உங்க வீட்டு ஃபிரீசரில் ஐஸ் கட்டி மலை போல் குவிந்திருந்தாலும் அதை ஐந்து நிமிடத்தில் கரைக்க இதோ ஒரு சூப்பரான புத்தம் புது ஐடியா.

fridge
- Advertisement -

நாம எல்லார் வீட்டிலுமே ஃபிரிட்ஜ் இருக்கு. அதில் இருக்கும் ஃபிரீசரில் ஐஸ் கட்டி மலை போல் குவிந்து இருக்கு. இதை defrost button ஐ அழுத்தி ஐஸ் கட்டிகளை கரைக்கலாம். ஆனால் நிறைய ஐஸ் கட்டிகள் பிடித்திருக்கும் ஃப்ரீசரில் இந்த பட்டனை அழுத்தி விட்டால், அந்த ஐஸ் கரைய, 24 மணி நேரத்திற்கு மேலே எடுக்கும். அவ்வளவு மெதுவாக கரையும். தண்ணீர் சொட்டி சொட்டி பிரிட்ஜ்க்கு உள்ளே தண்ணீர், பிரிட்ஜுக்கு வெளியே தண்ணீர் அதை எடுத்து கொட்டி சுத்தம் செய்வதற்குள் நமக்கு போதும் போதும் என ஆகிவிடும். அந்தக் கஷ்டத்தை சுலபமாக்க, இப்போ உள்ளே சேர்ந்திருக்கும் இந்த ஐஸ் கட்டிகளை சுலபமாக நீக்க ஒரு ஐடியா இருக்குது. அதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

ஃப்ரீசரில் இருக்கும் ஐஸ் கட்டியை சுலபமாக கரைய செய்ய ஐடியா:
இந்த குறிப்புக்கு நீங்கள் முதலில் ஒரு சின்ன டம்ளரில் சுடு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உப்பு போட்டு கரைக்க வேண்டும். உப்பு, தண்ணீரில் நன்றாக கரையட்டும். உங்க வீட்டு ஃபிரசரில் ரொம்ப நிறைய ஐஸ் கட்டி பிடித்திருக்கிறது என்றால், ஒரு டம்ளர் தண்ணீருக்கு நான்கிலிருந்து ஐந்து ஸ்பூன் உப்பு தேவை. உங்களுடைய ஃப்ரீசரில் எவ்வளவு ஐஸ் கட்டிகள் இருக்கோ அதற்கு தகுந்தது போல உப்பை கூடவே குறைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது நல்ல உப்பு நிறைய இருக்கும் அந்த வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு காட்டன் துணியை நனைத்து கொள்ளுங்கள். அந்த துணி லேசாக வெதுவெதுப்பாக சூடு இருக்க வேண்டும்.

- Advertisement -

ஃப்ரிட்ஜை ஆஃப் பண்ணிடுங்க. ஃபிளக்கையும் எடுத்துடுங்க. ஃப்ரீஷருக்குள் இந்த துணியை வைத்து மெதுவாக அப்படியே துடைத்துக் கொடுக்க வேண்டும். ஐஸ்கட்டிகள் மேலே எல்லாம் படும்படி இந்த துணியை வைத்து துடைத்துக் கொடுத்துவிட்டு, மீண்டும் அந்த துணியை வெதுவெதுப்பாக இருக்கும் உப்பு தண்ணீரில் நனைத்து, ஃபிரீசருக்குள் வைத்து ஒரு ஐந்து நிமிடம் ஃப்ரீசரை மூடி வையுங்கள். பிறகு பிரீசரை திறந்து இந்த துணியை வைத்து அந்த ஐஸ் கட்டிகளை எல்லாம் துடைத்து எடுத்தால், ஐஸ் கட்டிகள், கட்டி கட்டியாக அப்படியே உதிர்ந்து உங்கள் கைக்கு வரும். அந்த கட்டிகளை எடுத்து வெளியே போட்டு விடலாம்.

ஐஸ் கட்டிகள் ஃப்ரீசரிலேயே உருகினால்தான் பிரிட்ஜ் முழுவதும் தண்ணீர் சொட்டும்.  நாம் அந்த ஐஸ் கட்டிகளை எடுத்து அப்படியே வெளியே போட்டு விட்டால் பிரிட்ஜினை சுத்தம் செய்யும் வேலையும் நமக்கு மிச்சம் ஆகும். அதேபோல ஃபிரீசரில் நிறைய ஐஸ் கட்டிகள் சேர்ந்திருந்தால் உங்களுடைய பிரிட்ஜிக்கு உள்ளே வைக்கும் பொருட்களும் சீக்கிரம் கெட்டுப் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதிக நேரம் பிரிட்ஜ் ஓடிக்கொண்டே இருக்கும். கரண்ட் பில் அதிகமாவதற்கும் வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

ஆகவே பிரீசரில் ஐஸ் கட்டி சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாரத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையோ இப்படி வெதுவெதுப்பான உப்பு தண்ணீரில், ஒரு காட்டன் துணியை நனைத்து பிரீசரை துடைத்து சுத்தம் செய்து வர ஐஸ் கட்டிகள் அதில் நிரந்தரமாக தாங்காது. மலைபோல் ஐஸ் கட்டிகள் குவியாது. உங்கள் வீட்டில் ஃப்ரீசரில் இருக்கும் ஐஸ் கட்டியை உருக்குவதற்கு இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்க. கொஞ்சம் ஐஸ் கட்டி இருந்தால் சீக்கிரம் உருகி கையோடு ஐஸ் கட்டி சுலபமாக வந்துவிடும்.

இதையும் படிக்கலாமே: என்னங்க எப்படி அரைச்சு வச்சாலும் மருதாணி உங்க கையில செவக்கவே இல்லையா? இனி மருதாணி அரைக்கும் போது இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க வச்ச ஒரு மணி நேரத்திற்கெல்லாம் கை செக்கச் செவேர்ன்னு சிவந்திடும்.

மாதக்கணக்கில் ஃப்ரீசரில் சுத்தம் செய்யாமல், கொஞ்சம் நிறைய ஐஸ் கட்டி இருந்தால் கட்டாயம் கொஞ்சம் கூடுதல் நேரம் எடுக்கும். பத்து நிமிடம் என்பது அரை மணி நேரம் எடுப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. பொறுமையாக இந்த குறிப்பா ட்ரை பண்ணி பாருங்க. மறக்காம ஃபிரிட்ஜ் ஆஃப் பண்ணிட்டு. பயனுள்ள இந்த வீட்டு குறிப்பு தேவை என்பவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -