வடித்த சாதம் இருந்தால் போதும். அடுத்த 10 நிமிஷத்தில் இந்த முட்டை சாதத்தை தயார் செய்துவிடலாம். சமைக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறும்.

rice2
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமாக இந்த முட்டை சாதம் செய்வார்கள். முட்டை சாதம் என்றாலே நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப இஷ்டம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடுவார்கள். காலையில் எழுந்து ஒரு வெள்ளை சாதத்தை வடித்துவிட்டால் போதும். நாவிற்கு சுவை தரும் இந்த முட்டை சாதத்தை அடுத்த 10 நிமிஷத்தில் செய்துவிடலாம். லஞ்ச் பாக்ஸுக்கு தேவை என்றாலும் கட்டிக் கொடுக்கலாம். திரும்பி வரும்போது நிச்சயம் லஞ்ச் பாக்ஸ் காலியாக தான் வரும். முட்டை பிடிக்காது முட்டை சாப்பிடாத குழந்தைகளை சாப்பிட வைக்க இந்த ரெசிபி உதவியாக இருக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் இந்த யம்மி ரெசிபியை பார்த்து விடுவோம்.

முதலில் 2 பேர் சாப்பிடும் அளவிற்கு, 2 கப் சாதத்தை உதிரி உதிரியாக தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சாதாரண அரிசி சாதமாக இருந்தாலும் சரி, பாஸ்மதி அரிசி சாதமாக இருந்தாலும் சரி, இரண்டு பேர் சாப்பிடும் அளவிற்கு பின் சொல்லக்கூடிய அளவு சரியானதாக இருக்கும்.

- Advertisement -

அடுத்து ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 3 முட்டைகளை உடைத்து ஊற்றி, 1/4 ஸ்பூன் உப்பு, 1/2 ஸ்பூன் மிளகுத்தூளை இதன் மேலே தூவி ஒரு நிமிடம் விட்டு அதன் பின்பு கரண்டியை வைத்து லேசாக கலக்கிக் கொடுங்கள். மஞ்சள் கருவெல்லாம் நன்றாக கலந்து முட்டை இரண்டு நிமிடத்தில் வெந்து வந்துவிடும். அதன் பின்பு இந்த முட்டையை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அப்படியே இருக்கட்டும்.

அதன் பின்பு வேறு ஒரு கடாயை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி கடுகு – 2 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய தோல் உரித்த பூண்டு பல் – 4 போட்டு நன்றாக வதக்க வேண்டும். பூண்டு அப்படியே பிரவுன் கலரில் வந்து விட வேண்டும். அதன் பின்பு நீளமாக மெல்லிசாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, மிகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2 கருவேப்பிலை – 1 கொத்து, சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் பிரவுன் கலரில் வதங்கி வந்தால் தான் சுவையாக இருக்கும்.

- Advertisement -

அதன்பின்பு மிகவும் பொடியாக சாப் செய்த தக்காளி பழம் – 1 போட்டு இந்த மசாலாவுக்கு தேவையான அளவு உப்பை தூவி தக்காளியை கண்ணுக்கு தெரியாமல் வதக்கி விடுங்கள். அதன் பின்பு மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், குழம்பு மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக வதக்கவும்.

மசாலா பொருட்கள் எல்லாம் எண்ணெயில் சேர்ந்து ஒரு நிமிடம் வதங்கியவுடன் ஏற்கனவே கலக்கி வைத்திருக்கும் முட்டையை கடாயில் உள்ள மசாலா பொருட்களோடு சேர்த்து நன்றாக துண்டு துண்டாக கரண்டியாலே வெட்டி கலந்து விடுங்கள். முட்டை மசாலா இப்போ தயார் ஆகிவிட்டது. இந்த இடத்தில் ஆற வைத்திருக்கும் உதிரி உதிரியாக இருக்கும் சாதத்தை மசாலாவில் போட்டு நன்றாக கலந்து விட வேண்டும். சாதத்தில் உப்பு போட்டு வடித்திருந்தால் உப்பை பார்த்து இந்த இடத்தில் தேவைப்பட்டால் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கொஞ்சமாக கொத்தமல்லி தழையை தூவி மசாலா பொருட்கள் அனைத்தும் சாதத்தில் இறங்க வேண்டும். சாதம் நன்றாக சூடாகும் வரை அரிசியை உடையாமல் ஜென்டில் ஆக களரி விட்டு, இறுதியாக அரை ஸ்பூன் மிளகுத்தூளை தூவி கலந்து அப்படியே ஒரு மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் விட்டு விடுங்கள். அதன் பின்பு எடுத்து சுட சுட இதை சாப்பிட்டாலும் சுப்ரதா இருக்கும். லஞ்ச் பாக்ஸில் போட்டு கொடுத்தாலும் மதியம் சாப்பிட சூப்பராக தான் இருக்கும். ரொம்ப ரொம்ப சுலபமான முறையில் இந்த எக் ரைஸை யாரும் மிஸ் பண்ணாதீங்க. ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -