வேஸ்டா கீழே தூக்கி போடுற ஊதுபத்தி அட்டை இருந்தா இப்படி செய்து இனி உங்க வீட்டு பக்கம் ஒரு எலி கூட வராம தலை தெறிக்க ஒட விட்ருங்க

rat
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் என்னவோ பிரச்சனைகள் இருக்கும். அதை எல்லாம் கூட சரி செய்து விட்டாலும் விடலாமே ஒழிய இந்த எலி தொல்லை சரி செய்வது பெரிய போராட்டமாக இருக்கும். நம் வீட்டில் பார்த்து பார்த்து பொருள்களை வாங்கி வைத்திருப்போம். இதில் விலை மலிவான பொருட்களில் இருந்து விலை அதிகமான பொருட்கள் வரை எந்த பாகுபாடும் என்று எல்லாவற்றையும் கடித்து நாசமாக்கி விடும். வீடு மட்டுமல்லாது அதை சுற்றி உள்ள தோட்டம் செடி என அனைத்தையும் கூட இந்த எலிகள் நாசப்படுத்தி விடும். இந்த எலிகள் உங்கள் திசை பக்கமே தலை வைத்துக் கூட படுக்காத அளவிற்கு ஒரு சூப்பரான டிப்ஸ் பற்றி தான் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

எலி வீட்டு பக்கம் வராமல் தலை தெறிக்க ஒட
இந்த பொருளை தயார் செய்ய நமக்கு வீட்டில் பயன்படுத்திய பிறகு கீழே தூக்கிப் போடும் ஊதுபத்தி அட்டையை எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு பவுலில் காலையில் வடித்த சாதம் மீதம் இருந்தால் அந்த சாதத்தை கொஞ்சமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை சாதம் இல்லை என்றால் கோதுமை மாவு, மைதா மாவு என ஏதேனும் ஒன்றை கொஞ்சமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக இதில் கேக் போன்றவற்றையெல்லாம் தயார் செய்ய பயன்படுத்தும் பேக்கிங் சோடாவை ஒரு ஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு பாத்ரூம் சுத்தப்படுத்த பயன்படுத்தும் ஆர்பிக் இரண்டு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். இதை எல்லாம் சேர்த்த பிறகு பழைய டூத் பிரஸ் வைத்து இதை நன்றாக கலந்து விடுங்கள். அப்போது இது நுரைத்து பொங்கி வரும் இவை அடங்கும் வரை காத்திருங்கள். இதை தயாரிக்கும் போது கையில் பிளவுஸ் அல்லது பழைய பிரஷ்ஸை பயன்படுத்துங்கள். இதற்கு நேரடியாக கையை பயன்படுத்த வேண்டாம்.

இப்போது நாம் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் ஊதுபத்தி அட்டையை எடுத்து அதன் மேல் இந்த பேஸ்ட்டை தடவி சிறிது நேரம் அப்படியே ஆற வைத்து விடுங்கள். இந்த பேஸ்ட் அட்டையில் பிடித்துக் கொண்டு கம் போல மாறி விடும். அதன் பிறகு அதை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி எலி வரும் இடங்களில் எல்லாம் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இது ஊதுபத்தி அட்டையில் தேய்க்கும் போது இதன் மணமும் சேர்ந்து இந்த பேஸ்டில் கலந்து விடும். ஆகையால் தான் இதற்கு ஊதுபத்தி அட்டையை பயன்படுத்துகிறோம். இது இல்லாத பட்சத்தில் வேறு அட்டையும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். இதை இரவு உறங்கும் போது வைத்து விடுங்கள். எலி இதிலிருந்து சிறிதளவு சாப்பிட்டால் கூட போதும். அடுத்த முறை இந்த பக்கமே தலை வைத்து கூட படுக்காமல் எங்காவது ஓடி விடும்.

இதையும் படிக்கலாமே: உங்க வீட்டு ஃபிரீசரில் ஐஸ் கட்டி மலை போல் குவிந்திருந்தாலும் அதை ஐந்து நிமிடத்தில் கரைக்க இதோ ஒரு சூப்பரான புத்தம் புது ஐடியா.

இந்த அட்டையை மறுநாள் காலையில் மறக்காமல் எடுத்து போட்டு விடுங்கள். சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் இதை மிக மிக கவனமாக வைத்து எடுத்து விடுங்கள். எலிகளை சுலபமாக விரட்ட இந்த முறையை கவனமாக கையாளுங்கள்.

- Advertisement -