ஈசனின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற்றவர்களால் தான், இந்த மந்திரத்தை உச்சரிக்க முடியும்.

sivan mantra

நடனக் கலையில் தேர்ச்சி பெற்ற சிவபெருமானை ஆடலரசன் என்று கூறுவார்கள். சிவன் ஆடிய நடனங்கள் சிவதாண்டவம் என்று அழைக்கப்படும். இதில், சிவபெருமான் ஆனந்தமாக இருக்கும்போது இடது காலைத் தூக்கி நடனமாடும் கோலம், நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். ஆனந்தமாக இருக்கும் சமயத்தில் சிவபெருமான் ஏன் இடது காலைத் தூக்கி ஆட வேண்டும்? என்ற சந்தேகம் இதுவரை உங்களுக்கு எழுந்தது உண்டா? ‘கால்’ என்றால் ‘காற்று’ என்ற மற்றொரு அர்த்தமும் உண்டு. காற்றுக்கும், இடதுபக்கம் காலைத்தூக்கி ஆடுவதற்கும் என்ன சம்பந்தம் என்று  நீங்கள் சிந்திக்கலாம். மனித பிறவிக்கு மூக்கு ஒன்றுதான். ஆனால் அதில் சுவாசம் 2. வலப்பக்கமும் சுவாசம் இருக்கும். இடது பக்கமும் சுவாசம் இருக்கும். வலப்பக்க சுவாசத்தை சூரிய கலை என்றும், இடப்பக்க சுவாசத்தை சந்திர கலை என்றும் கூறுவார்கள்.  சுவாசத்தின் பகுதியை தான் ‘கலை’ என்று கூறுவார்கள். கலையை, ‘நாடி’ என்ற மற்றொரு பெயரிலும் கூறலாம்.

natarajar 1

இந்த இரண்டு சுவாசமும் சூரிய, சந்திரனை குறிப்பிடும் வகையில் நம் உடலோடு அமைந்துள்ளது. சூரியன் என்றால் உஷ்ணம். சந்திரன் என்றால் குளிர்ச்சி. மனித உடலுக்கு தேவையான இந்த இரண்டையும் தருவது சுவாசம் தான். மனிதனாகப்பட்டவன் நல்ல காரியங்களில் ஈடுபடும்போது அவன் குளிர்ந்த மணம் உடையவனாகவும், வாழ்க்கையில் தடுமாற்றம் ஏற்பட்டு, கருணை இல்லாத சில கொடிய காரியங்களில் ஈடுபடும்போது, கெட்ட குணத்தையும் பெறுகின்றான். இப்படிப் பார்க்கும்போது நம்முடைய மனம் குளிர்ந்தால் தான் அன்பும், அரவணைப்பும், கருணையும், பெறப்படுகிறது. மனிதன் உயிர் வாழ ஆதாரமாக இருக்கும் இதயம் இடப்பக்கம்தான் இருக்கிறது. அந்த இதயத்தில் கருணை எப்போதும் இருக்கும். கருணையை வெளிப்படுத்தாமல் இருப்பவர்களுக்குத்தான் பிரச்சனை. நம்முடைய இதயம் இடப்பக்கம் இருப்பதால், சிவபெருமான் ஆனந்தமாக இருக்கும்போது, தனது இடது காலை தூக்கி ஆடிக்கொண்டு இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இடது கால், இடது பக்கம் ஓடும் மூச்சு.

இதற்காக மட்டும்தான் இடதுகாலை தூக்கி ஆடுகின்றாரா? மூச்சை எதற்காக சிவபெருமானுடன் இனைக்கிறீர்கள் என்ற சந்தேகமும் சிலருக்கு வரலாம்?

maragatha-natarajar

‘கால்’ என்றால் காற்று. காற்றிற்கு மற்றொரு பொருள் வாசி. வாசி என்பது படிப்பதை குறிக்கும். பாடத்தை வாசிப்பது போல, மனிதன் தன்னுடைய மூச்சு வரும் வழியை வாசிக்க வேண்டும். இப்படி வாசிப்பதன் மூலம் நம்முடைய வாழ்வு வளம் பெறும். ஆரோக்கியம் மேம்படும். ஆயுளும் நீட்டிக்கப்படும். ‘சிவா சிவா’ என்று இடைவிடாமல் தொடர்ச்சியாக சொல்லித்தான் பாருங்களேன். ‘வாசி வாசி’ என்று  உச்சரிப்பு வரும். ‘வாசி வாசி’ என்று தொடர்ந்து சொல்லி பாருங்கள். ‘சிவா சிவா’ என்ற உச்சரிப்பு வந்துவிடும். வாசி என்பது சுவாசம். நம்மையும் சிவபெருமானையும் இணைப்பதுதான் இது.

- Advertisement -

நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கும் இந்த சிவபெருமானின் மூலமந்திரத்தை நாமும் தெரிந்து கொண்டு தினம்தோறும் உச்சரிப்பது தானே அழகு. உங்களுக்கான சிவபெருமானின் மூல மந்திரம் இதோ..

mantra chanting procedure tamil

சிவபெருமான் மூல மந்திரம்:
“ஓம்கார நமசிவாய ஓம் நகாராய நமசிவாய‌
ஓம் மகாராய நமசிவாய ஓம் சிகாராய நமசிவாய
ஓம் வகாராய நமசிவாய ஓம் யகாராய நமசிவாய ஓம் நம ;
ஸ்ரீ குரு தேவாய, பரமபுருஷாய ஸர்வ தேவதா வசீகராய‌
ஸர்வாரிஷ்ட விநாசாய ஸர்வ துர்மந்தரச் சேதனாய
த்ரை லோக்யம் வசமாய ஸ்வாஹா ”

sivan-3

இந்த மந்திரத்தை காலை எழுந்தவுடன் பதினோரு முறை உச்சரிப்பது நல்ல பலனைத் தரும். நம் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகிவிடும். ஈசனின் ஆசீர்வாதத்தை வரமாக பெறமுடியும். தோல்வியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். புகழின் உச்சிக்கு செல்லலாம். துஷ்ட சக்திகள் நம்மை அண்டாது. நம் மனதை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் காமம், குரோதம், பற்று, பேராசை, அகங்காரம் இவைகள் அனைத்தும் நீங்கிவிடும். மனதில் எந்தவிதமான கெட்ட எண்ணமும் இல்லாதவர்கள், அந்த ஈசனின் ஆசியை பெற்றவர்கள் தானே. தினம்தோறும் உங்களால் இந்த மந்திரத்தை உச்சரிக்க முடியவில்லை என்றாலும் பிரதோஷ காலத்திலாவது பதினோரு முறை உச்சரிப்பது மிகவும் நல்ல பலனைத் தரும். மந்திரத்தை உச்சரிக்கும்போது பிழையில்லாமல் உச்சரிப்பது அவசியம்.

இதையும் படிக்கலாமே
செல்வ செழிப்போடு வாழ வேண்டுமா? குபேரருக்கு இந்த மந்திரத்தைச் சொல்லி இப்படி பூஜை செய்யுங்கள்!

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Sivan manthiram. Sivan manthiram Tamil. Sivan manthirangal Tamil. Sivan slogam.