தெளித்து தெளித்து கொடுங்கள். அப்படியே பத்து நிமிடம் ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு நீங்கள் சாதாரண இரும்பு ஸ்கிரப்பர் வைத்து லேசாக தேய்த்து கொடுங்கள். விடப்படியான கறைகள் மெல்ல மெல்ல கரைய ஆரம்பிக்கும்.

பிறகு ஒரு எலுமிச்சையை இரண்டாக வெட்டி அதன் சாறை எடுத்து ஸ்டவ்வின் எல்லா பகுதிகளிலும் படும்படி தெளித்து, அந்த எலுமிச்சையின் மூடியை கொண்டே தேய்த்துக் கொடுங்கள். அதிகம் அழுக்கு படிந்த இடங்களில் சமையலுக்கு பயன்படுத்தும் ஆப்ப சோடா சேர்த்து தேய்க்கலாம்.

- Advertisement -

அவ்வளவுதான், உங்களுடைய கியாஸ் ஸ்டவ் ரொம்பவே பளிச்சுன்னு மாற ஆரம்பிக்கும். அதன் பிறகு கடைசியாக ஒரு முறை நீங்கள் சாதாரண சோப்பு போட்டு லேசாக தேய்த்துக் கொடுங்கள் போதும். துரு கறை, சமையல் செய்யும் பொழுது பொருட்கள் பொங்கி வழிந்து ஏற்பட்ட கறை, பால் கறை எதுவாக இருந்தாலும் அவை முழுமையாக நீங்கிவிடும்.

வெங்காயம் வேக வைக்கும் தண்ணீரில் நான்கைந்து எலுமிச்சையின் மூடிகளை கூட போட்டு வேக வைக்கலாம். அரை லிட்டர் தண்ணீரில் நுரை வரும் அளவிற்கு கொஞ்சம் டூத் பேஸ்ட்டை கலந்து குழுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை ஸ்பிரே செய்து வாரம் ஒரு முறை நீங்கள் உங்களுடைய ஸ்டவ்வை இரும்பு நார் கொண்டு தேய்த்து கொடுத்தால் போதும் இனி விடாப்பிடியான கறைகள் படியவே படியாது.

இதையும் படிக்கலாமே:
கேஸ் பற்ற வைப்பதற்கு முன்பு கொஞ்சம் இந்த விஷயத்தையும் தெரிஞ்சுக்கோங்க. கேஸ் சிலிண்டருக்கும் காலாவதி தேதி உண்டு. அதை கண்டுபிடிப்பது எப்படி?

கியாஸை மிச்சப்படுத்த கேஸ் ஸ்டவ் மட்டும் சுத்தம் செய்து கழுவினால் போதாது. அதில் இருக்கும் பர்னரை கூட நீங்கள் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு நாள் முழுக்க கெட்டியாக கரைத்த புளி தண்ணீரில் பர்ணர்களை போட்டு வைத்து விடுங்கள். 24 மணி நேரம் அல்லது 48 மணி நேரம் ஊறிய பிறகு நீங்கள் புளி தண்ணீரில் இருந்து பர்ணரை எடுத்து சோப்பு போட்டு தேய்த்து கழுவினால் போதும் பர்னர் ஜொலிக்கும்.

- Advertisement -