பல நாள் பணக்கஷ்டம், ஒரே நாளில் காணாமல் போக, ஒரே 1 ஏலக்காய் போதும். இப்படி மட்டும் செய்தால் ஒரே நாளில் பல கோடிகள் கொட்டும்.

cash8

ஒரே நாளில், ஒரு கோடி ரூபாய்க்கு சொந்தக்காரராக மாற வேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது. ஆனால் ஒரே இரவில் ஓபாமா ஆகி விட முடியுமா? நிச்சயமா முடியாதுங்க! உழைக்காமல், கஷ்டப்படாமல், வேலை செய்யாமல் நிச்சயமாக ஒருவரால் கோடீஸ்வரராக மாற முடியாது. அப்படியே உழைக்காமல் கஷ்டப்படாமல் நம் கைக்கு ஏதோ ஒரு வழியில் பணம் வந்தாலும், அது நமக்கு நன்மை தரக்கூடிய பணமாக நிலைத்து நிற்காது. உழைத்து கஷ்டப்பட்டு சம்பாதிக்கக்கூடிய வெறும் நூறு ரூபாயாக இருந்தாலும், அதன் மூலம் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். சரி, நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்க வேண்டும் என்றால் ஆன்மீக ரீதியாக என்ன செய்யலாம்? பல வழிகள் உள்ளன. அதிலிருந்து ஒரு சுலபமான வழியை இன்று தெரிந்து கொள்வோமா?

money1

நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு சுலபமான பரிகாரம் இதோ! நம்பிக்கையோடு செய்தால் பலன் பல மடங்கு கிடைக்கும். கட்டாயம் தினமும் நம் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதோடு சேர்த்து இந்த பரிகாரத்தையும் செய்து விடுங்கள். உங்கள் வீட்டில் பூஜை அறையில் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைக்கும் பழக்கம் இருந்தாலும் சரி, அப்படி இல்லை என்றால் சிறிய கலச செம்பு அல்லது பித்தளை சொம்பில் தண்ணீர் வைக்கும் பழக்கம் இருந்தாலும் சரி.

காலையில் தீபம் ஏற்றுவதற்கு முன்பு அந்த பாத்திரத்தில் புதியதாக தண்ணீரை நிரப்பிக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் 2 ஏலக்காய்களை நன்றாக இடித்துப் போட்டுக் கொள்ள வேண்டும். பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு பாத்திரத்தில் தண்ணீர் நிரம்பியிருக்கும் சொம்பை உங்களது உள்ளங் கைகளில் வைத்துக் கொள்ள வேண்டும்.

sembu-sombu

குல தெய்வத்தையும், பஞ்சபூதங்களில் ஒன்றான நீருக்கு சொந்தமான கங்காதேவியும் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் உங்களை விட்டு நீங்கவேண்டும். கடன் பிரச்சனை தீர வேண்டும். பணப்பிரச்சனை தீர வேண்டும். வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவேண்டும். செய்யும் வேலையில் நல்ல வருமானம் கிடைக்க வேண்டும் என்ற நேர்மறையான வேண்டுதலை வைக்க வேண்டும்.

வேண்டுதலை முடித்துவிட்டு இந்த தண்ணீரை கொண்டு போய் ஏதாவது ஒரு செடியில் ஊற்றிவிட வேண்டும். உங்களுடைய வீட்டில் செடி இல்லை என்றால் ஒரு தொட்டி வாங்கி அதில் ஒரு செடியை நட்டு அந்த செடிக்கு இந்த தண்ணீரை ஊற்றி வளர்த்து வாருங்கள். தவறே கிடையாது. அந்தச் செடி கொஞ்சம் கொஞ்சமாக வளர்வது போல நீங்களும் உங்களுடைய வாழ்க்கையில் நிச்சயமாக நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள்.

praying-god

வீட்டில் இருக்கும் பெண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஆண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். தினம் தோறும் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து வரவேண்டும். நம்பிக்கை மட்டுமே மூலதனமாக இருக்க வேண்டும். மற்றபடி மற்ற விஷயங்களை அந்த ஆண்டவன் பார்த்துக்கொள்வான். விடா முயற்சியை கைவிடாதீர்கள். சம்பாதிக்க வேண்டும் என்ற மன உறுதியோடு இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம்.